Tuesday, April 10, 2018

50-இடனறிதல்


                           50-இடனறிதல்

491-தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
   இடங்கண்ட பின்னால் லது.

எந்த செயலாக இருந்தாலும் அதன் முக்கியத்துவம் உணர்ந்து சரியான இடத்தை தேர்வு செய்து செயலில் இறங்க வேண்டும்.இது தேவை.

492-முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
   ஆக்கம் பலவுந் தரும்.

பகைவரை எதிர்க்கும் வலிமை இருப்பினும் தனக்கென அரண்(பாதுகாப்பு)அமைத்து எதிர்ப்பது பயன் கிட்டும்.இது தேவை.
     
493-ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
   போற்றார்கண் போற்றிச் செயின்.

பகைவரை தாக்கும் இடத்தையும் தேர்வு செய்து,தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமை இல்லாதவர்க்கும் வெற்றி கிட்டும்.இது தேவை.

494-எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
   துன்னியார் துன்னிச் செயின்.

இடமறிந்து பகைவர்களை தொடர்ந்து தாக்கினால், வெற்றி பெறுவது சுலபம்.இது தேவை.

495-நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற.

ஏரியில் இருக்கும் வரைதான் முதலைக்கு பலம்,அது நீரைவிட்டு வெளியே வந்தால் எதிரியை எதிர்க்க பலம் இருக்காது.இது தேவை.

496-கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
   நாவாயும் ஓடா நிலத்து.

ஒரு செயலுக்குரிய இடத்தை தேர்வு செய்பவர்,தேர் கடலில் ஓடாது,கப்பல் நிலத்தில் ஓடாது, எனும் உண்மை தெரிந்தவராக இருக்க வேண்டும்.இது தேவை.

497-அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
   எண்ணி யிடத்தாற் செயின்.

சிந்தித்து செயல்படும் இடத்தில்,அஞ்சாமை மட்டுமே துணை,வேறு துணை தேவையில்லை.இது தேவை.

498-சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
   ஊக்கம் அழிந்து விடும்.

சிறிய படையாக இருந்தாலும் ,தனக்குரிய இடத்தை தேர்வு செய்து போரிட்டால் பெரும் படையைக்கூட வென்று விடலாம்.இது தேவை.

499-சிறைநலனுஞ் சீரும் இலரெனினும் மாந்தர்
   உறைநிலத்தோ டொட்ட லரிது.

பகைவர் வாழும் நிலையான இடத்திற்கு சென்று தாக்குவது என்பது சிறப்பான படை இல்லை எனில் தாக்குவது எளிதான செயல் அல்ல.இது தேவை.

500-காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
   வேலாள் முகத்த களிறு.

வேல்  கொண்ட  வீரர்களை தாக்க வல்ல யானை,சேற்றில் சிக்கிக் கொண்டால் நரி கூட கொன்று விடும்.இது தேவை

இடனறிதல்அதிகாரத்தின் பத்து குறட்களும்  பயனுள்ளவை.
                           ******************************
ஒரு நாள் மாலை தூங்கி எழுந்து குளித்துவிட்டு வந்தார் சந்திரசேகரேந்திரர் (சங்கரர்),தூங்கினால் கூட, ‘மடிஅதாவது ஆச்சாரம் போய்விடும் என்பார்.அந்தேரம் பார்த்து,செட்டிநாட்டிலிருந்து அருணாச்சலம் எனும் பெரும் செல்வந்தார், சங்கரரரை காணவந்தார்.மடமே பரபரப்புக்குள்ளானது,காரணம் அவர் வந்தால் ஒரு பெருந்தொகை மடத்துக்கு கிடைக்கும்..தகவல் சொன்னதும்,சங்கரர், ‘அவனை போகச்சொல்,அவன் எதாவது பேசுவான் பதிலுக்கு நானும் தமிழில் பேச வேண்டியிருக்கும்,உனக்குத்தான் தெரியுமே தாத்தாச்சாரி, நீச மொழியில் பேசினால் மறுபடியும் நான் குளிக்க வேண்டும்,அந்த மிலேச்சனை போகச்சொல்,நான் மவுனம் அனுஷ்ட்டிக்கிறேன் என்று சொல்என என்னோடு சமத்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் பெரியவர்,என்கிறார் தாத்தாச்சாரி.

சேதியை சொன்னதும் செட்டியார், ‘அப்படியா ?தெய்வத்தை இன்னிக்கே பார்க்க வேண்டும் என எதிர்பார்ப்போடு வந்தேன் எனக்கு குடுப்பனை இல்லை,சரி ஏதாவது சத்திரத்தில் தங்கிவிட்டு நாளை வருகின்றேன்என தாய்மொழியாம் தமிழில் மகாப்பெரியவரை தெய்வமாக மதித்து ஆசைப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாச்சலம்என்கிறார் தாத்தாச்சாரி
                                ************************************

No comments: