Wednesday, April 25, 2018

83-கூடா நட்பு


                         83- கூடா நட்பு

821-சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
   நேரா நிரந்தவர் நட்பு.

நடிக்கும் நண்பர் என்பவர் எது போன்று எனில் இரும்பை துண்டாக்கும் பட்டடை கல்லுக்கு ஒப்பாவர்.இது தேவை.

822- இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
    மனம்போல வேறு படும்.

இனப்பற்று உள்ளவர் போல் நடிக்கும் நண்பர்,மனம் மாறும் (விலை)மகளிருக்கு ஒப்பாவர்.இது தேவை.

823-பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
   ஆகுதல் மானார்க் கரிது.

பல நல்ல நூல்களை கற்றிருந்த போதிலும் பகையுணர்வோடு பழகும் நண்பர் திருந்துவது நடவா காரியம்.இது தேவை.

824-முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்.

சிரித்துப்பேசி நம்மை சீரழிக்க நினைக்கும் வஞ்சக நண்பரைப் பார்த்து ஒதுங்குதல் வேண்டும்.இது தேவை.

825-மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
   சொல்லினால் தேறற்பாற் றன்று.

பேசுவது ஒன்று,செய்வது வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்த காரியத்திலும் இறங்க இயலாது.இது தேவை.
                              
826- நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப்படும்.

ஒட்டார் (பகைவர்) சொல்லில் நட்டார் (நண்பர்)சொல்போல் இனிமை இருந்தாலும் அந்த சொல்லில் சிறுமை இருந்தே தீரும்.இது தேவை.

827-சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்கவில் வணக்கம்
   தீங்கு குறித்தமை யான்.

பகைவர் பணிந்து பேசுவது என்பது,வளைந்துள்ள வில்லின் குணத்தைப் போன்றது.வளைந்த வில்லினால் தீங்குதான் ஏற்படும்.இது தேவை.

828-தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து.

வணங்கும் கையில் குறுவாளை வைத்து வணங்குதல்போல்,நண்பர்  கண்ணீர் கொட்டி அழும்போது சதி நிறைந்திருக்கும்.இது தேவை.

829-மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுட் சாப்புல்லற் பாற்று.

சிரித்துப்பேசி கெடுக்கும் நண்பர்களிடம் நாமும் சிரித்து பேசி கெடுக்க வேண்டும்.இது குறள் எண் 824 லின் கருத்துக்கு முறணாக உள்ளது.அந்த குறளில் சிரித்துப் பேசி கெடுக்கும் நண்பரை விட்டு விலக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பண்பட்ட புலவருக்கு கருத்துச் சிதைவு இருக்காது.இருக்க கூடாது. இந்த மாறுபட்ட கருத்தை வேரொருவரின் கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் கற்க தகுதியற்றது.

830-பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
   டகநட் பொரீஇ விடல்.

பகைவரிடம் பழகும் காலம் வருமேயானால் சிரித்துப்பேசி பிரிந்துவிட வேண்டும். இது தேவை.

கூடா நட்புஅதிகாரத்தின் 829-ம் குறள் தவிர ஏனைய குறட்கள் கற்க தகுதி வாய்ந்தவை

                       ***********************************
கேள்வி: மதுரை மாவட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யும் நிலை எதை காட்டுகிறது.?

பதில்: கழிப்பறையை சுத்தம் செய்வது ஜப்பானில் அனைத்து மாணவர்களுக்கும் சேவை மனப்பான்மையை கற்றுக் கொடுக்கும் பாடம்போல நடைபெறுகிறது.நம் நாட்டில் குறிப்பிட்ட ஜாதி மாணவர்களை அதைச் செய்யும் படி வற்புறுத்தப்படுவது வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்.

(உண்மை-16-30,2016)
உழைத்து உண்ண வேண்டும்,அப்படி என்றால் எது உழைப்பு?
வியாபாரம் செய்வதா?இல்லை இன்னொருவன் உழைப்பில் கிடைத்த விளை பொருளை பணம் கொடுத்து பெற்று,தனக்கும் பணம் வேண்டும் என உண்பவனுக்கு அதிக விலை வைத்து விற்கும் முயற்சிக்கு பேர் உழைப்பாளி அல்ல,ஏய்த்துப் பிழைப்பது.
அது போலத்தான் கடவுளை,காட்டுகிறேன் என பொய் சொல்லி,கடவுளை வணங்குபவனிடம் காசு பறிக்கும் கயமைத் திட்டம்!
                  **************************************

No comments: