Tuesday, April 3, 2018

43- அறிவுடைமை


                43-அறிவுடைமை

421-அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
   உள்ளழிக்க லாகா அரண்.

அறிவு என்பது, பகை கொண்டு நம்மை அழிப்பவர்களை காக்கும் அரண் போன்றது.எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரண் தான் அறிவு.இது தேவை.

422-சென்ற இடத்தில் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு.

மனம் போன போக்கில் போகாமல் எது நல்லது என அறிந்து அவ்விடத்தில் மனதை செலுத்துவதே அறிவு.இது தேவை .

423-எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இது ஒரு சிறந்த பகுத்தறியும் சிந்தனையைத்  தூண்டும் குறளாகும்.

யார் எது சொன்னாலும் அந்த செய்தியினை மெய்ப்பிக்கும் தன்மைக்கு உட்படுத்துதே அறிவாகும்.கண்ணுக்கு புலப்படாத (தென்படாத அல்லது காண முடியாத)அருவ சிந்தனைகளை நம்பாமல் இருப்பதே சிறந்த அறிவு.இது தேவை.

424-எண்பொருள் வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய
    நுண்பொருள் காண்ப தறிவு.

தான் சொல்ல வந்த கருத்தினை எளிய முறையில் புரியும் படி சொல்வதும்,பிறர் வாய்ச் சொல்லை உருப்பொருள் தத்துவத்திற்கு உட்படுத்துவதே சிறந்த அறிவு.இது தேவை .
                                
425-உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
   கூம்பலும் இல்ல தறிவு.

மலர்தலும் கூம்பலும் இல்லாத நிலைதான் அறிவு.அதாவது உலகத்தின் உயர்(அறிவில்) நிலை உள்ளவரிடம் நட்பாக்கி கொள்ளுதல் சிறந்த அறிவு.(மகிழ்ச்சியும்-மலர்தலும்,வருத்தமும்-கூம்பல் இல்லாத நிலை.இது தேவை.

426-எவ்வ துறைவது உலகம் உலத்தோடு
    அவ்வ துறைவது அறிவு.

ஒழுக்கமுடைமைஅதிகாரத்தின் 140-ம் குறளின் விளக்க பொருளே இதற்கு பொருந்தும்.

427-அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்.

அறிவுடையவர் யார் எனில் எதிர்காலத்தை உணர்ந்து செயல்படுவபவர்.மாறாக எதிர்காலத்தைப் பற்றி உணரத் தெரியாதவர் அறிவிலாதவர்.இது தேவை.

428-அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
   அஞ்சல் அறிவார் தொழில்.

பயம் கொள்ள வேண்டியதைப் பார்த்து பயந்தே ஆகவேண்டும்,மாறாக பயம் கொள்ள வேண்டியதைப் பார்த்து  பயப்படாமல் இருப்பது அறியாமையாகும்.இது தேவை.

429-எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
   அதிர வருவதோர் நோய்.

எதிர்காலத்தை உணர்ந்து செயல்படும் அறிவினார்க்கு, அவர் நடுங்கும்படியான துன்பம் ஏதும் வருவதில்லை.இது தேவை.
                            
 430-அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்.

எதுவுமே இல்லை எனினும் அறிவுடையவர் எல்லாம் தமதாக்குவர்,எல்லாம் இருந்தும் அறிவில்லாதவர்க்கு எதுவுமே சரியாக அமையாது.இது தேவை.

அறிவுடைமைஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
                       *****************************
மனிதன் உண்ணும் உணவு மனித குணங்களை மாற்றியமைக்கின்றன!

மனிதர்களிடையே முரட்டுத்தனத்தை வளர்க்கும் உணவு.இவை,
கேழ்வரகு,வரகு,கம்பு,கிழங்கு வகைகள்,ஆட்டு இறைச்சி,அரிசி.கடலை மற்றும் எள்நெய் போன்றவை

அறிவியல் சிந்தனை வளர்க்கும் உணவுகள்,.இவை,பார்லி,சோயா,பாதாம்,ஆப்பிள்,ஆலிவ் எண்ணை,நெய்,மாட்டுஇறைச்சி,கோதுமை......போன்றவை

                *************************************                



No comments: