91-பெண்வழிச் சேரல்
901-மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
மனைவியின் பேச்சைக்கேட்டு செயல் புரிபவர்கள் மாண்புற மாட்டார்கள்.இது
தேவை.
(குரான்-இசுலாமியர்களின் வேதநூல், அதுவும் இதைத்தான் வலியுறுத்துகிறது(.03.09.2016
தேதியிட்ட TIMES OF INDIA நாளிதழில்) men have greater power of
decision making எனும்
கோணத்தில் AIMPLB எனும் shariah இசுலாமிய அமைப்பு உச்ச நீதி மன்றத்துக்கு ஆணாதிக்க மனப்பான்மையை
வளர்க்கும் விதமாக தெரிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கிறது, ‘பெண்களுக்கு விரைந்து மற்றும்
உறுதிமிக்க முடிவு எடுக்கும் திறன் இயற்கையில் இல்லை’ என்கிறது. AIMPLB-all
india muslim personal law board)
902-பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுந் தரும்.
தன் கடமையை சரியாக செய்யாமல் பெண்ணை நாடி அவள்
பின்னால் சுற்றுபவன் வாழ்வில் வெட்கித் தலைகுனியும் நிலைக்கு தள்ளப்படுவான்.இது தேவை.
903-இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நால்லாருள் நாணுந் தரும்
(நற்குணமில்லா)மனைவியிடம் பணிந்து நடப்பவன் என்றும்
நல்லோர் முன்னிலையில் நாணி நிற்கும் நிலைக்கு ஆளாவான்.இது தேவை .
904-மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
மனைவியோடு குடும்பம் நடத்த அஞ்சும் ஒருவன் வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை.இது தேவை.
905-இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
மனைவிக்கு அஞ்சி வாழ்பவன்,நல்லார்க்கும் நல்லது செய்ய
அஞ்சுவான்.இது தேவை.
906-இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்.
தன் மனைவி பேரழகி என பெருமிதப்பட்டு வாழும் ஒருவன்
ஆண்மையால் வரும் பெருமை(சிறப்பு) இல்லாதவன்.இது
தேவை.
907-பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
மனைவியின் ஏவலை செய்து முடிக்கும் கணவனை விட,நாணமுடைய பெண்ணே
பெருமைக்குரியவள்.இது தேவை.
908-நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்.
ஒரு பெட்டான் அல்லது பெட்டகான் (hen-pecked) (எப்பொழுதும் பெண்களையை
தொழுபவன்) நண்பர்களைப் பற்றியும் கவலை கொள்ளான், நற்பணிகளையும் ஆற்றான். இது தேவை.
909-அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.
ஒரு பெண்ணின் காலைச்சுற்றி அவள் ஏவலுக்கு காத்து
நிற்கும் பெண் பித்தனிடம் அறநெறி சிந்தனையோ அறிவாற்றலையோ காண முடியாது.இது தேவை.
910-எண்சேர்ந்தநெஞ்சத்திடனுடையார்க்கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதமை இல்.
சுய சிந்தனையாளர்களும் நெஞ்சுரமிக்கவர்களும் என்றும் காமாந்திரர்களாக பெண்களையே சுற்றி திரிய
மாட்டார்கள்.இது தேவை .
‘பெண்வழிச் சேரல்’ அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
பெண்களை பெருமை படுத்தும் குறட்களும் உள்ளன.’பெண்வழிச்சேரல்’அதிகாரம் பெண்களை
சிறுமை படுத்துகிறது என கொண்டால் பெண்ணாதிக்க மனம் படைத்தவர்கள் இந்த அதிகாரத்தை
தடைசெய்ய ஏன் கோரவில்லை?
பெண்களின் பால் இருவேறு கருத்துக் கொண்டவர் ஒரே புலவராக இருக்க முடியாது!
குறள் தொகுப்பாளர்கள் இதை ஒருவரே பாடியிருப்பார் என எப்படி ஏற்று செயலபட்டார் என
தெரியவில்லை.
No comments:
Post a Comment