101-நன்றியில் செல்வம்
1001-வைத்தான்வாய்சான்றபெரும்பொருள்அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்.
அளவுக்கு அதிகமா சொத்து சேர்த்து அதை அனுபவிக்க
முடியாமல் இறந்து போகிறவன் செல்வத்தால் என்ன பயன்?இது தேவை.
1002-பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
மருளானாம் மாணப் பிறப்பு.
செல்வத்தை சேர்த்து வைத்துக் கொண்டு ஈயாக்கருமியாக
வாழ்வதால் இழிபிறவி எனும் பேர்தான் மிஞ்சும்.இது தேவை .
1003-ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
புகழோடு வாழ விரும்பாமல் செல்வம் சேர்ப்பதே தன்
குறிக்கோள் என வாழ்பவர் பூமிக்கு பெரும் சுமையே.இது தேவை.
1004-எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
இறந்த பின் எஞ்சி இருப்பது என்ன உள்ளது என எண்ணி
வாழாதவன் யாராலும் விரும்ப படாதவன் ஆவான்.இது தேவை.
1005-கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
கொடுத்து உதவும் செய்கையால் இன்புறும்
இயல்பில்லாதவரிடம் கோடி பணம் இருந்தும் பயனில்லை.இது தேவை.
1006-ஏதம்பெருஞ் செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொண்
றீத லியல்பிலா தான்.
தான் சேர்த்த பணத்தை தகுதியானவர்களுக்கு உதவாமல்
வாழ்பவன் தன்னிடம் உள்ள செல்வத்தை தொற்றிக்கொண்ட நோயாவான்.இது தேவை.இது தேவை.
1007-அற்றார்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
வறியவர்க்கு உதவதா ஒருவனுடைய செல்வம்,யாருக்கும் பயன்படாத அழகி
யொருத்தி முதுமையடைவது போலத்தான்.இது தேவை.
1008-நச்சு படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
அன்பாக பழகாதவனிடம் உள்ள செல்வமும்,ஊர் நடுவே பழுத்து குலுங்கும்
நச்சுப்பழ மரம் போலாகும்.இது தேவை.
1009-அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
அன்பில்லாமல் அறவழிக்கு புறம்பாக சேர்த்த செல்வம்
பிறர் கொள்ளை கொண்டு போய்விடுவர்.இது தேவை.
1010-சீறுடைச் செல்வர் சிறுதுளி மாரி
வறங்கூர்ந்த் தனைய துடைத்து.
சீறும் சிறப்புமாக உள்ள செல்வந்தருக்கு வறுமை
ஏற்பட்டால் சிறுதுளி மழை பொய்த்துவிட்டதற்கு சமம்.
இது தேவை
‘நன்றியில் செல்வம்’ அதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment