Tuesday, April 24, 2018

81-பழைமை


                           81-பழைமை

801-பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
   கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பழமை எனப்படுவது என்ன வென்றால்,நண்பர்கள் பழைய நினைவுகளை மறக்காமல் இருப்பது தான்.இது தேவை.

802-நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
   குப்பாதல் சான்றோர் கடன்.  

நண்பர்கள் உரிமையுடன் பாடுபடுவதே நட்புக்கு உறுப்பாகும்.அதை எண்ணி  பாராட்டுவது சான்றோர்கள் கடமையாகும்.இது தேவை.

803-பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
   செய்தாங் கமையாக் கடை.

பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களுக்கு உடன் படாமல் போயிருந்தால்,அதுவரை பழகிய நட்பு வீணாப்போகும்.இது தேவை.

804-விழைதகையான் வேண்டி இருப்பார் கெழுதகையாற்
   கேளாது நட்டார் செயின்.

பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மை கேளாமலே ஒரு காரியம் செய்தால் நண்பராய் இருப்பவர் அதை ஏற்றுக்கொள்ளவே செய்வார்.இது தேவை.

805-பேதமை ஒன்றோ பெருங்கிழைமை என்றுணர்க
   நோதக்க நட்டார் செயின்.

வருந்தக்கூடிய செயலை நண்பர் செய்துவிட்டால் .அது அறியாமையினாலோ அல்லது உரிமையினாலோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.இது தேவை.
                            
806-எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
      தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

நீண்ட காலமாக பழகியவர்கள் தமக்கு கேடு செய்தால் கூட நட்பை பாதுகாக்கும் பொருட்டு அமைதி காப்பர்.இது தேவை.

807-அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
    வழிவந்த கேண்மை யவர்.

அன்பின் அடிப்படையில் நட்பு கொண்டிருந்தால்,தமக்கு எதிரா நண்பர் அழிவுகாரியத்தை செய்தால் கூட அதற்காக நட்பை முறித்துக்கொள்ள மாட்டார்.இது தேவை .

808-கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
    நாளிழுக்கம் நட்டார் செயின்.

பிறர் கூறியும் நண்பரை குறை காணதவரிடத்தில், நண்பர் தொடர்ந்து தவறாக நடந்து கொண்டால், அவருடன் நட்பு கொள்வதே வீண். இது தேவை.

809-கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
    விடாஅர் விழையும் உலகு.

உரிமையுடன் பழகிய நண்பரை கைவிடாமலிருந்தால் இருந்தால் அவரை உலகம் போற்றும்.இது தேவை.

810-விழையார் விழையப் படுப பழையார்கண்
   பண்பின் தலைப்பிரியா தார்.
பழைமையான நண்பர்கள் தவறு செய்தாலும் அவர்களிடத்தில் அன்பு பாராட்டுபவர்களை பகைவர்களும் பாராட்டுவார்.இது தேவை.
பழைமைஅதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.

No comments: