Saturday, April 21, 2018

69-தூது


                        69-தூது

681-அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
   பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

சிறந்த குணமும் புகழ்வாய்ந்த குடிபிறப்பும் ஒருவருக்கு அமையுமேயானால் வேந்தர் போற்றும் தூதுக்குரிய தகுதிகளாகும்.இது தேவை.

682-அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
    கின்றி யமையாத மூன்று.
                 
அன்பு அறிவு,ஆய்ந்த சொல்வன்மை இம்மூன்றும் ஒரு தூதுவருக்கு அமையவேண்டிய முக்கிய பண்புகளாகும்.இது தேவை.

683-நூலாருள் நூல்வல்லவன் ஆகுதல் வேலாருள்
   வென்றி வினையுரைப்பான் பண்பு.

நூல் பல கற்றவன் தன் திறமையினால் பகை நாட்டரசினிடம்,தன்னாடு வெற்றி பெறும் விதமாக படையின் சிறப்பை சொல்லி தன்னாட்டு வெற்றிக்கு வழிவகுப்பவனே சிறந்த தூதுவனுக்குள்ள  பண்பு.இது தேவை

684-அறிவுரு வாராய்ந்த கல்விஇல் மூன்றன்
    செறிவுடையான் செல்க வினைக்கு.

அறிவு,கம்பீரம்,தேர்ந்த கல்வி இம்மூன்றும் கொண்டவரே தூது செல்லும் பண்புடையவராவார்.இது தேவை.

    685-தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
    நன்றி பயப்பதாந் தூது.

சொல்வதை தொகுத்து சொல்லி,தேவையற்றதை நீக்கி பயனுள்ள செய்தியை கூறுவதே தூதுவனின் பண்பாகும்.இது தேவை.

686-கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
    தக்கது அறிவதால் தூது.

கற்றதைக் கொண்டு பகைவரின் கண்பார்வைக்கு அஞ்சாமல் உரிய நேரத்தில் மனதில் பதியுமாறு உரைப்பவனே தூதுவன். இது தேவை

687-கடனறிந்து காலங் கருதி இடன்றிந்து
   எண்ணி உரைப்பான் தலை.

கடமை உணர்ந்து காலத்தை கருத்தில் கொண்டு இடத்தை தேர்வு செய்து சொல்ல வேண்டியதை சிந்தித்து சொல்பவனே சிறந்த தூதுவன். இது தேவை.

688-தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
   வாய்மை வழியுரைப்பான் பண்பு.

மனத்தூய்மை ,எதிரியினிடம் சிறந்த நட்பு, துணிவு- இம் மூன்றும் கொண்டவனே சிறந்த தூது உரைப்பவன்.இது தேவை.

689-விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
   வாய்சேரா வன்க ணவன்.

தன் வேந்தனின் சொல்லை வடிகட்டி, எதிரி மன்னனிடம் வாய் தவறியும் சொல்லக்கூடாத சொல்லை தவிர்த்து  சிறந்த சொல்லை சொல்பவனே சிறந்த தூதுவன்.இது தேவை.
                          
690-இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
   உறுதி பயப்பதாம் தூது.

தனக்கு மரணமே நிகழும் என தெரிந்தும் சொல்ல வந்த சேதியை அஞ்சாமல் எதிரி அரசனிடம் எடுத்துரைப்பவனே தலைவனுக்கு நம்பிக்கையான சிறந்த தூதுன்.இது தேவை.

தூதுஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
                       ********************************************************
பெண் தெய்வத்திற்கு சிம்மத்தையும் ,ஆண் தெய்வத்திற்கு ரிஷபத்தையும் அருகில் வைத்து சிலை வடிப்பார்கள்.பெண் தெய்வத்தை வணங்குபவர்கள் சத்ரியர்கள் அல்லது காட்டுவாசிகள்.பார்ப்னர்கள் பெண் தெய்வத்தை வணங்க கூடாது,அதனால்தான் அம்மன் கோயில்களில் பாப்ப்பன பூசாரிகள் இருப்பதில்லை.
திருப்பதியில் காளியை சிலைவைத்து வணங்கியதை கண்ணுற்ற பார்ப்னர்கள், ‘இப்படி எல்லாம் பூ-செய்ய கூடாது,அதற்கு மந்திரங்கள் செய்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும் என சொல்லி நீங்கள் வெளியே இருங்கள்,நாங்கள் அம்மனுக்கு (பெண் அல்லவா?) குளிப்பாட்ட வேண்டும்,நீங்கள் பார்க்கக் கூடாது,’ என பழங்குடிகளை வெளியே நிறுத்தி விட்டனர்.
 அப்போது நாங்கள் என்ன செய்வதாம்?
‘கோயிலுக்கு வரும் பக்தர்களை நீங்கள் மொட்டை அடியுங்கள்,அதில் வரும் தட்சணைய நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்,மொட்டை அடித்த பின் உள்ளே அனுப்புங்கள் ,எங்கள் தட்டில் நாங்கள் காசு போடவைக்கின்றோம்.’
இன்றும் அது தான் தொடர்கிறது!
பெண் தெய்வத்தை பார்ப்பனர்கள் பூஜிக்க கூடாதே,அதற்குத்தான் நாளடைவில் ஒரு ஸ்தபதியை வைத்து ஆணாக மாற்றினார்கள்,இன்றும் அந்த சிலைக்குப் பின்னால் பின்னலைக் காணலாம். சிலைக்குமுன் உள்ள முலைகளை வெட்டி எடுத்து விட்டனர்.இப்பொழுது வெங்கடாசலபதி!(ப.272)
                         **************************************

No comments: