Saturday, April 28, 2018

93-கள்ளுண்ணாமை


                         93-கள்ளுண்ணாமை 

921-உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
   கட்காதல் கொண்டொழுகு வார்.

மதுவிற்கு அடிமையான அரசனைப் பார்த்து பகைவரும் அஞ்சமாட்டார், தமக்கும் சிறப்பேதும் இல்லாமல்போகும். இது தேவை.

922-உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
   எண்ணப் படவேண்டா தார்.

சான்றோரின் நட்பு விரும்புபவர்கள் கள்ளுண்ணமாட்டார்கள். இது தேவை.

923-ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
   சான்றோர் முகத்துக் களி.

தன் மகனின் குற்றங்களை மன்னிக்க கூடிய தாய் கூட கள்ளருந்தும் மகனை விரும்பாள்,அவ்வாறு இருக்க சான்றோர் எவ்வாறு சகித்துக்கொள்வர்.அது தேவை

924-நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
   பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

பெண்ணுக்குரிய நாணமெனும் நற்பண்பு போன்ற குணம் ஒரு குடிகாரன் முன்       நிற்காமல்  புறமுதுகிட்டு ஓடும்.இது தேவை.

925-கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
   மெய்யறி யாமை கொளல்.

கையில் உள்ள பொருளை கொடுத்து மெய்மறக்கும் கள்ளை வாங்குவது போன்ற மூடத்தனம் வேறு ஏதுமில்லை.இது தேவை .
                             
926-துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
   நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

இறந்து கிடப்பவரும்,கள்ளுண்பவரும் எப்பொழுதும் ஒரே நிலை எய்துபவரே.இது தேவை.

927-உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
   கள்ளொற்றி கண்சாய் பவர்.

ஊருக்கு தெரியாமல் கள் அருந்தினாலும் ,கண்கள் சிவந்து கண் மூடுவதை ஊரார் பார்த்து எள்ளி நகைப்பர்.இது தேவை.

928-களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
   தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.

குடித்துவிட்டு ஒருவன், நான் மது உண்டதே இல்லைஎன கூறும் பொய் ,அவன் மது உண்ட உண்மையை (வெளிப்படுத்திவிடுவான்) உளறிவிடுவான். இது தேவை.

929-களித்தானை காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
                               
குடித்துவிட்டு இருப்பவனை திருத்த முயற்சிப்பதும்,நீரில் மூழ்கி விட்டவனை தீப்பந்தம் கொண்டு தேட முயற்சிப்பதும்  ஒரே பயனைத்தரும்.இது தேவை.

930-கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
   உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
ஒரு குடிகாரன் குடிக்காமல் இருக்கும் போது ,அவன் எதிரே குடித்துவிட்டு உளரும் கேட்டினைப் பார்த்தாவது அந்த குடிகாரன் திருந்தினா என்ன?.இது தேவை.
கள்ளுண்ணாமைஅதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.

No comments: