Saturday, April 21, 2018

72--அவையறிதல்


                       72- அவை அறிதல்

711-அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
   தொகையறிந் தூய்மை யவர்.

அவையில் பேசப்படும் சொற்களை ஆராய்ந்து ,அங்கே கூடியிருப்போரின் தன்மையை உணர்ந்து பேசக்கூடியவர்கள் அறிஞர்கள்.இது தேவை.

712-இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
    நடைதெரிந்த நன்மை யவர்.

அவையின் தன்மை உணர்ந்து,நேரத்தை உணர்ந்து சொற்களை அறிஞர் பயன்படுத்துவர்.இது தேவை .

713-அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
   வகையறியார் வல்லதுஉம் இல்.

அவையின் தன்மை யறிந்து சொல் வகை தெரியாமல் பேசிக்கொண்டிருப்பவர் சொல் திறமை இல்லாதவர்.இது தேவை.

714-ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
   வான்சுதை வண்ணம் கொளல்.

தன்னிலும் அறிவிற் சிறந்த அறிஞர்கள் முன் தன் நூல்  அறிவும் சொல் வன்மையும் வெளிப்பட பேசவேண்டும்,சுண்ணாம்பு வெண்மையாக தோன்றினாலும் நாளடைவில் அது வெண்மை இழந்துவிடும்,அதுபோல் அறிவற்றவர்கள் அறிவாளிகள் போல் பேசினாலும் அவர்கள் குட்டு வெளிப்பட்டுவிடும்.இது தேவை.

715-நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
   முந்து கிளவாச் செறிவு.

அறிவாளிகள் நிரம்பிய அவையில் தான் முந்திக்கொண்டு பேசாமல் இருப்பதே நல்லது.இது தேவை.

716-ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

அறிவுசார் மக்கள் முன்னிலையில் பேசும் உரையில் பிழை ஏற்படுமானால்,அவர் ஒழுக்க நெறியிலிருந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பாகும்.இது தேவை

717- கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
    சொல்தெரிதல் வல்லார் அகத்து.

குற்றமற்ற சொற்களை தேர்ந்தெடுத்து அவையில் பேசும் போது ,அவர் கற்றரிந்த நூல்களின் பெருமை விளங்கும்.இது தேவை.

718-உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
   பாத்தியுள் நீர்சொறிந் தற்று.

புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் முன்னிலையில் பேசுவது,வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலாகும்.இது தேவை.

71`9-புல்லையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
   நன்குசலச் சொல்லு வார்.

நல்லவர்கள் நிறைந்த அவையில் மனதில் பதியும்படி சொல்லும் வல்லமை பெற்றவர்கள், பொல்லாதவர்கள் இருக்கும் அவையில் பேசாமல் இருப்பதே நல்லது.இது தேவை.

720-அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
   அல்லார்முன் கோட்டி கொளல்.

தன் இனமில்லா(அறிவு சார் இனம்)மக்கள் முன்னிலையில் ஒரு பொருளைப்பற்றி பேசுதல் என்பது சாக்கடையில் உணவுப் பொருளை கொட்டுவது போலாகும்.இது தேவை.

‘அவையறிதல்’ அதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
                        ****************--*************************
‘ஏதோ வானஸ்ய மஹிமா
யதஅன்னேனு
அதிலோகதீ...’

மனிதனுக்கு ,உணவு உயிர் சக்தியை தருகிறது,உயிர் தருவதால் அது  கடவுள் தானே? அப்போ அந்த உணவைத் தவிர்த்து விடுவது(விரதம்) என்பது கடவுளையே நிராகரிப்பது போல் ஆகாதா?

 அப்பேர்ப்பட்ட அன்னதை உற்பத்தி செய்பவனையும்,அன்னத்தை படைப்பவனையும் அன்னத்தை நிராகரிப்பது போல் ஆண்டவனுக்கு விரதம் இருக்க வேண்டும் என்பது ஒரு அவசியத்தேவையா?

விரதம் இருந்து கடவுளை வணங்க வேண்டும் என எந்த வேதங்களிலும், உப நிஷத்துக்களிலும் சொல்லப்டவில்லை.

இது நாத்திக வாதம் போல் உள்ளது என இந்த சிந்தனையை தூண்டும் ஸ்லோகத்தை மூடி மறைத்தார்கள் இன்றய பாப்ப்பனர்கள்.
                    **************************************

No comments: