58-கண்ணோட்டம்
571-கண்ணோட்டம் என்னுங் கழிப்பெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
கண்ணோட்டம்(கருணை)உள்ளம் கொண்ட காரிகை இருப்பதால் தான் இந்த உலகம்
பெருமையுடன் விளங்குகிறது.இது தேவை
572-கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலர்
உண்மை நிலக்குப் பொறை.
கருணை உள்ளம் கொண்டவர்களுக்கு மாறாக இருப்பவர்கள் இந்த பூமிக்கு உண்மையில்
சுமையே!இது தேவை .
573-பண்ணென்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல்; கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்.
கருணை இல்லா கண்ணும் பாடலுடன் பொருந்தா இசையும் பயன் தரா.இது தேவை
574-உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
கண்ணோட்டம் இல்லாத கண்.
ஆளைப்பார்த்தவுடன் முகஸ்த்துதிக்காக இரக்கம் காட்டுவது போல் நடிப்பவன் இரக்கமில்லா
கண்கள் கொண்டவன்!.இது தேவை.
575-கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
புண்ணென் றுணரப் படும்.
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்களே கண்களாகும் ,அஃதில்லையேல் அவை
புண்களாகும்.இது தேவை.
576-மண்ணோ டியைந்த மரத்தணையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
ஒருவருக்கு கண்ணிருந்தும் ,கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர்
மரத்துக்கு ஒப்பானவரே.இது தேவை.
577-கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
கருணையுள்ளம் அற்றவர் கண்ணிருந்தும் கருணை இல்லாதவர் என கருதப்படுவர்.இது தேவை.
578-கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு.
கடமையும் கருணையும் கொண்டோர்க்கு உலகமே உரிமையுடையதாகும்.இது தேவை.
579-ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
அழிக்க நினைப்பவனிடத்திலும் கருணை காட்டுவது உயரிய பண்பாகும்.இது தேவை
நாகரிகம் வேண்டு பவர்.
கருணை உள்ளம் கொண்டவர் தம்மோடு பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் பருகி
மகிழ்வர்.இது தேவை.
‘கண்ணோட்டம்’ அதிகாரத்தின் பத்துகுறட்களும்
பயனுள்ளவை.
*****************************************************************************************
சூத்ரன் என்றால் பொருளென்ன?
சூத்ரன் என்றால் பொருளென்ன?
சூசம்+த்ராதி,சூசம் என்றால் கடின உழைப்பால் ஏற்படும் கஷ்ட்டம்,திராதி எனில் அதை
விரட்டுபவன்.சுருங்கச் சொன்னால், ‘தான் உழைத்து பிறருக்கு சுகம் தருபவன்.’
சூத்ரர்களுக்கு மோட்சம் கிடையாது,பிராமணப் பெண்களுக்கும் மோட்சம் இல்லை என
அபசூத்ரா திஹரனத்தில் ராமானுஜர் கூறியிருக்கின்றார்
பெண் என்பவள் அனுதினமும் அழகாக இருக்க வேண்டும்,எவ்வளவு அழகா இருந்தாலும்
வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடக்க வேண்டும்.இதோ,
பத்னிஹீ பாரினஷ்யஸ்ய ஏசே
பத்னியைவ அனுமதம் நர்வபதி
அதே நேரத்தில், ‘தம்பதிஇவ க்ரஹிபிதா ஜனேசி..’
அதாவது நீ எங்கு சென்றாலும் மனைவியை அழைத்துச் செல் என்பதுவே இதன் பொருள்.
பிரம்ம ஹத்தி-இது என்ன? வேத கற்பனை இதோ,
பிராமணனை கொலை செய்யும் குற்றம்,அதற்கு தண்டணை என்பது,காசியப்ப்பனுக்கு
திதி,அதிதி இரண்டு மனைவிகள்,தொஷ்ட்டா வுக்கும் ரசானாவுக்கும் பிறந்த விசுவ ரூபன்
,ஹவிசை அசுர ர்களுக்கு கொடுத்த விசுவரூபன் எனும் பாப்ப்பன் தலையை கொய்துவிட்டதால்
இந்திரனுக்கு பிரம்மஹத்தி வந்து விடுகிறது.இதை போக்க பெண்களிடத்தில் தஞ்சம்
அடைகிறான்,இதன் விளைவே மாதவிடாய் தோன்றுகிது இதனால் பெண்களை 3 நாள்
தள்ளிவைக்கிறது, வேதம்!
************************************
No comments:
Post a Comment