Thursday, April 19, 2018

64-அமைச்சு


                           64-அமைச்சு

631-கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
   அருவினையும் மாண்ட தமைச்சு.

காலத்தை கணித்து ஆயுதங்களுடன் ஆய்ந்து ஆற்றும் பணி செய்பவனே அமைச்சர்.இது தேவை.

632-வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
   டைந்துடன் மாண்ட தமைச்சு.

துணிவு,குடிகளை காத்தல்,அறநூல் கற்றல்,கற்றவரிடம் கேட்டறிதல்,விடா முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதே அமைச்சு.இது தேவை.

633-பிரித்தலும்,பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
   பொருந்துதலும் வல்ல தமைச்சு.

பகைவர்களை அப்புறப்படுத்துதல், குடிகளை பேணிக்காத்தல்,பிரிந்தவர்கள் திருந்தி வந்தால் சேர்த்துக்கொளல் என்பது அமைச்சர்களுக்குரிய ஆற்றல்.இது தேவை.

634-தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
   சொல்லலும் வல்ல தமைச்சு .

தகுந்த செயலாகவும்,அதனை தெரிவு செய்யும் ஆற்றலும் செயலில் உறுதியும் கொண்டவர் அமைச்சர்.இது தேவை.

635-அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
   திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

 அறச்சிந்தனையும்,சான்றாண்மையும்,சொல்லாற்றலும் கொண்டவரே அரசருக்கு துணை  நிற்கும் சிறந்த அமைச்சர்.இது தேவை.

636-மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
   யாவுள முன்னிற் பவை.

மதிநுட்பமும் நூலறிவும் உள்ளவர்கள் முன்னால் எவரும் சூழ்ச்சி செய்ய முடியாது.இது தேவை.

637-செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
   தியற்கை அறிந்து செயல்.

செயலாற்றல் அறிவு வேறு,பட்டறிவு வேறு நூலறிவால் நுண்ணறிந்து உலக நடைமுறைக்கு ஏற்ப நிறைவேற்றுவதே அமைச்சு.இது தேவை.

638-அறிகொன் றறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்.

அறிவுகெட்ட அரசனாக இருந்தாலும் ,அறங்கெட்ட அரசனாக இருந்தாலும் தன் கடமையான அமைச்சுத்தொழிலை செய்வது அமைச்சரின் கடமையாகும்.இது தேவை.
                             
639-பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்
    எழுபது கோடி உறும்.

தவறுகளையே மூலதனமாக கொண்ட அமைச்சரை அருகில் வைத்திருப்பதை விட 70 கோடி எதிரிகளை எதிரில் இருப்பது எவ்வளவோ மேல்.இது தேவை.

640-முறைப்படச் சூழ்ந்து முடிவிலேயே செய்வர்
   திறப்பா டில்லாஅ தவர்.

திறனில்லா அமைச்சரின் செயல்பாடால் முறையாக தீட்டப்படும் செயல்திட்டங்கள் யாவும் பயனற்று  போகும்.இது தேவை

அமைச்சு அதிகாரத்தின்பத்து குறட்களும் பயனுள்ளவை.
                ******************************************************
வேதத்தில் பெண்களின் நிலை என்ன ?
நஸ்த்ரீ சூத்ர வேதமத்யதாம்....
ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...
பெண்களும் சூத்ரர்களும் ஒன்றுதான் .பிராமண பெண்ணும் ஒரு சூத்ரச்சிதான்.அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது.வேதத்தை தொடக்கூடாது,கண்ணாலும் காணக்கூடாது,காதாலும் கேட்க கூடாது.
பெண்களுக்கு கல்வி வாய்ப்பே கூடாது!
ஸ்த்ரீதாம உபயநயனஸ்தானே
விவாஹம் மநு ரப்ரவீத்...
அதாவது பெண்களுக்கு எந்த வித மந்திர உபநயன சம்ஸ்காரங்கள் கிடையாது.

இந்நாளில் பெண்கள் இப்படியா உள்ளார்கள்?.காலம் மாறியது. 3000-ம் ஆண்டுகளாக இருந்ததை எப்பொழுது மாறியதாம்? பெரியாருக்குப் பின்,
பெண்கள் மாற்றத்தை விரும்பினார்கள், 

ஆனால் ஒரு பெண்ணும் கடவுள் நம்பிக்கை இன்றி வாழ முடியவில்லை!.இல்லாத கடவுளுக்கு உயிரையே விடும் அளவுக்கு மன நிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர்.விரத கட்டுப்பாடுகளால் உடல் நலம் குறைந்து,நீரிழி நோய்களுக்கு ஆளாகி வீணாகிப்போகின்றனர்.இன்றும் சுய சிந்தனை யின்றி வாழ்கின்றனர்.
                               *************************************

No comments: