Thursday, April 19, 2018

62-ஆள்வினை உடைமை


                     62-ஆள்வினை உடைமை

611-அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
   பெருமை முயற்சி தரும்.

நாம் அடைய வேண்டிய பொருள் மிக உன்னதமானதாக இருந்தால் மனம் தளராமல் செய்யும் முயற்சி பெருமை தரும்.இது தேவை.

612-வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
   தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.

ஒரு செயலை செய்ய ஆரம்பித்தால் முடித்துவிட வேண்டும்,அவ்வாறு இல்லாமல் அந்த செயலை விட்டுவிட்டால் இந்த உலகம் உன்னை கைவிட்டு விடும்.இது தேவை .

613-தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
   வேளாண்மை என்னுஞ் செருக்கு.

தொடர் முயற்சி உள்ளவர்களால் மட்டுமே பிறருக்கு உதவுதல் எனும் பணியினை செய்யமுடியும்.இது தேவை.

614-தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
   வாளாண்மை போலக் கெடும்.

முயற்சி யற்றவன் பிறருக்கு உதவுவேன் என கூறுவது, பேடி ஒருவன் தன் கையில் வாளை வைத்துக்கொண்டு வாளாதிருப்பது போல.இது தேவை.

615-இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளீர்
     துன்பம் துடைத்தூன்றும் தூண்.

தன் சுற்றத்தாரின் இன்பம் தான் முதன்மையானது என கருதும் ஒருவன் தன் துன்பத்தை தூண் போல கருதி தாங்கி நிற்பான்.இது தேவை

616-முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
   இன்மை புகுத்தி விடும்.

முயற்சி உடையவனுக்கு செல்வம் பெருகும்,முயலாதவனுக்கு வறுமை எனும் துன்பம் தரும்.இது தேவை.

617- மடியுளால்  மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளான் தாமரையி னாள்.

முயற்சி உடையவன் வாழ்வில் செல்வம் பெருகும்,சோம்பல் நிறைந்தவன் வாழ்வில் வறுமை நிலவும்.

செல்வத்தையும் வறுமையையும் இரண்டு வித குணங்கள் கொண்ட வெவ்வேறு பெண்களாக பாவிப்பது இந்திய மக்களின் பண்பாடு.திருமகள்(தாமரையில் வாசம் செய்யும் பெண்) செல்வம்,மற்றும் மூதேவி (தூங்கிவழியும் பெண்) என்றாலே முயற்சியற்றவள் என்று பெயர்.
புரிதலுக்காக உருவகப்படுத்தப்பட்ட குறள் என எடுத்துக்கொண்டால்,இது தேவை .

618-பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
   ஆள்வினை இன்மை பழி.

உடல் உறுப்புகள் இல்லாதிருப்பது பழியன்று,முயலாமல் இருப்பதே பெரும் பழி.இது தேவை.
                           
619-தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
   மெய்வருத்தக் கூலி தரும்.

மனிதன் தெய்வத்திடம் வேண்டினால் கூட நடக்காம போகலாம் ,(ஒரு சிலர் தெய்வத்தான் என்பதை தெய்வத்தால் என பொருள் கொண்டு ,தெய்வத்தால் முடியாவிட்டாலும் முயற்சியுள்ள மனிதனுக்கு பயன் கிடைக்கும் என எழுதுவர்-தெய்வம் என்பது அருவம்;அருவம் பொருளியல் தன்மை அற்றது,அதனால் மனிதனைப் போன்று தெய்வத்தால் உழைக்க முடியாது!) ஆனால் மனிதன் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கும்.இது தேவை.
                          
620-ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி
   தாழாது உஞற்று பவர்.

விதி,கடவுள், தெய்வம், இறைவன் எல்லாம் ஒன்றே!.இவையெல்லாம் முயற்சியற்ற மனிதனுக்கு (சோம்பேறி)  தடை கற்களாக அமைத்துவிட்டனர், அய்யோக்கியர்கள் ஆதாயம் அடையவே! ஆனால் இவையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஓரம் கட்டப்படலாம் தொடர் முயற்சி யுள்ள மனிதன் முன்னே.

முயற்சி உள்ளவன் மெய்ப்பியலாளன்.கடவுள் சித்தாந்தத்துக்கு எதிரானவன்.இது தேவை.

ஆள்வினை உடைமைஅதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.


No comments: