Saturday, April 28, 2018

95-மருந்து


                          95-மருந்து

941-மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
   வளிமுதலா எண்ணிய மூன்று்.

ஒருவன் உடலில் காற்று,பித்தம்,ஐயப்பகுதி (சிலேட்டுமம்) இவை மூன்றும் கூடினாலோ குறைந்தாலோ நோய்க்கு வழி வகுக்கும்.இது தேவை.

942-மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
   அற்றது போற்றி உணின்.

ஒருவன் தான் உண்ட உணவு செரித்த பின் பிறகு உணவு உண்டால் மருந்து என ஒன்று வேண்டியதில்லை.இது தேவைதான்,
ஆனால் இந்த முடிவு இக்காலத்திற்கு பொருந்தாது. உண்ணும் உணவு எத்தகையது அது பின்னாளில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனும் உடலியல் மற்றும் உணவியல்  அறிவு மனிதர்களுக்கு அவசியமாகிறது.அந்த வகையில் இந்த குறள் தெளிவு ஏற்படுத்த காரணமாகிறது.

943-அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
    பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

முன்னுண்ட உணவு செரித்தபின்னும் அடுத்து உண்ணும் உணவை அளவறிந்து உண்ண வேண்டும்,இதுவே நெடிய நாள் வாழ வழி வகுக்கும். இது தேவை

944-அற்றது அறிந்து கடைப்பிடி்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து.

முன்னுண்ட உணவு செரித்த பின் அடுத்த வேளை உணவு உண்டாலும் அவை உடலுக்கு ஒத்துவருமா உன அறிந்து உண்ண வேண்டும்.(இங்கே உடலியல் அறிவு வேண்டப்படுகிறது.)இது தேவை.

945-மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
   ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

ஒருவன் உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவை உண்டாலே உயிருக்கு ஆபத்தில்லை.(இது அருமையான உடலியல் சிந்தனை ).இது தேவை.

946-இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்.

குறைந்த அளவு  உணவு உண்பவனிடத்தில் இன்பம் நிலைத்து நிற்கும்.பெருந்தீனி தின்பவனிடம் நோய் நீங்காமல் நிலை கொள்ளும்.இது தேவை.

947-தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
   நோயளவின்றிப் படும்.

பசியின்  அளவு அதிகம் உள்ளது என்பதாலே அளவின்றி உண்டால் நோய் உடலில் நிலைகொள்ளும்.இது தேவை.

948-நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.

உடலில் நோய்கான காரணங்களை அறிந்து அதை தணிக்கும் விதமாக மருத்துவர் உடலுக்கு பொருந்தும் சிகிச்சை அளிக்க வேண்டும.இது தேவை.

                        
949-உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல்.

நோயின் தன்மை அறிந்து, வயதுக்கேற்ற மருத்துவம் அறிந்து, உடலுக்கு மருந்து அளிக்கப்பபடவேண்டும்.இது தேவை.

950-உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
   அப்பால் நாற்கூற்றே மருந்து.

நோயுற்றவன்,மருத்துவர்,மருந்து, மருந்து அளிப்பவர் என நான்கு வகை கொண்டதே மருத்துவ துறையாகும். இது தேவை.
மருந்துஅதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
       *************************************************************************************************************
ஒழுங்காக உழைத்துக் கொண்டிருந்தவனை சகுணம் பார்,அதிர்ஷ்டம் கிடைக்கும் என உழைப்பாளியை அய்யோக்கியனிடம் அடகு வைத்த கதை இதோ,

‘இரண்டு காக்கைகள் ஒன்றாக இருப்பதை பார்த்தால் என்னிடம் வந்து சொல்’ என ஒரு அரசன் தன் ஏவலாளிடம் பணித்தான்,அப்படி பார்தால் அதிர்ஷ்டம் வரும் என ஒரு ஜோசியன் சொன்னதாக அவனுக்கு தகவல்.
இரண்டு காகங்களைப் பார்த்த ஏவலாளுக்கு ஏக சந்தோஷம்,மன்னனின் கட்டளையை நிறைவேற்றப் போகிறோம் என்று,கேள்விப்பட்ட மன்னன் காகங்களைக் காணவந்தான்,அதற்குள் ஒன்று ஓடிவிட்டது, கோபமடைந்த மன்னன்,ஏவலாளியின் தலையை கொய்தான்.எங்கே அதிர்ஷ்ட்டம்?இரண்டு காகங்களை கண்டவனுக்கு என்ன கதி நேர்ந்தது?
(மின்னல் தமிழ்மணி இதழில் முனைவர் இரா.மோகன்)
                  **************************************

   

No comments: