Thursday, March 8, 2018

7-மக்கட் பேறு



                             
                     7- மக்கட் பேறு

61-பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற

அறிவார்ந்த மக்கள் பெறுவதில் இருக்கும் புகழ் வேறெதிலும் இல்லை-இது தேவை

62-எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிப்பிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.

ஒருவர் பண்புடைய மக்களைப் பெற்றால் எழுபிறப்பும் தீயவை தீண்டாது-இது உருப்பொருள் தத்துவத்திற்கு மாறானாது.இந்த குறள் தேவையற்றது.

63-தம்பொருள் எண்பதம் மக்கள் அவர்பொருள்
     தத்தம் வினையான் வரும்

ஒருவருக்கு தாம் பெற்ற மக்களே அவர்களுக்கு செல்வம்,ஆனால் அவர் பெற்ற மக்களின் செல்வம் அவரவர் செயல்களால் வரக்கூடியது.இது உண்மை

64-அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்

தம் குழந்தைகளின் கரங்கள் பட்டு தெரித்த கூழ் அல்லது மிச்சப்பட்ட உணவை அமுதம்போல் பருகுவர்.இது உண்மை

65-மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
     சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
குழந்தைகள், தமது மெய்தீண்டினால் அதுவே உடலுக்கு இன்பம் தரக்கூடியது,அதே குழந்தைகள் சொல்லும் சொல் காதுகளுக்கு இன்பம் தரக்கூடியவை.இது உண்மை.
                              
66-குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
     மழலைச்சொல் கேளா தவர்.

இசைக்ருவிகள் மீட்டலால் வரும் ஓசை காதுகளுக்கு இன்பம் தரக்கூடியது.அதைவிட இன்பம் தரக்கூடியவை தம் மக்களின் மழலைச் சொல் .இது உண்மை.

67-தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.

தம் மக்களை அறிஞர் அவையில் ஒரு அறிவுசார் மக்களாக உலாவரச் செய்வது ஒரு தந்தையின் கடமையாகும்-இது தேவை.

68-தம்மின்தம் மக்கள்  அறிவுடைமை மாநிலத்து
     மன்னுயிர்க் கெல்லாம் இனிது

பெற்றவர்களைக்காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால் ,அது பெற்றோருக்கு மட்டுமல்ல உலகில் வாழும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.இது தேவை

69-ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்

தன் பெற்ற பிள்ளையை ஊரார் பாராட்டும் போது,பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட அதிகம் மகிழ்ச்சியடைவாள் தாய்.இது உண்மை.

70-மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
     என்நோற்றான் கொல்லெனும் சொல்
மகனால் தந்தைக்கு பெருமை எது என்றால் ஊரார், இவனைப் பிள்ளையாக பெற்றது இவன் தந்தை பெற்ற பேறு என புகழப்படும் போதுதான்.இது உண்மை.
இந்த மக்கட்பேறு அதிகாரத்தில் 62-ம் குறள் கற்க தகுதியற்றது

No comments: