38- ஊழ்
371-ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி.
மனிதனுக்கு வரும் செல்வமும்,அவனைவிட்டு செல்வம் விலகுவதும் எல்லாம்
விதிப்படியே(ஊழினால் வந்த/வரும் வினை)இந்த குறள் மனிதர்களிடையே முயற்சி இன்மையை
உருவாக்கும்.எல்லாம் விதிப்படி எனில் கடவுளை ஏன் வணங்க வேண்டும்?யார் பிழைக்க இந்த
கடவுள் உருவாக்கப்பட்டது?மாணவர்கள் சிந்தனையை தூண்டும் விதமாக அமைந்துள்ள
இக்குறள் தேவை.
372-பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.
மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் விதியே காரணம்.இது மெய்ப்பித்தல்
கொள்கைக்கு முரணானது.மாணவர்கள் கற்க தகுதியற்றது!
373-நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
எவ்வளவுதான் நுண்ணறிவு வளர்க்க வேண்டி நூல்பல கற்றாலும்,அவருக்கு உள்ள
உண்மையறிவே மிஞ்சும்.இது உண்மை .
374-இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
அறிவுடையவர்களும்,திருவுடையவர்களும் வெவ்வேறு நிலை கொண்ட உலகம் இது.இது உண்மை,தேவை.
375-நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்லவஞ் செயற்கு.
நாம் பணத்தை பெறுக்க எடுக்கும் முயற்சியில் லாபம் உண்டாகும் நட்டமும்
உண்டாகும் .இது இயல்பாய் வருவது.இது உண்மை.
376-பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
ஒருவர் தன்னிடம் உள்ள செல்வத்தை வலிய காத்தாலும்,தம்மை விட்டு போவதை அவரால்
தடுக்க முடியாது,அதே சமயம் தனக்கு இருப்பதே போது மென்றாலும் செல்வம் வலிய வந்து
சேரும்.எல்லாம் இயற்கையே .இது உண்மை.
377-வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குத் துய்த்த
லரிது.
கோடி கோடியாக பொருள் சேர்த்தாலும் அவற்றை தாம் விரும்பியபடி அனுபவிக்க
முடியாது,எல்லாம்
இயற்கையே.!இது உண்மை
378-துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
துன்பங்களை அனுபவிக்கவே ஏழைகள் தோன்றுகின்றனர்.இல்லையேல் அவர்கள் துறவியாக
போயிருப்பர். (ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பம் நடத்த நினைக்கும் போது துன்பங்களை
அனுபவிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி)இது தேவை
379-நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
நல்லது வரும்போது மகிழ்ச்சியடையும் ஒருவர்,அல்லது நிகழும்போது மனம்
கலங்குவது ஏன்?இது .தேவை.(தீதும் நன்றும் பிறர் தர வாரா)
380-ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் தூறும்.
மதி யூகம் மூலம் விதியை ஓரளவே வெல்ல முடியும்.விதியை வெல்ல வேறு வழி
தேடினாலும் அங்கேயும் விதி முந்தும். இது உண்மை.
‘ஊழ்’ அதிகாரத்தின் பத்து குறட்களும் மெய்ப்பித்தல் தன்மைக்கு உட்படுத்த
முடியாது,இருப்பினும்
மனிதனின் மதி யூகத்தால் புது புது வழியை கண்டாலும் நினைத்தபடி எதுவும்
நடப்பதில்லை.இது நடைமுறை சாத்தியமே ஆனாலும் குறள் எண் 372 முற்றிலும் மெய்பிக்க
முடியாது,
அந்த ஒரு குறள் மட்டும் தவிர்க்கலாம்.
மற்ற 9-குறட்களும் மன அமைதிக்கு வழி வகுக்கும்.
No comments:
Post a Comment