18- வெஃகாமை
171-நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
நியாயமின்றி பிறர் பொருளை ஒருவன் கவர விரும்பினால்,அவன் குடியும் கெடும்
குற்றமும் வந்து சேரும்.இது தேவை.
172-படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
நடு நிலை தவறுவது வெட்கப்படக்கூடியது என நினைப்பவர் தனக்கு ஒரு பயன்
கிடைக்கும் என்பதற்காக பழிக்கப்படும் செயலில் ஈடுபட மாட்டார்.இது தேவை.
173-சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மாற்றின்பம் வேண்டு பவர்.
ஒருவர் சிற்றின்பத்தில் உடனடி பயன் கிடைக்கிறது என்பதற்காக ,அவர் அறவழி தவறி நடக்க
மாட்டார்-இது தேவை.
174-இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
புலனடக்கம் உள்ளவர் வறுமையில் வாடும் நிலையில்கூட பிறர் பொருளை கவர
விரும்ப மாட்டார்.-இது தேவை.
175-அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
பகுத்தறிவாளர் என சொல்லிக் கொள்பவர், அறவழி தவறி பிறருடைய
பொருளுக்கு ஆசைபடுபவர், அவருக்கு நுண்ணிய அறிவு இருந்து தான் என்ன பயன்? இது தேவை.
176அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூயக் கெடும்.
அருளை(கடவுளிடம் பெருவது) அதனை அடைவதற்கு, தவறிப்போய்ப் பிறர் பொருளை
விரும்பி பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.
கடவுள் அருளைப் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள்? கடவுளிடம் அருள் பெறாதவர்கள்
எப்படி செயல்படுவார்கள் என எங்கும் விவரிக்கப்படவில்லை. மாறாக கடவுள் யாருக்கு
அருள் வழங்குவார்?சாகா வரம் பெற்றவர்தானே, கடவுள் அருள் பெற்றவர் என பொருள்
கொள்ளவேண்டும்.அப்படியானால் உலகில் யாரும் சாகாவரம் பெற்றவரை இதுவரை உலகம்
காணவில்லையே!
கடவள் வாழ்ந்தார் என புராணங்களில் நாம் படித்தாலும் அவர் உருவமற்று
காணாமல் போனது ஏன்?கடவுளுக்கே கடவுள் அருள் இல்லையா? இந்த குறள் உருப்பொருள் தத்துவத்திற்கு
மாறானது.எனவே இந்த குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.
177-வேண்டற்க வெக்கியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
பிறர் பொருளை கவர்ந்து(திருடி பயன் பெறுவது)ஒருவன் வளம்பெற விரும்பினால்
அது அவனுக்கு பயனளிக்காது.இது தேவை.
178-அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
தன் செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமானால் ,பிறர் பொருளையும் தானே
அடையாமல் இருக்க வேண்டும்.இது தேவை.
179-அறன்றிந்து வெக்கா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.
அறநெறி உணர்ந்த அறிஞர் ,அவரின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.இது தேவை.
180-இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.
பின் விளைவுகளைப்பற்றி சிந்திக்காமல் பிறர் பொருளை கவர நினைப்பவர்கள்
அழிவர்,
மாறாக விருப்பம் கொள்ளாமலிருந்தால் வாழ்க்கையில் நிலைத்த வெற்றி கிட்டும்.இது தேவை
இந்த ‘வெஃகாமை’ அதிகாரத்தில் குறள் எண் 176
மட்டும் மாணவர்கள் கற்கும் தகுதி இழந்து விட்டது.
****************************************************
மனிதர்கள் ஆரவார ஆர்பாட்டங்களில் ஆர்வமுள்ளவர்கள்! இது மனிதர்களிடையே
இருக்கும் மிருக குணம்!இத்தகைய குணங்களை சீர் செய்யவே மக்களிடையே கடவுள் சிந்தனைகள்
வளர்க்கப்பட்டது.ஆனால் இன்று நாகரிகம் எனும் பெயரில் கடாடுமிராண்டித்தனமான
விளையாட்டுகளை உழைப்பாளி இனம் விரும்புகிறது.திருவிழா என்றாலே மது.சூது,வானவேடிக்கை,வெடி சத்தம் கேட்க
துடிக்கும் குழந்தைத்தனமான குணம், காதை கிழிக்கும் ஒலிப்பான்கள்......இன்னும் எத்தனையோ
சீரழிவுகள் மக்களை மயக்குகிறது.!
இதில் இடைத்தரகர்களாக வியாபாரிகள்,ஆன்மிக வியாபாரிகள் இவர்களுக்கு பணத்தை
குவிக்கும் நோக்கமே தலைவிரித்தாடுகிறது.
பட்டாசு ஆலைகளை தடை செய்துவிட்டு ,அந்த ஊழியர்களுக்கு அரசு வேலை வழங்கலாமே!
**************************************
No comments:
Post a Comment