Wednesday, March 14, 2018

17-அழுக்காறாமை



                         17-அழுக்காறாமை

161-ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
     அழுக்காறு இலாத இயல்பு.

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பை தனக்கே உரிய ஒழுக்க நெறியாக கொண்டு வாழ வேண்டும் -இது தேவை.

162-விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
     அழுக்காற்றின் அன்மை பெறின்.

யாரிடமும் பொறாமை கொள்ளாத தன்மை ஒருவருக்கு அமையுமேயானால் அதற்கு மேலான பேறு அவறுக்கு வேறு எதுவுமில்லை.இது தேவை.

163-அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கும்
     பேணா தழுக்கறுப் பான்.

அறச்சிந்தனையும் ஆக்கமும் விரும்பாதவன் ,பிறர் பெருமயை பேச விரும்பாதவன் ஆகும்-இது தேவை.

164-அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
     ஏதம் படுபாக் கறிந்து.

பொறாமையால் தீச்செயல் புரிந்தால் ,துன்பம் ஏற்படும் என அறிந்து தீச்செயல் புரியமாட்டார்கள்.-இது தேவை

165-அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
     வழுக்கியுங் கேடீன் பது.

பொறாமை குணம் கொண்டோர்க்கு அவர்களை அழிக்க அந்த குணம் ஒன்றே போதும்,வேறு பகையே வேண்டாம்.இது தேவை.
                              
166-கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றும் உடுப்பதூஉம்
     உண்பதூஉம் மின்றிக் கெடும்.

பிறரால் உதவி பெறும் ஒருவனைப்பார்த்து ,மற்றவன் பொறாமை கொண்டால் அவன் மட்டுமன்றி அவனை சூழ்ந்துள்ளவரையும் உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் ஆக்கிவிடும்.இது தேவை

167-அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவன்
     தவ்வையைக் காட்டி விடும் .

அழுக்காறு உடையவனைக் கண்டு அக்கா தன் தங்கையைக் காட்டி அகன்றுவிடுவாள்.ஒருவனுக்கு வளம் பெறுக்கும் தன்மையுடைய அக்கா(செல்வ மகள்)பொறாமை குணம் கொண்டவனுக்கு தன் தங்கை(தரித்திரம் பிடித்தவள்)யை காட்டிவிட்டு அகன்று விடுவாள்.

இங்கே செல்வத்ததையும் தரித்திரத்தையும் அக்கா தங்கைகளாக உருவகப்படுத்தியதற்கு,அத்துணை புலவர்களும் புராணத்தில் வரும் லட்சுமி,மூதேவியை  மேற்கோள் காட்டியிருப்பது.இயற்கையிலேயே அக்கா தங்கைகளுக்கு உண்டான பொறாமை குணங்களாக மேற்கோள் கொள்ளலாம்.சீதேவி-மூதேவி என பொருள் கொள்ள வேண்டியதில்லை.இது மாணவரகள் கற்கத் தேவையில்லை

168-அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
     தீயுழி உய்த்து விடும் .

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தை சிதைத்து தீய வழியில் விட்டுவிடும்-இது தேவை .                                                           

169-அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
     கேடும் நினைக்கப் படும்

பொறாமை கொண்டவனின் ஆக்கமும்(செல்வ பெருக்கம்)பொறாமை இல்லாதவனுடைய கேடும் ஆய்வுக்குரியது.இது தேவை.

170-அழுக்கற்  றகன்றாரும் இல்லையஃதில்லர்
     பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை.பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோறும் இல்லை.இது தேவை.

இந்த அழுக்காறாமை அதிகாரத்தில் 167-ம் குறள் உருப்பொருள் தத்துவத்திற்கு மாறான உவமானப் பொருளாக அருவ சிந்தனையை சுட்டி யிருப்பதால் இந்த குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது. 

                        **************************************
           உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன?
உணவுப் பொருளை வீணாக்குபவனையும்,உணவுப் பொருளை பதுக்கி அதிக விலைக்கு விற்பவனையும் தண்டிக்க கொண்டுவரப்படும் சட்டம்.!
நல்ல சட்டம்.ஆனால் கோயில்களில்,108,1008 ப1ல்குடங்களை கற்சிலைகள் மேல் ஊற்றுவதும்,108,1008 தேங்காய்களை  நடுத்தெருவில் போட்டு உடைப்பதும் உணவுப் பொருட்களை வீணாக்கும் செயல்களல்லவா?
ஆனால்,இதற்கு காரணமானவர்களையும்,இந்த சடங்குகளை செய்யத் தூண்டுபவர்களையும் தண்டிக்கப் படுவதில்லையே, ஏன்?                       
                                            ************************************

No comments: