உ.வே.சா.
ஆதினங்களால் பனை ஓலை இலக்கிங்களாகவே நாம் பார்த்து பாதுகாத்து
பழக்கப்பட்டுப்போன இலக்கியங்களை ,திரு உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் அரிய
முயற்சியால் அச்சுலேற்றப்பட்டு விட்டது.
அவையனைத்தும் சாதாரணமாக அச்சிலேற்றப்பட்டு விடவில்லை,இன்று நாம் காணும்
தொல்காப்பியம்
திருக்குறள்
நாலடியார்
திரி கடுகம்
கலித்தொகை
புறநானூறு
அகநானூறு
குருந்தொகை
பழமொழி-400
போன்ற இலக்கியங்களில் இறைவழி பாடு என முன்னுரை தீட்டப்பட்டுள்ளது.இதற்கு
உவேசா மெனக்கெடுகிறார்.
இதை பின்பற்றி பின்னாளில் தனிநபர் பாடல் தொகுப்புகளான
‘மனோன் மணியம்’ இயற்றிய திரு சுந்தரம் பிள்ளை,பாரதியார்,மற்றும் பாரதி தாசன் போன்றோர்
தங்கள் பாடல் தொகுப்புகளுக்கு முன்னுரையாக
கடவுள் வாழத்துக்கள் இடம்பெற வேண்டும் எனும் கட்டாயத்தில் இருந்தனர்,
இப்பொழுதும் நம் காலத்து கம்பனாக விளங்கும் முத்தமிழ் புலவரும்,‘இளைய பல்லவன்
கருணாகரத் தொண்டைமான்’ எனும் அரிய காப்பியத்தை படைத்தவருமான திரு செம்மங்குடி துரையரசனார்
அவர்களும் தன் காப்பியத்தின் முன்னே பாயிரம் எனும் பெயரில் இறைவழி பாட்டை
புகுத்துகிறார்.
இன்றய செயதிகளில்(27.04.2016) தமிழக உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு ஒரு
ஆணை பிறப்பித்துள்ளது,அதாவது பள்ளி மாணவர்களுக்கான 6-லிருந்து 12-ம் வகுப்புவரை திருக்குறளை ஒரு
தனிப்பாடமாகவே வைக்க வேண்டும்!
பதின்ம வயதில் மாணவர்கள் செய்யுள் வகைகளை மனப்பாடம் மட்டுமே செய்ய
முடியும்!.அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வராது.
திருக்குறளை சொல்லித்தரும் ஆசிரியர்களின் மனப்பான்மைக்கு ஏற்றவாறு குறளின்
அர்த்தங்கள் மாணவர்களுக்கு மாணவர்கள் வேறுபடும்!
மாணவர்களின் வயது கூடகூட அறிவாற்றல் பெருகிக்கொண்டே வரும்.வரவேண்டும்.அதுதான்
சுய சிந்தனை!மீண்டும் அத்தகைய அறச்சிந்தனை தூண்டும் விதமாக இளங்கலை மற்றும் முது
கலையில் திருக்குறளை பாடத்திட்டங்களாக அமைக்க வேண்டும்.பதின்ம வயதில் மனப்பாடம்
செய்த அதே குறட்களுக்கு அப்பொழுது அர்த்தங்கள் புரியும்!
ஆதலால்
மேலே குறிக்கப்பட்டுள்ள முதல் 10 குறளில் வரும் ஆதிபகவன் போன்ற
வார்த்தைகளுக்கு அறம் தவறா அன்புள்ளம் கொண்டவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களை
மாணவர்கள் மதிக்கும் பொருட்டு பள்ளிக் கல்வி பாடத்திட்டங்கள் மாற்றப்படவேண்டும்.
1330 குறட்களும் 130 அதிகாரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு அதிகாரமும்
எதாவது பொருள் கொண்ட தலைப்புகளில் வகைப் படுத்தப்பட்டிருக்கும்.
முதல் அதிகாரத் தலைப்பு கடவுள் வழிபடு அதிகாரம் அல்லது வழிப்பாடு
அதிகாரம் என்கிறார்கள் மனதில் மன ஒழுக்கம் பதியவைப்பது மிகமிக அவசியம்.நல்ல குடும்பம்,நல்ல சமுதாயம் அமைய
இது வழி கோலும்.
முதல் குறள்,
1-அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
மனிதனை நாகரிகப்படுத்த உதவிய முதல் கருவி,எழுத்து!. மொழிக்கு உருவம்
கொடுத்து மக்களிடையே பரப்ப உதவிய,
கல்வெட்டு,
செப்புத் தகடு,
பனை ஓலை,பின்னாளில் நாம் பயன் படுத்தும்
காகிதம் இது உண்மை.
2-கற்றதனால் ஆயபயனென் கொல்?
வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்?
வாலறிவன்-இதற்கு சரியான பொருள் கூறும் தற்கால தமிழ் அகராதி எதுவும்
இல்லை.இருப்பினும் தமிழ் மாந்தர்கள் ஒருசாரார் இறைவனுக்கு ஒப்பாக பொருள் கொண்டு இக்குறளுக்கு
பொருள் எழுதி உள்ளனர். குறளில் இது இரண்டாம் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மற்றோர் பிரிவினர் நம்மில் படித்த பண்பட்ட மாமனிதர் எனும் பொருளில்
இக்குறளுக்கு பொருளெழுயுள்ளனர்;.நாமும் அவ்வாறே பொருள் கொண்டு தற்கால மக்களிடையே
உலாவரும் அப்படி பட்ட மனிதர்கள்
மதிக்கப்படுகின்றனரா என்பதை நாம் அலசுவோம்.படித்தவர்கள் (கற்றவர்கள்) இது தேவை
3-மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
3-மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலரில் வாழும் இறைவனை தொழுபவன் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ்வர்-இது
பொய். ஆதாரமற்றது.விலங்குகள் இறைவனை வழங்குவதில்லை!அவைகள் உயிர்வாழ என்ன
சாப்பிட்டால் உயிர்வாழலாம் என்பது அவைகளின் உள்ளுணர்வு(Instinct)
அதுபோல ஆதிகால மனிதன் எதை உண்டால் உடலில் என்ன மாற்றம் வரும் என உணரந்து
உணவுவுகளை தேடி உண்டனர்,பச்சை காய்கறிகளையும்,மாமிசங்களையும் சுவை கூட்டும் விதமாக உண்ண
ஆரம்பித்தானர்.இன்றும் அதே நிலைதான்.எனவே மலர்மேல் இறைவன் வாழ்வதாக புலவர்களின்
கற்பனைக்கு உட்பட்டது.மெய்ப்பியல் தன்மைக்கு மாறானது மாணவர்கள் கற்க தகுதி
அற்றது
4-வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பு அற்ற வாழ்க்கை பின் பற்றும் மனிதர்கட்கு பொரிய அளவில்
துன்பங்கள் வந்து சேராது .இது உண்மை.
5-இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார்
மாட்டு.
இறைவனை புரிந்து பூஜிப்பதால் நன்மையும் தீமையும் சம அளவில் எதிர் கொள்வர்.
இது பொய்,தேவையற்றது
6-பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
இங்கு ஐந்தவித்தான் எனகூறப்படும் வார்த்தைக்கு ஐம்புலன்களை அடக்கியவன் எனப்பொருள்
கொள்ளப்படுகிறது.இது போன்ற மனிதர்கள் தூய்மையானவர்கள் என மக்களிடையே
போற்றப்படுகிறது! வெய்யிலாளி வர்கத்தினருக்கு இந்த குறள் பயன் படாது! எனினும்
இதில் கூறப்படும் செய்தி உண்மை!
7-தன்குவமை இல்லாத்தான் தாள்சேர்ந்தார்க்
கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது
தன்னிகரில்லா மாமனிதர்களின் அறிவுரைகளை பின்பற்றினால் மனதில் கவலை நீங்கி
வாழலாம்-இது உண்மை!
8-அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்
கல்லால் பிறவாழி நீத்தல்
அரிது.
அந்தணன் என்பவன் அறவழியில் சென்றாலும், செல்லாவிட்டாலும் அவன் தாள்
படிவதால் (வெய்யிலாளி) உழைப்பாளி வாழ்க்கையின் தரம் உயரப்போவதில்லை. இது தேவையற்றது.
9-கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத்தலை.
இக் குறளில் எண்குணத்தான் என ஒரு ஒற்றை சொல்
குறிப்பிடப்பட்டிருக்கும்.எண்குணத்தை கொண்டவன் இறைவனுக்கு சம்மானவன் எனும்
கொள்ளவேண்டும் என எனது நண்பர் மூலம் ஒரு தமிழாசிரியர் (திரு என். பாஸ்க்கர்)
அவர்களை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன்.அவர் தந்த விளக்கம் கீழே,
ஒரு மனிதனாகப்பட்டவன்,
அனந்த ஞானம்
அனந்த தரிசனம்
அனந்த தைரியம்
அனந்த இன்பம்,
இந்த நான்கு குணங்களையும் ஒரு சேரப்பெறும் போது அவன் பிறவி முடிவு நிலை
பெறுகிறது.அப்பொழுது அவன் மேலும் நான்கு குணங்களை பெற்றவனாகிறான்,அதாவது
ஆயுள்,நாமம்,கோத்திரம்
இவைகளெல்லாம் மனிதகுல வழி காட்டிகள்.
அந்தராயம்
இந்நிலை கண்ட மனிதர்கள் தெய்வங்களாவர். அவர்களில் நாம் நினைவு கூறத் தகுந்தவர்கள்
ஏராளம்.அவற்றுள் முதன்மையானவர்கள்,
மகாவீர ஜெயின்,
புத்தர்,
இயேசு,
முகமது நபி,
ராமகிருட்ண பரம அம்சர்,
விவேகநந்தர்,
ராமலிங்க அடிகள் போன்றோர்.
எண்குணத்தான் எனும் சொல்லுக்கு திரு பரிமேலழகர் தன் திருக்குறள் உரையில்
1-தன்வயத்தன் ஆதல்
2-தூய உடம்பினன் ஆதல்
3-இயற்கை உணர்வினன் ஆதல்
4-முற்றும் உணர்தல்
5-இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
6-பேரருள் உடைமை
7-முடிவு இல் ஆற்றல் உடைமை
8-வரம்பு இல் இன்பம் உடைமை
என மனிதனின் உணர்வுகளுக்கு எல்லைக்கோடுகள் வகுக்கப்பட்டன.மனிதர்களை
நாகரிகப்படுத்த இது தேவை
10-பிறவிப் பெறுங்கடல் நீந்துவர்
நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இப்பொழுதெல்லாம் இறந்து போகிறவர்களை, ‘இறைவனடி சேர்ந்தார்’ என அச்சிட்டு
வருத்தம் தெரிவிக்கின்றனர்.இறைவனடி
சேர்ந்துவிட்டாலே, பிறவிப்பயன் முடிந்து விட்டது என்று தானே பொருள்?பின் வருத்தம் ஏன்?
இதுவரை இறந்துபோனவன் பிறந்ததாகவே வரலாறு இல்லை,பிறந்து பின் மண்ணில்
வாழ்ந்து கொண்டிருப்பவனும் முற்பிறவியில் தான் என்னவாக இருந்தோம் என எண்ணத்
தோன்றவில்லை! அப்போ முற்பிறவி என்பது புலவர்களின் பொய்தானே? –இது பொய்,தேவையற்றது
மொத்தத்தில் 10-ம் குறள் பொய்.மற்ற 9 குறட்களும் மன ஒழுக்கத்தை கடைபிடிக்க
வேண்டிய பயிற்சிகளாக ஏற்றுக்கொள்ளலாம்.
3,5,8 மற்றும் 10 ஆகிய 4 குறட்களும்
கற்க தகுதியற்றவை
குறளின் முதல் 10 குறளில்-
ஆதி பகவன்,
வாலறிவன்,
மலர்மிசை ஏகினான்,
இலானடி,
இறைவன்,(5)
ஐந்தவித்தான்,
தன்குவமை இல்லாதான்,
அறவாழி,
எண்குணத்தான்,
இறைவன்(10)- போன்ற சொற்கள்
10 குறளிலும் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் 10- வார்த்தைகளுக்கும், கடவுள் எனும்
பொருளில் மெய்ப்பியல் விரும்பிகள் அல்லது
உருப்பொருள் வாதிகள் (pragmatists,or materialists) பொருள் கொள்ளமாட்டார்கள்.மாறாக
மக்களின் தலைவனாக காண முற்படுவர்.
மேலைநாட்டு இலக்கியங்களில் அல்லது பாடல் தொகுப்புகளில் புத்தகம் எழுதுமுன்
கடவுள் வாழ்துக்கள் இடம்பெறா.ஆங்கில இலக்கியங்களின் தந்தை எனப் போற்றபடுபவர்களான,சேக்சுபியர்,பெர்னாட்சா போன்றோர்
அவர்கள் படைப்புகளுக்கு முன் கடவுள் வாழ்த்துக்களை வைக்கவில்லை!
இந்திய படைப்பாளிகளுக்கு மட்டும் ஏன் இந்த தாக்கம்?
இதற்கெல்லாம் காரணங்கள் இல்லாமல் இல்லை.உலக மனித இனங்களில் இரண்டு வகை
ஒன்று, பகுத்தறியும்(pragmatism) குணம் கொண்டவர்கள் (யூதர்கள்),
இரண்டு, ஆன்மிகவாதிகள்.(spiritualism)( ஆரியர்கள்.)
யூதர்கள் பகுத்தறியும் குணம் கொண்டவர்கள்-இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்
எல்லாம் அவர்களுடையதுதான்!
அடுத்து ஆரியர்கள்-இவர்கள் அறிவியல் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள்-எல்லாம்
கடவுள் செயல் என ஒதுங்கி விடுவர்.
No comments:
Post a Comment