10
2-வான்
சிறப்பு
11-வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
வானிலிருந்து உலகத்திற்கு மழை
கொடுப்பதால் மண்ணுயிர் வாழும் உயிர்களுக்கு அது அமுதமாக கொள்ளலாம். இது உண்மை.
12-துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாபாயதூஉ
மழை
மழையினால் விளையும் உணவை உண்பவனுக்கும் அந்த மழை உணவாகிறது-உண்மை
13-விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
விரிநீர் வியனுலகம்-கடல்நீர் சூழ்ந்த உலகம் இருப்பினும்,மழை நீர்
பொய்த்துவிட்டால் உலகம் வாடும்-இது உண்மை!
14-ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி
வளங்குன்றிக் கால்
மழை குறைந்துவிட்டால் உழவுத்தொழில் குன்றிவிடும்-இது உண்மை!
15- கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்
றாங்கே எடுப்பதூஉம் எல்லாம்
மழை
மழை பெய்யாமல் கெடுப்பதும், உயிர்களை வாழவைப்பதும் மழையே-இது உண்மை
16-விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் மலைகாண் பரிது
விண்ணிலிருந்து மழைத்துளி மண்ணில் விழவில்லை எனில் நாம் பசும்புல் தலை காண
முடியாது-இது உண்மை
17-நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்தெழிலி
தான் நல்கா தாகி
விடின்
கடல்நீர் ஆவியாகி மேகத்தில் கலந்து மீண்டும் கடலுக்கே மழையாக பொழிந்தால்
தான் கடல் நீர் வற்றாமல் இருக்கும்,அதுபோல் சமுகத்தின் மேன் மக்கள புகழுடன் உயர்ந்தாலும்
அச்சமுகத்திற்கே பயன் பட்டால் தான் சமுதாயம் வாழும்.இது உண்மை
18-சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
வானமே மழை பொழியவில்லை எனில் இங்கு வான் வழி வந்த தாக கூறப்படும்
கடவுளர்க்கு பூசை எப்படி நடக்கும்? இது உண்மை
19-தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
வான் மழை இன்றி வறண்டுபோகும் பூமியில் தானம் செய்ய வழியில்லை;தவத்திற்கும்
கேடுதான்!இது உண்மை
20-நீரின் றமையா துலகெனின் யார்யார்க்க
வானின் றமையா தொழுக்கு
மழை இல்லை எனில் வளம் இல்லை; இதனால் வறுமைதான் மிஞ்சும்!வறுமையில் மனிதர்களிடையே ஒழுக்கம் எப்படி காணமுடியும்-இது
உண்மை தான்
‘வான் சிறப்பு’ அதிகாரத்தின் 10 குறட்களும் மனித
சமுகத்திற்கு கூறப்பட்ட உண்மைகள்(assertive statement) இந்த உண்மைகள்
உணரப்படக்கூடிய தேவைகள் தான். இந்த 10 குறட்களும் கற்கப்பட வேண்டியவை
No comments:
Post a Comment