5-இல்வாழ்க்கை
41-இல்வாழ்க்கை என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
பெற்றோர்,மனைவி,குழந்தைகள் இம்மூவருக்கும் துணை நின்று வழி நடத்துவது குடும்பத் தலைவன்
கடமையாகும்-இது தேவை
42-துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
இல்லற வாழ்வு நடத்துவோர், பசியால் தன்னை நாடிவருவோருக்கு உணவளித்தல் அவசியம்
ஆனால் துறவிகளுக்கு சோறு போட்டு வளர்க்கவேண்டிய அவசியமென்ன? இது தேவையற்றது.
43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை .
சிறப்பாக வாழ்ந்து மறைந்தோரை நினைவு கூர்தல்
சிறப்பாக வாழ்வோரை போற்றுதல்
விருந்தோம்பல்,
சுற்றம் பேணல்,
தான்,தன்னை நிலைப்படுத்திக் கொளல்
இந்த ஐவகை கடமைகளை பேண ஐவகை அற நெறிகளும் இல்வாழ்க்கைக்கு உரியனவாகும்-இது
அவசியமானது.
44-பழையஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பழி பாவங்களுக்கு அஞ்சி சேர்க்கப்படும் பொருளை பகுத்துண்ணும் பண்புதான்
வாழ்க்கையின் ஒழுக்கம்.இது அவசியமானது மட்டுமல்ல தேவையான குறள்
45-அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
எந்த குடும்பத்தில் அன்பும் அறச்சிந்தனைகளும் நிறைந்து காணப்படுகிறதோ அந்த குடும்பமே சமுகத்துக்கு பயனுடைய பண்பட்ட
குடும்ப மாகும்.இது அவசியமானதும் மற்றும் தேவையான குறளாகும்.
46-அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புகுத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.
அறநெறி கொண்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை வேறு நெறி
கொண்டு பயன் பெற முடியாது.இது தேவையானது .
47-இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
இயல்பாகவே இல்வாழ்க்கை வாழ்பவன் ,அப்படி வாழ்க்கை அமைய முயல்பவருள் அவன் தலை
சிறந்தவன்.
இது தேவை.
48-ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
தானும் அறவழியில் நடந்து,பிறரையும் அவ்வழியில் நடக்கச்செய்திடுவோரின்
இல்வாழ்க்கை,துறவிகள் கடைபிடிக்கும் நோன்பைவிட பெருமை கொண்டதாகும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது ?துறவு வாழ்க்கை இல்லறத்துக்கு ஒத்துவராது என புரிகிறதா?
பின் துறவரம் பற்றி நாம் ஏன் யோசிக்க வேண்டும்?இது தேவையானது
49-அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்ப தில்லாயின்
நன்று
பிறர் பழிக்காத இல்லற வாழ்க்கையே அறம் என்பதாகும்.இது தேவை.
50-வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
வானில் தெய்வங்கள் வாழ்வதாக கூறப்படுவதை ஏற்க இயலாது! இது
மெய்ப்பியல் (pragmatism) தத்துவத்திற்கு புறம்பானது.மாணவர்களிடையே மூட நம்பிக்கையை
வளர்க்க மட்டுமே பயன்படும். எனவே இது தேவையற்றது.
‘இல்வாழ்க்கை’ அதிகாரத்தில் 42 மற்றும் 50-ம் குறள் கற்க தகுதியற்றது
*******************************************************
உழைப்பாளிகளின் சுய சிந்தனை இழக்கச்செய்யும் மந்திரம்,செய்யுள்,இலக்கணம் எல்லாம் கம்பன்
கவித்திறமையால் உருவானதுதான்: கம்பராமாயணம், தமிழர்களின் மூட நம்பிக்கைகளின் மூலவேர்.
********************************
No comments:
Post a Comment