Tuesday, March 20, 2018

35-துறவு


                            35- துறவு

341-யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
     அதனின் அதனின் இலன்.

எதன் மீது பற்றுவைத்து அதனை வெறுத்து ஒதுக்குகின்றானோ பின்னாளில் அதனால் துன்பம் அடையமாட்டான். இது தேவை.

342-வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
      ஈண்டியாற் பால பல.

இருப்பதை துறக்க(வைத்திருக்கும் பொருளால் வரும் துன்பத்தை துறக்க) முடிவெடுத்தவன் உலகில் பல இன்பங்களை பெறக்கூடியவன்.(இது புத்தனை மனதில் வைத்து எழுதியது போல் தோன்றுகிறது).இது தேவை.

343-அடல்வேண்டும் ஐந்தண் புலத்தை விடல்வேண்டும்
       வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

மனிதனுக்கு ஐம்புலன்கள் முக்கியம்.அவை நுகரும் தன்மைகளே  தனித்தனி சுவை.

இந்த சுவைகளை துறந்த மனிதன் சாதிக்கப்போவது என்ன?இங்கே குறள் எண் 340-ன் பொருள் படி இறந்து போன மனிதன் மீண்டெழுவதில்லை,அதாவது இன்னொரு பிறவி இல்லை .எனவே அவன் இருக்கும் போதே உடலை மூலதனமாக்கி ஐம்புலன்கள்கள் மூலம் வாழ்க்கையை நுகரவேண்டும்.மனிதன் மண்ணில் பிறப்பெடுத்த பயனை முழுமையாக அனுபவிக்க வேண்டும்.ஆனால் ஐம்புலன்களை ஆளுவதில் அடக்கம் வேண்டும்,துறவு கூடாது.எனவே இக்குறள் தேவையற்றது.340 எழுதியவர் 343 எழுதியிருக்க முடியாது.
                                
 344-இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
      மயலாகும் மற்றும் பெயர்த்து.

குறள் எண் 343ன் பொருளே இதற்கு பொருந்தும்.எனவே இக் குறளும் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.

345-மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
      உற்றார்க் குடம்பும் மிகை.

துன்பத்தை துறந்த வாழ்க்கையே துறவு வாழ்க்கை.அவ்வாறு இருக்க பிறப்பை முடிவுக்கு கொண்டு வர உரு உடம்பை,(அரு உடம்பு பத்துவகை இந்திரிய உணர்வோடு ஐவகை வாயுக்களோடு கூடிய மனம்,இது நுண்ணுடம்பு எனப்படும்.இது பரிமேலழகர் கூற்று.)விட வேறு உடம்பு எதற்கு?
வாழ்க்கையை துறப்பவர்க்கு குடும்பம் எதற்கு? குடும்பம் இல்லையெனின் மனித குல வளர்ச்சி தடைபடாதா? எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.தேவையில்லை.
                           
346-யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
      குயர்ந்த உலகம் புகழும்.

இந்த உடலை வைத்துக்கொண்டு  நான் எனும் செருக்கற்று  வாழ்பவன், வானோர்களோடு மெச்சப்படுவான்.இது உருப்பொருளியல் தத்துவத்திற்கு மாறானது.எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதி இழுந்து விட்டது.

347-பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
      பற்றி விடாஅ தவர்க்கு.
ஆசை கொண்டவர்கள் துன்பத்தில் உழல்வர்,பற்றற்றவர்களை துன்பம் தொடுவதில்லை.இது தேவை.
                             
348-தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
      வலைப்பட்டார் மற்றை யவர்.

முற்றுந்துறந்தவர்களே உயர் நிலையடைவர்,அரைகுறை ஆசையை துறந்தவர்கள் துன்பத்தில் உழல்வர்.இது தாம்பத்திய வாழ்க்கைக்கு புறம்பானது.இது தேவையற்றது.

349-பற்றற்ற  கண்ணே பிறப்பறுக்கும் மற்று
      நிலையாமை காணப் படும்.

பற்றுகளை துறந்தால் வாழ்க்கையில் இன்ப துன்பம் நிகழாது.நிலையாமை தோன்றும்.இது தேவையற்றது.முந்தைய குறளின் பொருள் கொண்டதால் இது மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.

350-பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
      பற்றுக பற்று விடற்கு.

கலைஞர் தவிற மற்றவர்கள் பற்றற்றவன் என்றால் இறைவன் எனும் பொருளில் கருத்துக் கொண்டுள்ளனர்.
இறைவனை பற்றுவதால், ஒரு மனிதன் பற்றற்ற நிலை எட்டமுடியும் என்பது அனைவருடைய கருத்து.

பற்று என்றாலே ஆசைதானே? இறைவன் மீது ஒரு மனிதன் பற்று கொள்வதும் ஒரு ஆசை துறவா நிலைதானே?
அதே இறைவன் பற்றற்றவன் என நாம் எப்படி பொருள் கொள்ள முடியும்?.பற்றற்ற மனிதனை இறைவன் பற்றுவதால் இறைவனே பற்றற்று வாழமுடிவதில்லையே?
மனிதர்களை காக்கும் பற்றை கொண்டவன் அல்லவா இறைவன்? எனவே மனிதனும் இறைவனும் ஒருவருக்கொருவர் பற்றுள்ளவர்கள் என்றுதானே பொருள் கொள்ள முடியும்

பற்றற்ற வாழ்கை என்பது ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்தும்.இறை நம்பிக்கை என்பது மெய்ப்பியல் தத்துவத்திற்கு புறம்பானது.இது தேவையற்றது.

இந்த,’துறவுஅதிகாரத்தின்341,342. மற்றும் 347 ஆகிய மூன்று குறட்களை வாழ்க்கையில் ஆசைகளை  குறைத்து வாழ பழகிக் கொண்டால் மகிழ்ச்சியாக வாழலாம் என பொருள் கொண்டு 3 குறட்களை ஏற்கலாம்.

மற்ற 7 குறட்களும் மனிதன் தன் குலம் தழைக்கும் விதமாக வாழ வழி சொல்லவில்லை.எனவே மொத்தத்தில் துறவு என்பது போலி வாழ்க்கை வாழ மட்டுமே பயன் படும் விதமாக அமைந்துள்ளது.ஆகையால்  துறவு அதிகாரம் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது
          **************************************************************************************************************.
வெடி வழிபாடு கோயில் ஆசாரங்களுக்கு உட்பட்டது! சபரி மலை தந்ரியின் கூற்று!
ஆசாரங்கள்என்றால் என்ன?ஆரவாரங்களுடன்(வெடி வெடித்து) எதற்கு இறைவனை வணங்க வேண்டும்?தூங்கும் இறைவனை எழுப்பவா? தூங்கும் இறைவன் மக்களைங எப்படி காப்பாற்றுவார்? காலையில் கோயில்களில் சுப்பரபாதம் ஏன் பாட வேண்டும்?
உழைப்பாளிகளை ஆரவாரப்படுத்த கோயிலுக்கு வர வழைத்து காசு பிடுங்கும் அய்யோக்கியர்கள் வகுத்த திட்டம் தானே?
இதே போன்று காட்டு யானைகளை கட்டி வைத்து, மக்களுக்கு காட்டி வேடிக்கை காட்டும் செயலை தடை செய்யப்படவேண்டும்! இதுவும் ஆசாசரங்களுக்கு உட்பட்டதா? ஆசாரங்களின் வரைமுறை என்ன?
                           **************************************

No comments: