Wednesday, March 7, 2018

4-அறன் வலியுறுத்தல்



                               
                    4-அறன் வலியுறுத்தல்

31-சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
    ஆக்கம் எவனோ உயிர்க்கு

அறம் காத்தல்  என்பது எந்த வகையிலும் தன் சக மனிதர்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய செயல்கள் நாடாமல் பார்த்துக் கொள்வது.
இது மனித குல வளர்ச்சிக்கு உதவும். அறன் வழி சென்றால் சிறப்பு வரும்  ஆனால் செல்வமும் வரும் என்பது என்பது எப்படி என தெரியவில்லை?

பிறவியிலேயே ஒருவன் ஏழையாய் பிறந்தால் அறம் காக்கும் துறவு வாழ்க்கை வாழ்தல் எளிது.செல்வத்தில் தோன்றி அறவாழ்க்கை வாழ்ந்தால் செல்வம் எப்படி சேரும்? இக்குறள் முறண் படுகிறது.கற்க தகுதியற்றது

32-அறத்தினூஉங் காக்கும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு   

அறத்தை மறந்த வாழ்வு ஒருவனுக்கு கேடு விளைவிக்கும்-இது உண்மை
                            
33-ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
     செல்லும்வாய் எல்லாஞ் செயல்

எந்தவகை செயல்களாக இருந்தாலும் அறம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்-இந்த குறள் தேவையானது மற்றும் அவசியமானது


34-மனதுக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
   ஆகுல நீர பிற
                              
மனம் தூய்மையாக இருப்பதே அறம்,மற்றவை ஆரவாரத்தை தவிர வேறு ஒன்றுமில்லை.இது தேவை.
                             
35-அழுக்கா றவாவெகுளி  இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்

பொறாமை,பேராசை,முன்கோபம்,புண்படுத்தும் சொல் இவை நான்கும் அறவாழ்க்கைக்கு உகந்தது அல்ல.இது தேவை.

36-அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
     பொன்றுங்கால் பொன்றாத் துணை.

அறம் சார்ந்த வாழ்க்கை முதுமையில் மேற்கொள்ளலாம் என தள்ளிப்போடாமல் வாலிபத்தில் அறவாழ்க்கை மேற்கொள்வது ஒருவனுக்கு அழியாப்புகழ் தரும்.இது தேவையானது

37-அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோ டூர்ந்தான் இடை

அறத்தைப்பற்றி பல்லக்கில் அமர்ந்து செல்பவனிடமும்,அந்த பல்லக்கை சுமப்பவனிடமும் பேசுதல் அல்லது கூறுதல் எந்த பயனும் அளிக்காது.இது உண்மை.

இந்த குறளுக்கு கலைஞர்,சாலமன் பாப்பைய்யா,மூ. வ, பரிமேலழகர் மற்றும் மனக்குடவர் போன்றோர் பல தரப்பட்ட பொருளை அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப பொருளுரைத்துள்ளனர்.இதில் என் கருத்தும் மூ. வ கருத்தும் ஒத்துப்போகிறது.
                            
                         
38-வீழ்நாள் படாஆமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்

அறப்பேறு பெற்றவனுக்கு மறு பிறவி கிடையாது.

குறள் 22-ல் இறந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிடமுடியாது, என பொருளுரைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது?அன்றிலிருந்து இன்று வரை இறந்தவர்கள், மீண்டும் பிறந்ததில்லை!,பிறக்கவில்லை!!,இனி பிறக்கப்போவதும் இல்லை!!!
மண்ணில் வாழ்பவர்கள் பிறக்கும் முன் எங்கே இருந்தார்கள் என்பதற்கு நினைவு கூற முடியவில்லை!
ஆனால் இந்த குறள் இறந்தவன் பிறப்பெடுப்பான் எனும் பொருளில் அமைந்துள்ளது! எனவே இந்த இரு குறளையும் எழுதியவர் ஒருவராக இருக்க முடியாது!

கலைஞர் தன் உரையில் அறப்பேறு பெற்றவனுக்கு வாழ்கைப் பாதை அமைக்கும் கல்லாக அறம் அமையும் என்பது உண்மை,ஆனால் மற்றவர்கள் பிறவி வழியை அடைக்கும் கல்லாக பொருள் கொள்கின்றனர்,அதாவது மறுபிறவி எனும் மூட நம்பிக்கையில் பற்று வைத்து பொருளுரைத்துள்ளனர்.நாம் கலைஞர் உரை வழியை ஏற்றுக்கொண்டு இந்த குறள் தேவை என உணர்வோம்!

39-அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
     புறத்த புகழும் இல

ஒருவருக்கு அறவழியில் வரும் புகழ் நிலைக்கும், மற்ற வழியில் வரும் புகழ் நிலைக்காது! இது தேவை


40-செயற்பால தோறும் அறனே ஒருவருக்கு
    உயற்பால தோறும் பழி

உலகம் பழிப்பதை ஒதுக்கிவிடு,அறவழியில் நாட்டம் கொள்வதே சாலச் சிறந்தது.இது தேவை

அறன் வலியுறுத்தல்அதிகாரத்தின் 31-மற்றும் ,38-ம் குறள் பொருள் முறண்பாடு தெரிகிறது மற்ற 8 குறளும் மனித சமுகத்திற்கு  தேவையாய் விளங்குகிறது.
                    *******************************************
சல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிபதியின் கேள்விகள்
1-சல்லிக்கட்டு மதம் சார்ந்தது அல்ல .காளை வீட்டு விலங்கு எனில் அதையேன் பழக வேண்டும்?
2- சல்லிக்ட்டு மதம் சார்ந்த கலாச்சாரம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது!
3-சல்லிக்கட்டு மத சுதந்திரத்திற்கானது அல்ல
4-பொழுது போக்குக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகளை மதம் தொடர்புடையாக ஏற்க முடியாது!

அதோடு நானும் சில கேள்விகளை முன்வைக்கிறேன்.
1-   சல்லிக்கட்டு மனித நாகரிகம் அடைவதற்கு முந்தைய பொழுது போக்கு மிருக விளையாட்டு
2-  இது கணினி யுகம்,அறிவியலில் உலகம் போட்டியிடுகின்றது,தமிழர் கவனம் அறிவியலில் செலுத்தினால் என்ன?
3-  தமிழன் 50 ஆண்டுகளுக்கு முன் கோவணம் கட்டிதானே ஏர் ஓட்டினான்?.இப்பொழுது ட்ராக்டர் விவசாயம்,கால்சட்டை போட்டல்லவா ஓட்டுகிறான்.ஏன் கோவணம் கட்டிதான் ட்ராக்டர் ஓட்டுவேன் என அடம் பிடிக்க வேண்டியதுதானே?
தமிழ் சமுதாயம் நவினம் ஆடையாமல் போனதற்கே தமிழ் புலவர்களும்,இலக்கயங்களை புகழ் பாடிக்கொண்டிருப்பதால்தான்
                       *********************
 

No comments: