Tuesday, March 6, 2018

3-நீத்தார் பெருமை



                              
                     3-நீத்தார் பெருமை

21-ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு.

ஒழுக்கத்தில் சிறந்தவர்களை நூல்கள் துணிச்சலோடு பாராட்டி எழுதுவதே நூலின் துணிவு ஆகும் .ஆனால் 
பிறந்தவர்கள் எல்லாம் துறவிகளாக மாறிவிட்டால் மனித குலம் எப்படி தழைக்கும்? இந்த குறள் தேவையற்றது!

22-துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட இயலாது,அது போலத்தான் பற்றற்றவர்களின் பெருமைகளை சொல்லி மாளாது .இந்த குறள்  துறவு கொள்ளும் மனப்பான்மையை தூண்டும்.

வாழ்க்கை என்றால் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வது,துறவு என்றால் ஆண் வாழாவெட்டியாகப் போவது,அல்லவா? இது மூடநம்பிக்கையை வளர்க்கும்.   
மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாது .இதிலிருந்து என்ன தெரிகிறது?
மனிதன் பிறந்ததை ஒருவன் ஏற்கனவே இந்த மண்ணில் பிறந்தவனா?
என்பதை ஒருவனால் உணரமுடியாது இது உண்மைதானே?
அப்போ முற்பிறவி மறுபிறவி என பிரிதொரு பாடல்களில் வருவதெல்லாம் பிதற்றல்தானே?
அல்லது பிறவிகளில்(எழுபிறப்பு) நம்பிக்கை கொண்ட புலவர் இந்த 22-ம் குறளை எழுதியிருக்க முடியாது! சரியா? 
எனவே  இது தேவையற்றது .கற்க தகுதியற்றது

  23-இருமை வகைதெரிந் தீண்டறம்  பூண்டார்
     பெருமை பிறங்கிற் றுலகு

இப்பிறவிலேயே அறம்கொண்ட வாழ்க்கை மேற்கொள்ளுதல் நலம் அதை விடுத்து மறுபிறவி சிந்தனையை தூண்டும் விதமாக‍ அமைந்துள்ள இப்பாடல் தேவையற்றது

24-உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் 
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து

ஓரைந்தும் என்பது
1-உடல் பராமறிப்பு,
2-வாய் ருசியறிந்து உணவுள்ளல்,
3-கண்-நல்லதைப் பார்த்து களிப்புற,
4-மூக்கு-நல் வாசம் அறிதல்,
5-செவி-எப்பொருள் யார் வாய் கேட்பினும் அதன் பொருளறிந்து செயல்படும் திறன் .
இந்த ஐந்து உறுப்புகளின் செயல் பாடுகளை கட்டுபடுத்தி பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து ஒரு மனிதன் சாதிக்கப்போவது என்ன? எனவே  இக்குறள் தேவையற்றது.

25-ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் 
இந்திரனே சாலுங் கரி

வானுலகில் வாழ்ந்ததாக கூறப்படும் இந்திரன் பெண்ணாசையை துறந்தவனில்லை;

(பேரழகி அகலிகையை கண்டபோது காமுற்ற இந்திரன், அகலிகைக்கு ஒரு ரிஷியுடன் திருமணம் நடந்து விட்டது எனத் தெரிந்தும் அவளை அடைய, அவள் கணவன் காலைக் கடனை முடிக்க ஆற்றுக்கு சென்ற சமயம்,
இந்திரன் பூனைப்போல்(பூனை வடிவம் கொண்டு?)அகலிகையை புணர்ந்து விட்டது அறம் தவறிய செயல் அல்லவா?

புலனடக்கம் இல்லாத இந்திரன் தேவர்களுக்கு எப்படி தலைவனாக விளங்க முடியும்?

அவ்வாறு இருக்க இதற்கு பொருளெழுதியவர்கள் மனிதனைப்போல் புலனடக்கம் இல்லா இந்திரனை ஒப்பிட்டு இந்த குறள் எழுதப்பட்டதாக கலைஞர் முதலானோர் உரை எழுதியிருப்பது மூட நம்பிக்கைகளின் கதைகளில்-
மாறு பட்ட சிந்தனையை வளர்க்க உதவும்,எனவே இது தேவையற்றது.

26-செயற்கரிய செய்வார் பெரியர் சிரியர்
     செயற்கரிய செய்கலா தார்

அரிய செயல்களை செய்பவர்கள் பெரியமனிதர்கள் என்றும்,அற்பக் காரியங்களை செய்வபவர்கள் அவர்கள் பெரிய மனிதர்களானுலும் அற்பரே!இது தேவையான குறள்.

27-சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்  வகைதெரிவான் கட்டே உலகு

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்-உண்மைதான் ,தேவையும் கூட    

28-நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும்

பெரியவர்கள் சினந்து கூறினாலும்,மனம் நிறைந்து கூறினாலும் அவர்கள் வார்த்தைகளில் பொருள் பொதிந்து இருக்கும்!பெரியவர்கள் உதிர்த்த வார்த்தைகள் யாவும் வேதங்களே(“மறை மொழி) இது தேவையான குறள்.

29-குணமெனுங் குன்றேறி நின்றார் வெகுளி
    கண்மேயுங் காத்தல் அரிது

நற்குணம் கொண்ட பெரியோரின் கோபங்கள் சில நொடிகளே வந்து போகும்.இது தேவை

30-அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுலகிற்கும்    .
    செந்தண்மை பூண்டொழுக லான்

அன்பே சிவம், அன்பே கடவுள்,அறவழியான அன்பு போற்றுபவர் இவ்வுலகில் சிறந்த அறவோர்-இது தேவை

நீத்தார் பெருமைஅதிகாரத்தில் 21 லிருந்து 25 வரை கூறப்பட்ட குறள் மனித குலத்திற்கு தேவையற்றது.26லிருந்து 30 வரை கூறப்பட்ட குறள் அன்பை போதிக்கும் அறவழி வாழ்க்கை வலியுறுத்துகிறது,இந்த ஐந்து குறளும் மனித குலத்திற்கு தேவை.

No comments: