39-இறைமாட்சி
381-படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு.
படை(வீரம்)குடிமக்கள்,கூழ்(உணவு), அமைச்சு (அறிவு), நட்பு(நல்ல உறவு).அரண்(பாதுகாப்பு) இந்த ஆறும்
அமைந்தது தான் அரசருக்கு அழகு.இது தேவை.
382-அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு.
துணிவு,வள்ளல் தன்மை,சிந்தனை மற்றும் ஊக்கம் இவை நான்கும் குறைவு படாமல் இருப்பதே அரசனுக்குறிய
தகுதிகளாகும்.இது தேவை.
383-தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு.
விழிப்புணர்வு,கல்வியறிவு,துணிவான முடிவு இந்த மூன்றும் நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியது ஒரு
அரசனுக்குறிய தகுதியாகும்.இது தேவை.
384-அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு.
அறன் தவறாமலும்,குற்றம் புரியாமலும்,வீரத்துடன் ஆட்சி நடத்துபவனே சிறந்த அரசன்.இது தேவை.
385-இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
திட்டமிடல்,நிதி பெருக்குதல்,பெருக்கிய நிதியை காத்தல் போன்ற இயல்புகளைப் பெற்றது
சிறந்த அரசு.இது தேவை.
386-காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
எளிய தோற்றமுடையவனாகவும் ,கடுமையான சொற்களை
பயன் படுத்தாத அரசரைத்தான் உலகம் புகழும்.இது தேவை.
387-இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
இன்சொல்லும்,பிறருக்கு வழங்கி குடிமக்களை காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வுலகம் வசப்படும்.இது தேவை.
388-முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்
நீதி நெறி தவறாமல் மக்களை காப்பாற்றும் அரசன் மக்கள் தலைவனாக(இறைவனாக)
போற்றப்படுவான்.இது தேவை.
389-செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு.
காது பொறுக்க முடியாத கடுஞ்சொல் கேளாத
அரசாளும் பண்பாளனை மக்கள் மதிப்பார்கள்.இது தேவை.
390-கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
கொடை,அருள்,செங்கோல்முறை,
குடிமக்களை
கருணையுடன் காத்தல் ஆகிய நான்கும் அரசர்க்கு புகழ் சேர்ப்பதாகும்.இது தேவை.
‘இறைமாட்சி’ அதிகாரத்தின்
பத்துக்குறட்களும் ஒரு அரசன் என்பவன் எத்தகைய குணம் கொண்டவனாக இருக்க வேண்டும் என
வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியங்களில் இருந்து தமிழர் வாழ்க்கை முறைகளை தெரிந்து
கொள்கின்றோம்.
*****************************************
மரவுரி தரித்த தமிழன்,
மண்ணை பிசைந்த தமிழன்,
பண்டமாற்று தமிழன்,
சிற்றாடை தரித்த தமிழன்,
மாடுவிரட்டும்(ஜல்லிக்கட்டு) தமிழன்.
கட்டடக் கலை(கோயில் கட்டிய) தமிழன்.
இன்று ட்ராக்டர் விவசாயம்
கணினி ஆய்வில் தலை தூக்கும் தமிழன் என மாறிவரும் தமிழன்,இன்னும் பழைமையில்
புனிதம் உளதென மாடுபிடி விளையாட்டில் அடம் பிடிப்பதேன்?
3000-ம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லவா?
நவீனப்படுத்துங்கள் ,தமிழனை!அறிவில் ,அறிவியல் தமிழனாக மாற்றுங்கள்,மாறுங்கள்!
**************************************
No comments:
Post a Comment