Friday, March 16, 2018

24-புகழ்



                              24-புகழ்

231-ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
     தூதிய மில்லை உயிர்க்கு.

கொடைத்தன்மையும் ,குன்றாத புகழும் ஒருவருக்கு ஆக்கம் தரக்கூடியது போல் இவ்வுலகில் வேறெதுவும் இல்லை.இது தேவை

232-உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொண்
      றீவார்மேல் நிற்கும் புகழ்.

புகழ்ந்து பேசுவோரெல்லாம் ,இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுப்பாரே யானால் அவர் புகழ் நிலைத்து நிற்கும்.
    
233-ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
      பொன்றாது நிற்பதொன் றில்.

ஒப்பற்ற இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத்தவிர வேறு எதுவும் இல்லை.இது தேவை.

234- நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
       போற்றாது புத்தே ளுலகு.

இவ்வுலகம் தன்னலம் கருதாது ஒருவர் ஆற்றும் புகழ் நிலைத்து நிற்க போற்றுமே  அல்லாமல் வானுலகில் உள்ள தேவர்களை போற்றாது.புத்தேளுலகம் என்பதால் இது மெய்ப்பியல் தன்மைக்கு மாறானது.இது மாணவர்கள் கற்க தகுதி இழந்து விட்டது.

235-நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
   வித்தகர்க் கல்லால் அரிது.

ஒருவர் தனக்கு வரும் துன்பத்தை தாங்குவதால் புகழை நிலைநாட்ட முடியும்,தமது சாவிலும் புகழ் நிலையை எட்டுவது ஆற்றல் உடையவருக்கு மட்டுமே உரிய செயலாகும்.இது தேவை.

236-தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலர்
      தோன்றலின் தோன்றாமை நன்று.

பிறப்பவர்கள் புகழோடு பிறக்க வேண்டும்,இதன் பொருளே பிறந்த பின் மக்களிடையே புகழுடன் விளங்கும் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்,பிறப்பு நம்மிடையே இல்லை,ஆனால்  பிறந்த  பின் இறக்கு முன் புகழோடு இறப்பது நம் கையில்தான் உள்ளது-இது தேவை.

237-புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
      இகழ்வாரை நோவா தெவன்.

புகழ் பட வாழ முடியாதவர்கள் தங்களை வருத்திக்கொள்ளலாம்,ஆனால் அதே நேரத்தில் தங்களை இகழ்வாரை நொந்து கொள்வதால் எந்த பயனும் இல்லை.இது தேவை.

238-வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
      எச்சம் பெறாஅ விடின்.

வாழும்போது புகழைப் பெறாதவர்கள்,வாழ்ந்த பின்னும்(இறந்த பின்னும்) அத்தகைய வாழ்க்கை பழி என கூறுவர்-இது தேவை

 239-வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
      யாக்கை பொறுத்த நிலம். 

புகழ் பெறாதவன் உடலை சுமக்கும் இந்த பூமி ,நல்ல விளைவில்லா நிலமாகும்.இது தேவை.

240-வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
      வாழ்வாரே வாழா  தவர்.

பழி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை,மற்ற வாழ்வெல்லாம் வாழ்ந்தும் பயன் இல்லை.இது தேவை.

இந்த புகழ்அதிகாரத்தின் 234-ம் குறளைத்தவிர மற்ற 9 குறட்களும் மாணவர்கள் கற்க தகுதி வாய்ந்தவை.
       *********************************************************************
உடலைவருத்தி,மனதை வருத்தி நேர்த்திக்கடன் செய்யும் நமது மக்களின் சிந்தனைக்கு!

ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்,அது மிருக வதை என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் எழுதியதே-எழுதுகின்றனவே, ‘குழந்தைகள் கன்னங்களை கிழித்து,அலகு குத்தி 'அம்மனை' வழிபட்டால் நினைத்தது நடக்கும்என்று காட்டு மிராண்டித்தனமான கல் நெஞ்சக்காரர் களையும் கதரவைக்கும், இந்த கடவுள் வழிபாட்டை எந்த கல்லுச்சாமி கேட்டது?தலையில் தேங்காய் உடைப்பது, போன்ற
இத்தகைய மனித வதைச் சடங்குகளை தடைசெய்தால் என்ன?இவர்களை தண்டிக்க சட்டம் இயற்றலாமே........?

                         **************************************


No comments: