16-பொறையுடைமை
151-அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
நிலம் தோண்ட தோண்ட தாங்கிக் கொள்ளும்,அதுபோல தன்னை ஏசுவோர் சொல்லை
பொருத்துக்கொள்வதே சிறந்த பண்பாகும்.
இந்த குறளில் ஒப்புமைப்படுத்தப்பட்ட நிலம்(பூமி) ஒரு உயிரற்ற(அக்ரிணை)
பொருள்.இகழப்படுவோர் ஒரு (உயர்திணை) உயிருள்ள பொருள்.மனிதன் எளிதில் உணர்ச்சி
வயப்படக்கூடியவன்.இவனை பொறுமை உள்ளவனாக மாற்ற, அதே உயர்திணை உதாரணம்
காட்டியிருந்தால் இது ஒரு மிறச்சிறந்த குறளாக போற்றலாம்.அஃதன்றி செயலற்ற திடப்
பொருளை செயல்படும் மனிதனுக்கு ஒப்பிட்டதால் இது மாணவர்கள் கற்கும் தகுதி
இழந்துவிட்டது.இது தேவையில்லை.
152-பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.
பொறுத்துக்கொள்வதை விட மறந்து போவது சிறந்த பண்பாகும்-( ஒருவன் ஏசுவதை
பொறுத்துக் கொள்வதை விட) இது தேவை.
153-இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
வன்முறை என்பது அறிவிலிகளின் செயல்.அதை பொறுத்துக்கொள்வது,ஒரு பெரும்
வலிமையானவனின் குணம்.இந்த செயல் எப்படிபட்டது எனில், வந்த விருந்தினரை வரவேற்க
முடியாத அளவுக்கு ஒரு கொடிய வறுமையைப்போன்றதாகும்.வன்முறையையும்,வறுமையையும் ஒரு
மனிதனால் தாங்க முடியாது என்பதே இதன் பொருள். இது தேவை
154-நிறையுடைமை நீங்காமை வேண்டின்
பொற்யுடைமை போற்றி யொழுகப்
படும்
பொறுமையை கடைபிடிப்பவன் வாழ்க்கையில் நிறைத் தன்மை கொண்டவனாக போற்றி ஒழுக
வேண்டும்-இது தேவை
155-ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற்
பொதிந்து
தனக்கு தீமை செய்தவரை தண்டிக்க முற்படக்கூடாது.அப்படி தண்டித்தவரை பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்.பொறுத்துக் கொண்டவரை பொன்போல மதிப்பர்.-இது
தேவை
156-ஒறுத்தாற்கு ஒருநாளை இன்பம் பொறுத்தாற்கு
பொன்றுந் துணையும புகழ்.
தீங்கு செய்வதவரை தண்டித்தால் ஒரு நாள் மட்டும்தான் இன்பம்,மாறாக பொருத்துக்
கொண்டால் அவர் வாழ்நாள் முழுவதும் புகழப்படுவர்-இது தேவை
157-திறனல்ல தற்பிறர் செயினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
தனக்கு கொடிய தீங்கு செய்தவரை பதிலுக்க அவர் வருந்தவேண்டும் அளவுக்கு
அறமற்ற செயலான தீங்கிழைப்பதை சொய்யாமல் இருப்பது நல்லது-இது தேவை.
158-மிகுதியான் மிக்கவை செய்தாரை தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
ஆணவத்தால் அநீதி விளைவிப்பவர்களை
நாம் நம் பொறுமை குணத்தால் வென்று விடலாம்.இது தேவை
159-துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
வரம்பு கடந்து நடப்பவரின் வாய் சொற்களை பொறுத்துக் கொள்பவர்கள், தூய்மையான
துறவிகளைப் போன்றவர்கள்-இது தேவை.
160-உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
உணவு உண்ணாமல் நோன்பு இருப்பவர் ஒன்றும் பெருமைக்குரியவர் அன்று,பிறர் சொல்லும் தீய
சொற்களை பொறுத்துக் கொள்பவரே முதன்மை
நிலையில் வைத்து போற்றப்படுவர்.இது தேவை.
இந்த ‘பொறையுடைமை’ (பொறுமை) அதிகாரத்தின் 10
குறட்களில்,முதற் குறளான 151-ல் பொறுமைக்கு ஒரு ஒப்புமையாக அக்கிறணை பொருளான நிலத்தை
உதாரணமாக கொண்டதால்(உருப்பொருள் தத்துவத்திற்கு புறம்பானதால்) இந்த குறள் மட்டும்
மாணவர்கள் கற்க தகுதி இழந்து விட்டது.
*************************************
*************************************
கேழ்வரகு,மனித குல வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது!கேழ்வரகை உண்ணும் போது 1-
களியாக உண்ணலாம்,2-கூழாக தயாரித்து உண்ணலாம்.
இரண்டு வகை உணவுமே வெய்யிலாளி இனங்களின் நிரந்தர உணவு.கூழ் அமுதம் பற்றி
சங்க கால பாடல்களில் வருகின்றது.
தமிழக
கிராமங்களில் இத்தகைய உணவை உண்பவர்கள் குறைந்து வருகின்றனர்.காரணம்,இந்த
உணவை உண்ணும் மக்களை(ஒடுக்கப்பட்ட மக்கள்) முன்னேறிய(நிழலாளி மக்கள்) இன மக்களின் கேவலப்பேச்சுக்கு
பதிலளிக்க முடியவில்லை************************************************************
No comments:
Post a Comment