Monday, March 5, 2018

பகுத்தறிவாளர் பார்வையில் (திரு)க்குறள்



மந்திரம்,கவிதை,செய்யுள் என்பதெல்லாம் என்ன?
பாமரன் பேசும் வார்த்தைகளை பிரித்து, உடைத்து,பின் சேர்த்து பாடி,எழுதி வைத்து பாமரனை குழப்புவதே!
                                        -படைவீட்டார்
         பகுத்தறிவாளர் பார்வையில் குறள்
                *****************************
           எது உண்மை? எது பொய்? எது தேவை?
 
குறளில் மூடநம்பிக்கை!
குறளில் சாதியம்!
குறளில் பகுத்தறிவு!

திருக்குறள் ஒரு உலகப் பொது மறை! ஆம் மறை என்றாலே மறைப்பது!வேதம்,வேதத்தை சாமான்யன் அறியமுடியாது! அறியக்கூடாது! அதென்ன திருக்குறள்,இனி குறளென்றே சொல்வோம்!
வேதம் என்பது உரைக்கப்படுவது,வேதம் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.மொத்தத்தில் வேதம் புனிதமானது.எது புனிதம் என மக்களால் போற்றப்படுகிறதோ அதில் அய்யம் கொள்பவனை அந்நியனாக்கி விடுவர்!
குறளில் எது உண்மை? எது பொய்? எது தேவை? என அலசுவதே நமது நோக்கம்.மெய்ப்பியல்(pragmatism), உருப்பொருளியல்(materialism)  இவைகளை (திருக்)குறளில் தேடுவதே நமது நோக்கம்.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.(834)
மேலே கூறப்பட்ட குறளின் உண்மை பொருள் என்ன?
நாம் படிக்கும் நூலின் தன்மை உணர்ந்து ,உணர்ந்ததை பிறருக்கு சொல்ல முடியாமல் அல்லது உணர்த்த முடியாமல் இருப்பவர் பேதையிலும் பேதை.அந்த வகையில் நான் படித்த திருக்குறளின் உண்மை கருத்துக்களை மெய்ப்பியல் தன்மைக்கு உட்படுத்தியிருக்கின்றேன்

No comments: