Saturday, March 10, 2018

11-செய்நன்றியறிதல்



                       11-செய்நன்றியறிதல்

101-செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
     வானகமும் ஆற்றல் அரிது .

தான் யாருக்கும் உதவாமல் இருந்தபோது,தன்னை தேடி ஒருவர் உதவ வந்தால் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. இருப்பினும்,
இங்கே கைமாறுக்காக உலகத்தை எப்படி ஈடாக்க முடியும்?உலகத்தை(மக்களை) குறிப்பிட்ட படியால் வானத்தை இங்கே வம்புக்கு இழுக்கப்பட்டுள்ளது.வானத்தில் உயினங்கள் உள்ளதாக கற்பனை கொள்ள முடியாது.இது உருப்பொருள் தத்துவத்திற்கு புறம்மானது.இது தேவையற்றது.

102-காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
     ஞாலத்தின் மாணப் பெரிது.

காலம் அறிந்து ஒருவர் பெறப்படும் உதவி,அது சிறியதாக இருந்தாலும்,அது போற்றுதலுக்குறியது-இது தேவை.

103-பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
      நன்மை கடலின் பெரிது.

இவருக்கு உதவுவதால் தமக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது என எண்ணாமல் செய்யும் உதவி மிகப்பெரியது-இது தேவை .

104-தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக
     பயன்தெரி வார்.

தினையளவு செய்யப்படும் உதவிகளைக்கூட பனையளவு பயன் உள்ளதாக நினைத்து செயல்படுபவர் நன்றியுள்ளவராவார்-இது தேவை.

 105-உதவி வரைத்தன் றுதவி உதவி
     செயல்பட்டார் சால்பின் வரைத்து

உதவி என்பது செய்யப்படும் அளவினைப்ப பார்த்து கணக்கிடப்படுவதில்லை,அந்த உதவியை பெறுபவரின் பண்பைப்பொறுத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்-இது தேவை.

106-மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
     துன்பத்துள் துப்பாயார் நட்பு

மாசற்றவர்களின் உறவை மறக்க கூடாது,துன்பத்தில் துணை நின்ற, நிற்பவரின் நட்பை துறக்கவும் கூடாது.இது தேவை 

107-எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
     விழுமந் துடைத்தவர் நட்பு

தம் துன்பத்தை போக்கியவரை தான் வாழும் காலத்தில் நினைத்து வாழ்ந்தாலே அதுவே அவர் தலைமுறை முடியும் தூய்மையான நட்பாக கருதப்படும்,
ஆனால் ஏழு பிறப்புக்கும் அவர் நினைக்க வேண்டும் என்பது,உருப்பொருள் தத்துவத்திற்கு முரணானது.இது தேவையற்றது.

108-நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
     அன்றே மறப்பது நன்று

இந்தக்குறள் தெளிவாக புரியவைக்கிறது இதற்கு தனியா பொருள் கூற வேண்டியதில்லை-இது தேவை .

 109-கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
      ஒன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் நமக்கு நன்மை செய்திருந்தால்,பின்னாளில் ஏதாவது ஒரு காரணத்திற்காக நம்மை கொன்றுவிடுவது போல் தீமை செய்ய வந்தால் நாம் நம் மனம் புண்படாமல் அகன்று  விடவேண்டும்.-இது தேவை

110-எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு.

இந்த குறள் புரியும்படி உள்ளது,இதற்கு விளக்கம் தேவையில்லை.இந்த குறள் தேவை

இந்த செய்நன்றியறிதல் அதிகாரத்தில் 101,மற்றும் 107ம் குறட்கள் கற்க தகுதியற்றது.
                  **************************************
உணவு பஞ்சம் என்பது என்ன? அதை இளமையில் அனுபவித்தவருக்கே தெரியும்.நான் வாழ்நாளில் இரண்டு பஞ்சங்களை அனுபவித்தவன்.(1960-61,1970-71.)
எல்லாருக்கும் பசி இருக்கும், பசித்துக் கொண்டேஇருக்கும்,எந்த உணவும் எங்கும் கிடைக்காது.நான் அழுது கொண்டே இருப்பேன்,என் தாய்,எனக்கு முருங்கை கீரை, மரவள்ளிக்கிழங்கு,சுரக்காய்,அதன் இலை ஆகியவற்றை வேகவைத்து துவட்டி வைப்பார்கள்.  இரவு நேரங்களில் விதை நெல்லை குத்தி வேகவைத்து உப்பிட்டு ஆளுக்கு ஒருகரண்டி தட்டில்வைத்து வென்னீர் ஊற்றுவார்கள்!
இதை உணர்ந்த அன்றய பிரதமர் இந்திரா பஞ்சகாலத்தை சமாளிக்க IR8 நெல்லை நாடுமுழுக்க பயிரிடச் சொல்லி அதன் விளைச்சல் மிகுதியை 3 ஆண்டுகளுக்கு கிடங்குகளில் சேமித்து பின் மக்களுக்கு வழங்கி பஞ்சத்தை ஒழித்தார்!
                    **************************************

No comments: