Sunday, March 11, 2018

12-நடுவு நிலைமை



                            12-நடுவு நிலைமை

111-தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
   பாற்பட் டொழுகப் பெறின்

பகைவர், நண்பர்,அயலார், என பிரித்துப் பார்க்காமல் நடுநிலையோடு நீதி பின்பற்றப்படுமானால் அதுவே போதும்-இது தேவை

112-செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப் புடைத்து

நடு நிலையாளனின் செல்வம் அவன் தலைமுறை தலைமுறைக்கும் நன்மை பயக்கும்.இது தேவை.

113-நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்.
      
நீதியை விட்டு விலகுவதால் வரக்கூடிய நன்மை ஒருவனுக்கு தேவையில்லை,அதனை கைவிட்டு நடுநிலையை பற்ற வேண்டும்-இது தேவை.
                                
114-தக்கார் தகவிலர் என்ப தவரவர்
    எச்சத்தாற் காணப் படும்

இங்கே எச்சம் என்பதை ஒருவனுடைய பிள்ளைகளாக வும்  கருதலாம் ,பிள்ளைகளின் குணங்கொண்டோ அல்லது அவனுக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழோ அல்லது பழியோ அதைக்கொண்டு அவர் நடுநிலை தவறாதவரா? அல்லது தவறியவரா? என்பதனை அறியலாம்.இது தேவை.


115-கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி
                             
ஒருவருக்கு வாழ்வும் தாழ்வும் இயற்கையே,எந்நிலையிலும் நடு நிலை தவறாது உறுதியுடன் இருப்பதே பெரியோர்க்கு அழகாகும்.-இது தேவை.

116-கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
     நடுவொரீஇ அல்ல செயின்.

நடுநிலை தவறுதல் தப்பே இல்லை எனும் நினைப்பு ஒருவனுக்கு வருமானால்,அவன் கெட்டொழியப் போகிறோம்  என்று அவனுக்கே தெரியவேண்டும்.இது தேவை.

117-கெடுவாக வையா துலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

நடுநிலை தவறாமல் அறவழியில் வாழ்ந்த ஒருவருக்கு அதன் காரணமாக செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமேத் தவிரத் தாழ்வாக கருதாது.இது தேவை

(குறள் எண் 112-ல் நடுநிலை தவறாதவனின் செல்வத்திற்கு எப்பொழுதும்  அழிவில்லை எனும் பொருள் படி அமைந்துள்ளது,ஆனால் இங்கே இந்த 117-ம் குறளில் அறவழி வாழ்ந்தவனுக்கு வறுமை வந்தாலும் அவரை உலகம் போற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது ,முரணாகத் தெரியவில்லையா?

இந்த இரு குறட்களையும் ஒருவரேவா எழுதியிருப்பார்?
இது போன்று முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட குறட்பாக்கள் ஏராளமாக உள்ளன,ஒரு புலவர் பல  கொள்கைகள் கொண்டவராக இருக்க முடியாது.)
                                                        
118-சமன்செய்துசீர்தூக்குங்கோல்போல்அமைந்தொருபாற்
    கோடமை சான்றோர்க் கணி
                              
துலாக்கோல் நடு முள் எப்பக்கமும் சாயாமல் இருப்பது போல் எடைபோடுபவன் பார்த்துக்கொள்ள வேண்டும்,அவ்வாறில்லாமல் தனக்கு வேண்டியவனுக்கு ஒரு எடை வேண்டாதவனக்கு ஒரு எடை எனப் போடுவது போல், நடுநிலை தவறியவனைப் போல் நீதி வழங்குதல் கூடாது.இது தேவை.

119-சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மைப் பெறின்.

நேர்மையும்,நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருக்குமானால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.இது தேவை.

120-வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
     பிறவும் தம்போல் செயின்

பிறர் பொருளாக இருப்பினும் அதனை தன் பொருளைப்போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்வதே வணிக நெறியெனப்படும்.
                          
இதில் ஒரு உண்மை தெரிகிறது.அந்நாளில் ஒரு உணவுப்பொருளுக்கு மாற்று வேறு ஒரு உணவுப்பொருளை எடைக்கு எடை மாற்றம் செய்து வணிகம் செய்துள்ளனர் .அதாவது பொருளை பணத்துக்கு மாற்றம் செய்யவில்லை.இதுதான்(barter system) பண்டமாற்று முறை.இது தேவை.

எல்லாருமே விவசாயிகள்,வீணாய்த் திரிந்தவர்கள் யாருமில்லை! அந்தணர்களைத் தவிர  என பொருள் கொள்ளலாம்.உழைப்பாளிகளிடையே பஞ்சாங்கத்தை புகுத்திய பின்னரே ஆன்மீகம் செழித்தோங்கியது.
பஞ்சாங்கம் கிரேக்கர்களிடம் இருந்து ஆரியர்கள் கடத்தி வந்தனர்.இதுதான் உண்மை!

இந்த, நடுவுநிலைமை அதிகாரம் குறிப்பாக120-ம் குறள் பண்டைய தமிழர் எப்படி வாழ்ந்தனர் எனும் நாகரிக குறிப்பு காணப்படுகிறது.இந்த 10 குறட்களும் குறள் எண் (117-ல் முறண் தெரிந்தாலும்) கற்க தகுதி வாய்ந்தவையாகும் 
**************************************************************************************************************************************.
ஸ்படிக லிங்கம்   இது ஒரு ஏமாற்று வேலை! லிங்கம் என்றாலே ஆண் இனவிருத்தி உறுப்பு.ஆண்- பெண் இணையும் போது ஒரு அபூர்வ சக்தி உருவெடுக்கும்!இதை வணங்குவது தமிழரின் இயற்கை வழிபாடு.இது தவறான இறைவழிபாடு என்பது மேற்கத்திய நாட்டு மக்களின்(கிறித்துவம்&இஸ்லாம்) கொள்கை.

இந்த பழக்கம் உலகில் உள்ள 750 கோடி மக்களில் 120 கோடி மக்களுக்கும் கீழ் உள்ள இந்துக்களின் இறைவழிபாடு.சமத்கிருத-தமிழ் மொழி பேசும் மக்களுக்கு 3000-ம் ஆண்டுகளாக மொழி வேறுபாட்டால் பிரச்சினை,இருப்பினும் தமிழ் பேசும் வெய்யிலாளி இன மக்களின் பிள்ளைகளுக்கு பேர் சூட்டும் பொறுப்பை பார்ப்பனர்கள் பார்த்துக்கொண்டனர்.

சிவனை வணங்கும் குணம் கொண்ட தமிழ் மக்களின் பிள்ளைகளுக்கு,சிவனின் இனப்பெருக்க உருப்பான, ‘லிங்கத்தை பெயரின் பின் சேர்க்கையாக,சிவ லிங்கம்,மகாலிங்கம்,நாக லிங்கம் என சூட்டி மகிழ்ந்தனர்,இன்றும் இந்நிலை நீடிக்கிறது.

ஏமாளித் தமிழர்களை ஏளனம் செய்யும் பார்ப்பனர்களின் இந்த நய வஞ்சக செயலை எந்த எந்த ஆன்மிக தமிழனும் உணர்ந்த தாக தெரியவில்லை,இன்றும் உணரவில்ல!
                                    **************************************                    

No comments: