20-பயனில சொல்லாமை
191-பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
பலறும் வெறுக்கும் படியான பயனற்ற சொற்களை சொல்வபவன் எல்லாராலும் ஏளனமாக
கருதப்படுவான்.இது தேவை.
192-பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செயதலிற் றீது.
பயன் படா சொற்களை பலர் முன் சொல்வான் ஒருவன் எனில் அவன் தன் நண்பர்களுக்கு
தீமை செய்வதை விட கொடியது-இது தேவை.
193-நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
பயனற்றவைகளை பற்றி பலர் முன் ஒருவன் பேசினாலே அவனைப் பயனற்றவன் என
உணர்த்தக்கூடியதாகும்.இது தேவை .
194-நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன் சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
பயன் தரா பண்பற்ற சொல்லை பலர் முன் சொல்பவன் மகிழ்ச்சியை குலைத்து நன்மையை
அழிக்கும்.இது தேவை.
195-சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
நல்ல பண்புடையவர் என கருதப்படுபவர் பயனற்ற சொற்களை கூறுவாராயானால்,அவருடைய மதிப்பு
நீங்கி விடும்.இது தேவை.
196-பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.
பயனற்ற சொற்களை சொல்லி பயன் பெற
நினைப்பவன் மக்களில் அவன் பதர் போன்றவன்-இது தேவை.
197-நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
இனிமையாக பேசாமல் போகட்டும் ஆனால் பயனற்ற சொற்களை சொல்லாமல் இருப்பதே
மேல்.இது தேவை.
198- அரும்பய னையும் அறிவினார்
சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.
அரும் பயனையும் ஆய்ந்து அறியக்கூடியவர் ஆற்றல்படைத்தவர்,அவர் பெரும் பயன்
விளைவிக்காத எச்சொல்லையும் சொல்லமாட்டார்.இது தேவை.
199-பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
மாசற்ற அறிவுடையார் மறந்தும்கூட பயனற்ற சொற்களை சொல்லமாட்டார்.இது தேவை.
சொல்லிற் பயனிலாச் சொல்.
இது தெளிவாக உள்ளது இதற்கு தனி விளக்கம் தேவை இல்லை.இது தேவை.
இந்த ‘பயனில சொல்லாமை’ அதிகாரத்தில் பத்து குறளிலும் பயனிலா சொல் எது? பயனுள்ள சொல் எது? என
விவரிக்கப்படவில்லை.
ஒரு மனிதனிடம் இன்னொரு மனிதன் பேசும்போது கேட்பவர் மகிழ்ச்சி அடையும்
விதமாக பேசுவதுதான் பயனுடைய சொற்களா?
கேள்வி கேடகப்படும் மனிதன் கோபமுறும் அளவுக்கு சொற்களை பயன்
படுத்தக்கூடாதென்றால்,ஒரு மனிதனின் சந்தேகங்கள் எப்படி நிவர்த்தியாகும்?
அப்படியானால் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் போல் இந்த 10 குறட்களையும் பாவிக்க
வேண்டுமா?
மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இந்த
அதிகாரம் பயன் படுமா?
இருப்பினும் இனிமையாக பேசுவது பயனுடைய சொல் என பொருள் கொள்ளலாம். எனவே
இந்த, ‘பயனில சொல்லாமை’அதிகாரம் மாணவர்கள்
கற்க தகுதி வாய்ந்த குறட்களாகும்.
No comments:
Post a Comment