Saturday, March 17, 2018

30-வாய்மை



                             30-வாய்மை

291-வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
   தீமை இலாத சொலால்.

வாய்மை என்பது சொல் தவாறாமை.அந்த வாய்ச்சொல் பிற உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடாது.இது தேவை.
                           
292-பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.

பொய் என்றாலே அது ஒரு உண்மையை மறைத்து புலர்வது.ஆனால் பிறருக்கு நன்மை பயக்கும் எனில் உண்மையை மறைக்கலாம்.இது தேவை.

293-தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
   தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

ஒருவன் நெஞ்சம் பொய்யுரைக்காது.தனக்கு நன்மை பயக்க வேண்டி பொய் சொன்னால் பின்னாளில் அதுவே அவன் மனதை வருத்தும்.இது உண்மை,தேவை.

294-உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
   உள்ளத்து ளெல்லாம் உளன்.

தன்னெஞ்சம் உணர்த்துவது போல் உண்மையாக நடப்பாரேயானால் அவர் உலக்த்தார் உள்ளமெல்லாம் நிறைந்திருப்பார்.இது தேவை.

295-மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
   தானஞ்செய் வாரின் தலை .

மனமறிந்து ஒருவர்  உண்மை பேசுபவரே தானமும் தவமும் செய்பவரைவிட சிறந்தவர்.இது தேவை

296-பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
   எல்லா அறமும் தரும்.

பொய்யற்ற வாழ்க்கை ஒருவர் வாழ்ந்தாலேஅவரை அறியாமலே அவருக்கு எல்லா அறமும் பயக்கும்.இது தேவை .
                       
297-பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
        செய்யாமை செய்யாமை நன்று.

பொய் சொல்லாமல் வாழ்ந்தாலே போதும், அவன் பிற தர்மங்களை செய்யாமல் விட்டாலும் நல்லதுதான். இது தேவை.

298-புறந்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
      வாய்மையால் காணப் படும்.

நீரால் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வது போல்,  உண்மை பேசுவதின் மூலம் மனதை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம்.இது தேவை.

299-எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
      பொய்யா விளக்கே விளக்கு.

புற இருளை நீக்குவது விளக்கு,பொய் பேசாமல் இருப்பதே சான்றோர்க்கு அக இருளை  நீக்கும் விளக்கு.இது தேவை.

300-யாமெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
      வாய்மையின் நல்ல பிற
நான் (குறளை எழுதியவர்) கண்டவற்றுள் பொய் பேசாமல் வாழும் வாழ்க்கையை விட சிறந்தது இல்லை.இது தேவை.
வாய்மை  அதிகாரத்தின் பத்துக் குறட்களும் அற வாழ்க்கை வாழ விரும்பும்  மாணவர்களுக்கு தேவை.

No comments: