Friday, March 16, 2018

19-புறங்கூறாமை



                       19-புறங்கூறாமை

181-அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறா னென்றால் இனிது.

அறநெறியைப் போற்றாமல் ஒருவன் இருந்தாலும் தவறில்லை,ஆனால் அவன் பிறரைப்பற்றி புறங்கூறாமல் இருப்பது நல்லது.இது தேவை.

182-அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
     புறனழீஇப் பொய்த்து நகை.

அறம் என்பதே இல்லை என புறந்தள்ளிவிட்டு கொடூரமான செயல்களை செய்யும் ஒருவர் ,நேரில் பார்க்கும் ஒருவரை முகமலர பேசிவிட்டு ,அவர் சென்ற உடன் அவரைப்பற்றி பொல்லாங்கு பேசுவது அதைவிட கொடுமையானவர்.இது தேவை.

183-புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
     அறங்கூறும் ஆக்கந் தரும்.

புறங்கூறி ,பொய்பேசி வாழ்வதைவிட சாவதே மேல்-இது தேவை .

184-கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
     முன்னின்று பின்னோக்காச் சொல்.

ஒருவரது குறைகளை நேருக்கு நேர் எடுத்துக்கூறலாம்,ஆனால் அவர் சென்றவுடன் அவரைப்பற்றி குறை கூறக்கூடாது.-இது தேவை.

 85அறஞ்சொல்லும்நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
      புன்மையாற் காணப் படும்.

ஒருவனைப் பற்றி புறம் பேசும் தன்மை கொண்டவனைக் கொண்டே அவன் அறவழி சிந்தனையற்றவன் என்று அறியலாம்.இது தேவை.

186-பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
     திறன்தெரிந்து கூறப் படும்.

பிறர் மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான்  எனில் அவன் பழிச்செயல்களை கண்டறிந்து அவன்மீதே கூற நேரிடும்.இது தேவை .

187-பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
     நட்பாடல் தேற்றா தவர்.

இனிமையாக பேசி நட்பை தொடரத் தெரியாதவர்கள் புறங்கூறி நண்பர்களை இழந்துவிடுவர்-இது தேவை.

188-துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
      என்னைக்கொல் ஏதிலார் மாட்டு.

நெருங்கிப்பழகியவரின் குறைகளைக் கூட புறம்பேசி திரிபவர்கள்,அன்னியர் களையும் ஏசும் குணம் கொண்டவர்களாக இருப்பர்-இது தேவை.

189-அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
      புன்சொ லுரைப்பான் பொறை.

புறம் பேசி திரிபவர்களை நிலம் சுமப்பது கூட ஒரு அறச்செயலே.
நிலம் தாவரங்களையும் மிருகங்களையும் கூடத்தான் சுமக்கிறது,(நல்லவர்களையும் சுமக்கிறது தீயவர்களையும் சுமக்கிறது.இது எது தர்மம் எது அதர்மம் என பிரித்தறியும் தன்மை பூமி எப்படி உணரமுடியும்?இது உருப்பொருள் தத்தவத்திற்கு மாறானது).எனவே இது மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.
                               
190-ஏதிலர் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னு முயிர்க்கு.

பிறர் குற்றம் காண்பவர்கள் தமது குற்றத்தையும் ஒப்பு நோக்கினால் புறங்கூறும் பழக்கமும் போகும் வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்-இது தேவை.

இந்த புறங்கூறாமைஅதிகாரத்தில் 189-ம் குறள் மட்டுமே அக்கிரிணையான பூமியை உயர்திணைக்கு ஒப்புநோக்குகிறது, இது உருப்பொருள் தத்துவத்திற்கு மாறானது. எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.மற்ற ஒன்பது குறட்களும் பயனுள்ளவை
      ***************************************************************************************************************.
       உ.பி கூட்ட நெரிசல்; 24 பேர் பலி!
உழைக்கும் மக்கள் மனதில் கடவுள் சிந்தனையை ஊட்டி,அதிசயங்களை காணலாம்,ஐஸ்வர்யங்களை அள்ளலாம் எனும் பொய் விதைகளை தூவி ஆதாயம் காண நினைக்கும் போலி சாமியார்களை தண்டிக்க வேண்டும்.மக்கள் கூட்டங்களை மக்கள் காண நெரிசல் உருவாக்கி மரணத்தை தழுவுகின்றனர்.வசீகர வார்த்தைகளை வீசும் இதுபோன்ற போலி மனிதர்களை கைது செய்ய வேண்டும்,மாறாக காவல் அதிகாரிகளை பழிவாங்குவது மக்களை திசை திருப்பும் செயல்!
                   *************************************

No comments: