Saturday, March 10, 2018

10-இனியவை கூறல்



                              
                   10-இனியவை கூறல்

91-இன்சொல்லால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
   செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

ஒருவர் பேசும்போது வாய்ச்சொல்லில் அன்பும் வஞ்சனையற்றதாகவும்,வாய்மையுடையதாகவும் இருந்தால் அதுவே இன்சொல் ஆகும்.இது தேவை
                             
92-அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
    இன்சொலன் ஆகப் பெறின்.

வந்தவரை வரவேற்று இனிமையாக பேசி வழியனுப்புவதை விட அகம் குளிர ஒன்றைக் கொடுத்தனுப்புவது சிறந்த பண்பாகும்.இது தேவை.

93-முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
     இன்சொ லினதே அறம்.

பார்ப்பவர்களை,முகம் மலர நோக்கி அகம் மகிழ இனிய சொற்களை கூறுவதே அறம் சார்ந்த பண்பாகும்.இது தேவை.

94-துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
     இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

எவரிடத்திலும் இன்புற்று பேசுவோர்க்கு ,துன்பம் தறும் வறுமை வராது.இது உண்மை.

95-பணிவுடையான் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
     அணியல்ல மற்றுப் பிற.

பணிவும் இன்சொல்லும் கொண்ட ஒரு மனிதனுக்கு பிற அணிகலன் தேவை இருக்காது.இது உண்மை.
                             
96-அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்

இனிய சொற்களால் நல்ல காரியங்களை செய்து முடிக்கும் ஒருவனுக்கு அறம் பெறுகும்-இது உண்மை.

97-நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
    பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பண்பிலிருந்து நீங்கா நல்ல சொற்கள் கொண்ட ஒருவனுக்கு இன்பம் தந்து நன்மை பயக்கும்.இது தேவை.

98-சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
     இம்மையும் இன்பம் தரும்

பிறருக்கு துன்பம் விளைவிக்கும் சிறுமையிலிருந்து நீங்கி இனிய சொற்கள் கொண்டவனுக்கு இம்மை மட்டுமல்ல மறுமையிலும் இன்பம் தரும்.இம்மையிலே இன்புற்று இருப்பதே உருப்பொருள் தத்துவத்திற்கு உட்பட்டது, ஆனால் மறுமை என சுட்டுவது தேவையற்றது,இது தேவையற்றது.
                         
 99-இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
      வன்சொல் வழங்குவது .

பிறர் சொல்லும் இனிய சொற்களில் இன்பம் காண்பவன்,எதற்காக பிறருக்கும் தனக்கும் துன்பம் விளைவிக்கும் வன்சொற்கள் எதற்கு?அப்படி என்ன பயனை தந்துவிடப்போகிறது?இது தேவை.


100-இனிய உளவாக இன்னாத கூறல்
     கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

இனியசொற்கள் ஏராளமாக இருக்கும் போது ,பிறருக்கு துன்பம் தரும் கடும் சொல்லை சொல்வது,கனியை உண்ணாது காயை தின்பதற்கு ஒப்பாகும்-இது தேவை.

இந்த இனியவை கூறல் அதிகாரத்தில் 98-ம் குறள் தவிற மற்றவை கற்க தகுதியானது.
                           ******************************************
மனிதர்களில் இரண்டு வகை உண்டு 1-அசைவ உணவாளர்கள்,2- சைவ உணவாளர்கள்.காலப்போக்கில மனிதர்களுக்கு நாகரிக வளர்ச்சி,பிற உயிரைக்கொன்று மனிதன் பசியாறக்கூடாது எனும் நோக்கில் தாவர உணவை உண்டு வாழ்பவர்களை  சைவர்கள் என்றனர் ..ஆனால் வெறும் தாவர உணவு உண்டால் ஒரு உற்சாகம் இல்லை என்பதை உணர்ந்த மக்கள் அசைவ உணவான மிருகத்தின் பாலும் அதன் உப பொருளான நெய்யையும் சைவம் என வகைப்படுத்திக் கொண்டனர் .வெய்யிலாளிகளை ஏமாற்றும் வேலைதான் இது!

ஆனால் வெய்யிலாளி இனம் வெய்யிலில் வேலை செய்ய அசைவமே ஏற்றது என்பதை உணர்ந்துள்ளது.இருப்பினும் சைவமாக மாற்றிக்கொண்ட மிருகத்தின் பாலையும் நெய்யையும் பார்ப்னர்களின் வேள்விக்கு பயன் படட்டும் என பசுக்களை புனிதமாக்கிவிட்டனர்.சாணத்தை எரித்து சாம்பாலாக்கி அதை உடலில் பூசிக்கொள்வதும்,பசு மூத்திரத்தை கிருமி நாசினி என நம்பவைத்து, வெய்யிலாளி இனத்தை ஏமாளியாக்கி விட்டனர்.இன்னும் தன்னிலை உணராத வெய்யிலாளி இனமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
சைவ உணவோ,அசைவ உணவோ,இரண்டு உடலிலும் ஓரே நீச்சிதானே?இதில் எது உயர்ந்த சாதி?
                            **************************************                   

No comments: