Monday, March 12, 2018

15-பிறனில் விழையாமை



               15-பிறனில் விழையாமை

141-பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
    தறம்பொருள் கண்டார்கண் இல்.

உலகத்தில் அறம்பொருள் கண்டவர் ,பிறன் மனைவியிடத்து காமம் கொள்ள மாட்டார்.-இது தேவை

142-அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
      நின்றாரிற் பேதையா ரில்.

பிறன் மனைவியை அடைவதற்கு துணிந்தவர்கள் அறவழியை விடுத்து தீயவழியில் செல்லும் கடை நிலை மனிதர்களைவிட கீழானவர்கள்.-இது தேவை .

143-விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
     தீமை புரிந்தொழுகு பவர்.

விளிந்தார் என்றால் இங்கே செத்தார் என பொருள் கொள்ளப்டுகிறது.அந்த வகையில் நம்பி பழகியவரின் மனைவியிடம் சேர முயல்பவன் பிணத்துக்கு ஒப்பானவன் என பொருள் கொள்ளப்படுகிறது-இது தேவை .

144எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்.

எத்தனை பெருமை கொண்டவராயினும்,தவறு புரிகிறோம் என உணராமல் அடுத்தவன் மனைவியிடம் விருப்பம் கொள்பவன்  மதிப்பிழந்து போவான்.இது தேவை

 145- எளிதென இல்லிறப்பா னெய்துமெய்ஞ் ஞான்றும்
       விளியாது நிற்கும் பழி.

எளிதாக அடையலாம் என எண்ணி ஒருவன் ,பிறனுடைய மனைவியை அடையலாம் என நினைப்பவன் ,அழியாத பழிக்கு ஆளாவான்.-இது உண்மை,தேவை. 

146-பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
     இகவாவாம் இல்லிறப்பான் கண்.

பிறன் மனைவியிடம்  முறைகேடாக நடக்க நினைப்பவன்,பகைமை,பாவம்(தீமை),அச்சம் ,பழி ஆகிய நான்கும் அவனை தொடரும்.-இது தேவை .

147-அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
     பெண்மை நயவா தவன்.

அறவழியில் இல்லவாழ்க்கை மேற் கொண்டவன் எவன் எனில்,பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடாதவன்-இது தேவை

148-பிறன்மனை நோக்கா பேராண்மை சான்றோர்க்
     கறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

வேறு ஒருவன் மனைவியை காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம்,அறநெறி மட்டுமன்று அது ஒழுக்கத்தின் சிகரமாகும்.இது தேவை.

149-நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
     பிறற்குரியான் தோள்தோயா தார்.

பிறன் மனைவியின் தோளை தொடாதவன் எவனோ அவனே இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்கு தகுதியானவன்.இது தேவை.
                             
150-அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையான்
      பெண்மை நயவாமை நன்று.
                                
பிறன் மனைவியை விரும்பி நாட்டம் கொள்பவன் அறந்தவறியவன் செயலைவிட தீமையானதாகும்-இது தேவை.
இந்த, பிறனில் விழையாமை-பத்துகுறட்களும் மனிதனை நாகரிகப்படுத்தும் அறவழிகளை சொல்லித் தருபவை,கற்க தகுதி வாய்ந்தவை.
       **************************************************************************
கண்ணாடி வீட்டிலிருந்து கல் வீசலாமா?’ ஆசிரியர் ஹாஜாகனியின் கட்டுரையை(தினமணி) படித்தேன்.இவர் ஒரு , ‘அருவ சிந்தனையாளர்’(spiritual thinker),நமது இந்து தலைவர்களைப் போல.ஆனால் இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்டது தான் இஸ்லாம்மதம்!
நமது நாட்டிற்கு, பொது சிவில் சட்டம்பொருந்தாது என்பது இவருடைய வாதம்.உலகில் மிகப்பெரிய வல்லரசான,சீனா பொது சிவில்சட்டம் இயற்றி அனைத்து மத மக்களும் அமைதியாக வாழ வழிகாட்டவில்லையா?

அங்கே இஸ்லாமியர்கள்,புத்த மத மக்கள் அதிகம் வாழ்கின்றனர்,பூர்வ குடி மக்களின் மதமான, ‘கன்பூசியஸ்மக்களும் அமைதியாக, தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்கின்றனரே!
இங்கு முடியாது! ஏன் எனில்,நமது நாடு முதலாளித்துவ நாடு.ஆண்டை-அடிமை குணம் கொண்ட மக்கள் வாழும் நாடு.

                    **************************************
                       

No comments: