Thursday, March 22, 2018

37-அவா அறுத்தல்


                        37-அவா அறுத்தல்

361-அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
   தவாஅப் பிறப்பீனும் வித்து.

ஆசை என்பது(அவா) எல்லா உயிர்களிடத்தும் பிறவிதோறும் உண்டாகும் வித்து . இது உண்மை.

362-வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
   வேண்டாமை வேண்ட வரும்.

விரும்பும் போது பிறவா நிலையடைய வேண்டும்,ஆசைகளை ஒழித்தால் மட்டுமே இது முடியும்.இது மெய்ப்பியல்  தன்மைக்கு புறம்பானது எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.இது தேவையில்லை.

363-வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அஃதொப்ப தில்.

வேண்டாமை(விருப்பு வெறுப்பு அற்ற நிலை) போன்ற ஒரு செல்வம் இவ்வுலகில் இல்லை,அதற்கு ஈடு இணை இல்லை.இது தேவை.

364-தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
   வாஅய்மை வேண்ட வரும்.

தூய்மை என்பது அவா(ஆசை) இன்மை.அத்தூய்மை உண்மை பேசுபவருக்கே அமையும்.இது தேவை.

365-அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
   அற்றாக அற்ற திலர்.

அனைத்து ஆசைகளையும் துறந்தவர் துறவி ஆவார்.முற்றும் துறவாதவர் துறவியாக மாட்டார்.இது மனித குல வளர்ச்சிக்கு புறம்பான கொள்கை,இது மாணவர்கள் கற்க தகுதி இழந்து விட்டது.இது தேவையில்லை.

366-அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
   வஞ்சிப்ப தோரும் அவா.

ஒருவரை வஞ்சிக்கும் அளவுக்கு ஆசை பெருகிவிட்டால் அவருக்கு  அறம் கிட்டாது. ஆசைக்கு அடிமையாகாத அச்ச உணர்வோடு வாழவேண்டும்.இது தேவை.

367-அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
   தான்வேண்டு மாற்றான் வரும்.

பேராசை குணத்தை ஒழித்தாலே ஒருவனுக்கு கெடாமல் வாழும் வாழ்க்கை அமையும்.இது தேவை.

368-அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
   தவாஅது மேன்மேல் வரும்.

ஆசை இல்லதவர்க்கு துன்பம் வராது.ஆசை கொண்டால் வாழ்க்கையில் தொடர்ந்து துன்பம் வரும் .இது தேவை .

369-இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
   துன்பத்துள் துன்பங் கெடின்.

பேராசையை துறந்தாலே இன்பம், இடையறாமல் ஒருவனுக்கு கிட்டும்.இது தேவை.
                               
370-ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
   பேரா இயற்கை தரும்.

இயற்கையிலேயே ஒருவருக்கு அடங்காத ஆசை இருக்கும் .அதை அகற்றினாலே நீங்கா இன்பத்தை எய்துவர்.இது தேவை .

அவாவறுத்தல் அதிகாரத்தில் 362-ம் குறள் ஆசையை நீக்கினாலே மீண்டும் பிறவாமையை ஒழிக்கலாம் என்றும்.365-ம் குறள் முற்றும்(குடும்பம்) துறந்தாலே முக்தியடையலாம் எனும் பொருள் பட அமைந்துள்ளது,மனித குல வளர்ச்சிக்கு எதிரானது என்பதால் இந்த இரண்டு குறட்களும் மாணவர்கள் கற்க தகுதி இழந்து விட்டன,எனவே 362 மற்றும் 365 குறட்கள் தேவை இல்லை .
                  **************************************************
கோயில்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை1
இசுலாம் மதமும் இதைத்தான் சொல்கிறது.திருக்குறளில், ‘பெண்வழிச்சேரல்அதிகாரமும் இதைத்தான் கூறுகிறது!
பால்யே பிதிர்வசே விஷ்டேது
பாணிக்ரஹா யெளவ்வனே
புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது
நபஜேத் ஸ்த்ரி ஸ்வதந்த்ரதாம்
இது மநு ஸ்லோகம்.இதன் பொருள், குழந்தை பருவம் வரை அப்பன் சொல்வதை கேள்,மணமானதும் புருஷன் சொல்வதை கேள்,உனக்கு குழந்தை பிறந்ததும் உன் மகன் சொல்வதை கேள்!உனக்கு இதுதான் கதி,நீ சுதந்திரமாக வாழ தகுதியற்றவள்,ஆண் சொல்படி கேள்!
இங்கே பெண்ணுரிமை இயக்கங்கள் ஏன் மவுனிக்கின்றன?
ஆனால் இப்பொழுது மேடைகளில், ஆணுக்கு பெண் சமம்-என்று உரிமையில்,சொத்தில்,உல்லாசத்தில்,கல்வியில்,குடும்பத்தில் ,என பேசுகின்றனரே.
                          ************************************                            

No comments: