51-மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டாள்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
கணவனின் பொருள் வளத்துக்கு ஏற்றவாறு குடும்பம் நடத்துபவள் குடும்பத் தலைவனுக்கு துணை நிற்கும் மாண்பு பெற்றவள்.இது தேவை.
52-மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
நற் பண்புகள் அமையப்பெற்ற மனைவி இல்லையெனில் எத்தகைய சிறப்புகளும் அக்குடும்பத்துக்கு சேரா.இது தேவை
53-இல்லதென் இல்லவள் மாண்பானால்
உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
மாண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லா சிறப்பும் இருக்கும்.இது தேவை.
54-பெண்ணின் பெருந்தக்க யாவுள
கற்பென்னும்
திண்மை உண் டாக பெறின்
ஒரு பெண்ணுக்கு கற்பு எனும் உறுதிப்பாடு உண்டென்றால் இல்லறத்தில் அதைவிட
பெருமைப்படக் கூடியது எதுவும் இல்லை.இது தேவை.
பெய்யெனப் பெய்யும் மழை.
தெய்வத்தை தொழாதவள் கூட தன் கணவனை தொழுபவளாக இருந்தால், அவள் சொன்னால்
பெய்யாத மழையும் பெய்யும்.
இது பெண்மையை ஆண்களுக்கு அடிமைப்
பெண்ணாக வாழ பயிற்சி அளிக்கும் குறளாகும்.தெய்வம் என்பது உருப்பொருள்
தத்துவத்திற்கு அப்பாற் பட்டது .
இது மெய்ப்பிக்க முடியாத அருவ சிந்தனை.இது தேவையற்றது.
56-தற்காத்துத் தற்கொண்டாற் பேணி தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
தன் கற்பையும் காத்து தன் கொண்டவனையும் காத்து வாய்மை(சொற்காத்து)
தவறாதவள்,
உறுதி குலையாத பெண். இது தேவை
57-சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
ஒருவனுக்கு மகளீரை சிறைவைத்து காப்பது எந்த வகையிலும் அவனுக்கு
பயன்படாது.அவள் நினைத்தால் மட்டுமே தன் கற்பை காக்க முடியும். இது தேவை.
58-பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
இதுவரை பெண்களுக்கே அறிவுரை கூறிய குறள், தற்பொழுது
தற்கொண்டானுக்கு(கணவனுக்கு)நற்பண்புகள் அமைய வலியுறுத்துகிறது.நற் பண்புகள்
அமையப்பெற்ற கணவனை கொண்டவள் வாழ்க்கை சிறப்பானது. இது தேவை.
59-புகழ்புரிந் தில்லோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
புகழுக்குரிய வாழ்க்கை அமையப் பெறாதவர்கள் தம்மை பழித்து பேசுவோர் முன்
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் கூனி குன்றி போய் விடுவார்கள் .இது தேவை
60-மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
மங்கலம்-மகிழ்ச்சிதரும் வாழ்க்கை என்பது நன் மக்களைப் பெற்ற செயலாகும்.இது
தேவை.
இந்த ‘வாழ்க்கை துணை நலம்’ எனும் அதிகாரத்தில் குறள் எண் 55 மாணவர்கள் கற்க தகுதியற்றது
No comments:
Post a Comment