Saturday, March 17, 2018

27-தவம்



                      27-தவம்

261-உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
     அற்றே தவத்திற் குரு.

எதையும் தாங்கும் இதயத்தை பெற்றிருப்பதும் எந்த உயிர்க்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும் தான் தவம்என்று கூறப்படும்.இது தேவை

262-தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
      அஃதிலார் மேற்கொள் வது. 

கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள் தவத்தை மேற்கொள்வது வீண் வேலையாகும்.இது தேவை.

263-துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்க்கொன்
      மற்றை யவர்கள் தவம்.

துறவிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்பதற்காகவே இல்லற வாழ்க்கை வாழ்பவர்கள்,மற்றவர்கள் தவ வாழ்வை துறக்க கூடாது. (ஒரு மனிதன் மேற்கொள்ளும் இல்லற வாழ்க்கையே உலகின் மிகச் சிறந்த தர்மம்,ஆனால் துறவற வாழ்க்கைக்கு துணை போவது என்பது தேவையற்றது.இந்த குறள்  தேவையற்றது.
                             
264-ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
      எண்ணின் தவத்தான் வரும்.

பகைவர்களை மாற்றவும் நண்பர்களை பெருக்கவும் எண்ணினால் ,தவத்தால் அதைச் செய்ய முடியும்.இது சாலமன் பாப்பையாவின் உரை.
ஆனால் கலைஞரும்,மூ.வ வும் எழுதிய உரையில் தவமெனும் வலிமையால் பகைவர்களை வீழ்த்தவும் நண்பர்களை காக்கவும் தவத்தால் முடியும் என பொருளுரைத்துள்ளனர்.
                              
தவ வாழ்வு வாழ்பவர்களுக்கு பகைவர்கள் எவ்வாறு தோன்ற முடியும்? இது முரணாக தெரிகிறதே?

எவ்வுயிர்க்கும் தீங்கு செய்வது இல்லைஎன்பது  தவ வாழ்வு வாழ்பவரின் குறிக்கோள் ,அவ்வாறு இருக்க இல்லாத பகைவர்களை, இருப்பார்கள் போல் பொருள் கொள்வது தவசிகளை கொச்சைபடுத்துவது போல் ஆகாதா? எனவே இக்குறளில் பொருள் குற்றம் காண்டால்  மாணவர்கள் கற்க தகுதி இழந்து விடுகின்றன.சாலமன் பாப்பையாவின் பொருளைக் கொண்டால் இக்குறள் கற்க தகுதி வாய்ந்தது.இது தேவை.

265-வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
       ஈண்டு முயலப்ப படும்.

தவமிருந்தால் வேண்டியதைப் பெறலாம் ,சரி எல்லாமே தவமிருந்தால் வாழ்க்கைக்கு ஆதார அடிப்படைகளான உணவு,உடை,உறைவிடம் பெறுவது எங்கணம் சாத்தியமாகும்?இக்குறளில் பொருள் குற்றம் உள்ளது,எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதியற்றது.
                           
266-தவஞ்செய்வார் தங்கருமஞ்  செய்வார்மற் றல்லார்
      அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

இக்குறளில் தவஞ் செய்பவர்கள் யாரெனில்,தம் கடமைகளை தவறாது செய்பவர்கள்.இதில் ஒருவரின் கடமைகள் யவை,யவை என வரையறுக்கப்படவில்லை.எனினும் அடக்கம்,அன்பு நெறியும் துன்பங்களை தாங்கும் பொறுமையும் தவம் செய்பவர்கள் கடமை என இக்குறளுக்கு பொருள் கொண்டால் இது கற்க தகுதி வாய்ந்தது.
                          
267-சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
   சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

ஒரு தங்கத்தை சுடசுட ஒளிவிடும் அதுபோல் தவமிருப்பவர்கள் தங்களுக்கு வரும் துன்பங்களை தாங்க தாங்க வாழ்வில் ஒளி வீசுவர்.

அஃரிணையான தங்கத்தை உயர்திணையான மனிதர்களை ஒப்பிடுவது உருப்பொருள் தத்துவத்திற்கு மாறானது,எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.

268-தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
       மன்னுயி ரெல்லாந் தொழும்.

தனது உயிர்,என்கிற பற்றும் தான் என்ற செறுக்கும்  அற்றவர்களை இவ்வுலகம் புகழ்ந்து பாராட்டும்.இது தேவை.

269-கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
      ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

தவம் செய்வதால் மரணத்தை வெல்லும் ஆற்றல் பெறுவர்.இது உருப்பொருள் தத்துவத்திற்கு மாறானது.எனவே  இக்குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது .

270-இலர்பல ராகிய காரணம் நோற்பர்
   சிலர் பலர் நோலா தவர்.

உலகில் தவம் செய்பவர் சிலரே,அதாவது பிறர்தரும் தீமைகளை பொருத்துக் கொள்பவர் சிலரே,ஏதுமற்றவர்கள்(நோன்பற்றவர்கள்) ஏழைகளாக இருப்பதற்கு இதுவே காரணம்.இது தேவை.

தவம் என்பது மனிதர்களுக்கு அத்தியாவசிமானது என பொருள் கொண்டால் யாவரும் தவ வாழ்க்கை வாழ்வது என்பது இயலாத காரியம்.உழைப்பாளிகள் தவ வாழ்க்கை வாழ முடியாது! உழைப்பவரின்றி இவ்வுலகம் இயங்காது.எனவே குறள் எண் 265,267 மற்றும் 269 குறட்கள் மணவர்கள் கற்க தகுதி இழந்து விட்டது.
                         **************************************

திரு நீற்றை நாம் விதிப்படி அணியவேண்டும்.இதை அணிவதால் ஆணவம்,கன்மம்,மாயை என்ற மும்மல நீக்கம் பெறலாம். காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம் ஆகிய அறுபகையும் நீங்கும்...!இது பெரிய புரணம்.ஆனால் திரு நீறு இட்டவர்களெல்லாம் கோபம் காமம் நிறைந்து காணப்படுகின்றனரே ஏன்?
அது சரி! சிலை களுக்கு ஏன் திரு நீறு அணிய வேண்டும்? கடவுள்களும் நம்மைபோல மும்மலமும்,அறுபகையும் கொண்டவைகளா?
 ஒரு தேநீர் கடைக்காரன்,தன் கொதிகலனுக்கு(பாய்லர்) ஏன் திருநீரு இடவேண்டும்?
                     **************************************

No comments: