Friday, March 16, 2018

23-ஈகை



                              23-ஈகை

221-வறியார்க்கொண் றீவதே ஈகைமற் றெல்லாங்
     குறியெதிர்ப்பை நீர துடைத்து.

ஈகை என்பது இருப்பவர்கள் வறியவர்களுக்கு வழங்குவது.மற்றவர்களுக்கு வழங்கப்படுவதெல்லாம் ஏதோ ஆதாயத்துக்காக எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்-இது தேவை.

222-நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
      இல்லெனினும் ஈதலே நன்று.

தானம் செய்தால் மேலுலகம் என்று கூறப்படுவது கிட்டிவிடப்போவதில்லை.எனினும் பிறருக்கு கொடுத்து வாழ்தலே சிறந்த வாழ்க்கையாகும்.-.

மேலுலகம் என்பதெல்லாம் பொய் என்பது இங்கே நிறுபணமாகிறது.இக்குறள் உருப்பொருள் தத்துவத்திற்கு உடன் பாடானது அல்ல, கற்க தகுதியற்றது

223-இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
      குலனுடையான் கண்ணே யுள.

தமக்கு வறுமையால் துன்பம் ஏற்பட்டாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் பிறருக்கு உதவுவது உயர்ந்த குடி பிறந்தாரின் பண்பாகும்.-இது தேவை.

224-இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
      இன்முகங் காணு மளவு.

இரக்கப்படுதல் இனிதல்ல,இரப்பவரின் மலர்ந்த முகங்காணுதலும் கொடியதே.இது தேவை.


225-ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
   மாற்றுவா ராற்றலின் பின்.

நோன்பை கடைபிடிப்பதை விட பசியில் இருப்பவனுக்கு உணவளித்தலே சிறந்த நோன்பாகும்.இது தேவை.

226-அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
       பெற்றான் பொருள்வைப் புழி.

பசியிலுள்ள தவ வலிமை உடையாரின் பசி யை,போக்கும்  ஒருவர்  ஆற்றலுக்கு மேலும் வலு உண்டாகும்-

தவத்தால்,அதாவது  பசியோடு கடவுளை வணங்குதல் என்பது ஏற்புடையதல்ல,தன்னுடைய உடல்பலமும் போய், பிறருக்கு உடலால் உதவிடும் தன்மையும் போகும் ஒருவருக்கு என்ன தவ வலிமை கிடைத்துவிடும்?  அவருக்கு இறைவன் என்னமாதிரி வலிமை தருவார் என இது வரை உலகம் கண்டதில்லை,எனவே மெய்ப்பியல் தன்மை யற்ற இந்த குறள்  தேவை இல்லை.

227-பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
      தீப்பிணி தீண்ட லரிது.

பகிர்ந்து உண்ணும் பழக்கம் கொண்டவனை பசி எனும் கொடிய நோய் அணுகுவது இல்லை.இது உண்மை மற்றும் தேவை

228-ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
      வைத்திழக்கும் வன்க ணவர்.

தாம் சேர்த்து வைத்துள்ள பொருளை பிறருக்கு கொடுக்காமல் ,அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றோர் பிறருக்கு வழங்குவதால் ஏற்படும் இன்பத்தை  அறியமாட்டாரோ?இது தேவை.
                          
 229-இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
      தாமே தமிய ருணல்.

பிறருக்கு பசியை போக்குவதால் தான் சேர்த்த செல்வம் குறைவுபடுமோ என எண்ணி தானே உண்ணும் குணமுடையவன் ,இரந்து நிற்பவனைக் காட்டிலும் கொடுமையானவன்-இது தேவை.

230-சாதலின் இன்னாத தில்லை இனித்தூஉம்
      ஈத லியையாக் கடை.

வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத நிலை மனத்துன்பம் அளிக்கும்,இது சாவு எனும்(மரண பயம்) துன்பத்தைவிட அதிகமானது.இது தேவை.

இந்த ஈகைஎனும் அதிகாரத்தில்,குறள் எண் 222&226 தவிர ஏனைய 8 குறட்க்களும் மாணவர்கள் கற்கும் தகுதி படைத்தது.
         ****************************************************************************************
இந்துக்களின் நோன்பு நாட்கள் இயற்கையோடு இணைந்த்து எனக்கூறுவர்,சரி... இருக்கட்டும்!
பல விழாக்கள் காட்டுமிராண்டித்தனமானது,குறிப்பாக தீமிதி திருவிழா!
தீயை மிதிப்பதால் ஒருவன் சாதிக்கப்போவது என்ன?இதுபோன்ற தீமிதி விழாக்களில் பார்ப்னர்கள் பங்கேற்பதில்லையே?
திரவுபதி காலத்திலிருந்தே இல்லை,சத்திரிய பாஞ்சாலியை உசுப்பேத்தி சத்திரியர்களை அழிக்கும் தங்கள் குறிக்கோளை யாதவ கிருஷ்ணன் மூலம் நிறைவேற்றிக் கொண்டனர்.திரவுபதன் வாரிசுகளான இன்றய சத்திரியர்கள் தான் திரவுபதிக்காக தீமிதி விழா எடுக்கின்றனர்
அறிவியல் மதம்  என மார்தட்டிக்கொள்ளும் இஸ்லாமியரும் மொகரம் நாளில் தீமிதி விழா எடுக்கின்றனரே,அவர்களும் அறிவிழந்துவிட்டனரோ!
                                   **************************************

No comments: