21-தீவினையச்சம்
201-தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.
தீவினை செய்ய தீயவர்கள் அஞ்சமாடார்கள்,தீவினையால் மகிழ்ச்சி
உண்டாகுமானாலும் ,மேலோர் அதனை செய்ய அஞ்சுவர். இது தேவை.
202-தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
தீய செயல்கள் தீமை விளைவிக்கும்,என்பதால் அத்தீய செயல்கள் தீயைவிட கொடுமையானது
என அஞ்சி நடப்பர்.இது தேவை .
203-அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ் செய்யா
விடல்.
பழிக்கு பழி என செய்யாமலிருந்தால் அவரே முதன்மையான அறிவாளி-இது தேவை.
204-மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் மற்றவர்கட்கு கேடு செய்ய கூடாது.அப்படி நினைத்தால் அவனை அறம்
சூழ்ந்து கேடு விளைவிக்கும்.இது தேவை.
205-இலனென்று தீயவை செய்யற்க செயின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து.
இல்லாதவன் தீய செயல்களை செய்தால் மீண்டும் அவன் வறுமையில் வாடவேண்டி
வரும்-இது தேவை
206-தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்பால
தன்னை அடல்வேண்டா தான்.
தனக்கு வேதனையே கூடாது என எண்ணுபவன் அவனும் அதே வேதனை தரும் செயல்களை
பிறருக்கு செய்யாமல் இருக்க வேண்டும்.-இது தேவை .
207-எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.
பகைவரிடத்தில் தப்பி
வாழ்ந்தாலும் ,அவர் செய்த தீய செயல்கள் அவரைத் தொடர்ந்து வருத்திக் கொண்டே இருக்கும்.இது
தேவை.
208-தீயவை செய்தார் கெடுதல்
நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.
ஒருவனுடைய நிழல் அவனுடன் ஒன்றியிருக்கும். அதுபோல தீய செயல்கள் செய்பவனை ஒட்டிய
தீமையும் தொடரும்.
இங்கே ஒருவனுடைய நிழல் என்பது பகலில் தான் பார்க்க முடியும்.இரவில்
காணமுடியுமா?எனவே இங்கே தீய செயல்களை செய்பவனுக்கு தீமைகள் நிழலைப்போல் தொடரும் எனும்
உவமானம் பொருத்த மற்றதாகும்.இருப்பினும் கற்க தகுதி வாயந்த திருக்குறள் தான் .
209-தன்னைத்தான் காதலா னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.
சுய நல விரும்பிகள் தீய செயல்கள் பக்கம் சிறிதளவு கூட நெருங்க கூடாது.இது தேவை.
210-அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
பிறருக்கு தீங்கு விளைவிக்காதவனுக்கு எந்த கேடும் நிகழாது-இது தேவை
இந்த ‘தீவினையச்சம்’அதிகாரத்தின் அனைத்துக்
குறட்களும் கற்க தகுதி வாய்ந்தவை.
*************************************************************************************************
எல்லா மத கடவுள் வழி பாட்டுக் கொள்கையும் ஆன்மிக சிந்தனையும் மக்களை என்ன பாடு படுத்துகின்றன பாருங்கள்.1500 ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ மத போதகர்கள் உள்ளொன்று வைத்து பிறமொன்று பேசி திரிந்ததால்,முகமுது நபி அவர்கள் சீறிய முயற்சியில்,கிறித்தவர்கள் பேசிய மொழியும் வேண்டாம் அவர்கள் எழுதும் எழுத்தும் வேண்டாம்,பைபிளும் வேண்டாம்,அவர்கள் வழிபடும் மேரியும் வேண்டாம்,ஏசுவும் வேண்டாம் என புதிய சிந்தனையில் இப்போதுள்ள இஸ்லாம் மதத்தை உருவாக்கினார்.
எல்லா மத கடவுள் வழி பாட்டுக் கொள்கையும் ஆன்மிக சிந்தனையும் மக்களை என்ன பாடு படுத்துகின்றன பாருங்கள்.1500 ஆண்டுகளுக்கு முன் கிறித்துவ மத போதகர்கள் உள்ளொன்று வைத்து பிறமொன்று பேசி திரிந்ததால்,முகமுது நபி அவர்கள் சீறிய முயற்சியில்,கிறித்தவர்கள் பேசிய மொழியும் வேண்டாம் அவர்கள் எழுதும் எழுத்தும் வேண்டாம்,பைபிளும் வேண்டாம்,அவர்கள் வழிபடும் மேரியும் வேண்டாம்,ஏசுவும் வேண்டாம் என புதிய சிந்தனையில் இப்போதுள்ள இஸ்லாம் மதத்தை உருவாக்கினார்.
அதுமட்டுமல்ல பக்கத்து நாட்டில்(ஆப்கன்) இந்துக்களும் புத்தர்களும்
பின்பற்றிய மத கோட்பாடுகளும், சடங்குகளும் முகமது நபிக்கு அதிக எரிச்சலைத் தந்தது. இந்துக்களின்
பழக்கவழக்கங்களுக்கு எதிர்மறையான மத சடங்குகளை உருவாக்கினர்.சில நாடகளில் முகமது
நபியின் பங்காளிகள் போட்டி இஸ்லாம் மதங்களான,சுன்னி,குர்து,ஷியா போன்ற உட்பிரிவுகளை
உருவாக்கினர்.
அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாமியர்களின் இனப்போர் ஓயவில்லை.வீரம் என
சொல்லி தன் இன மக்களையே வெட்டி சாய்த்தனர்,இன்று சுட்டு
மடிகின்றனர்.இந்த முரட்டு மனிதர்கள்!
மதம்
சார்ந்த மனிதர்களுக்கு சுய சிந்தனை இருப்பதில்லை.குர்து,சுன்னி,ஷியா,சபி போன்ற மக்கள் ஒரே கடவுளை வணங்கினாலும்,இன/சாதி
வெறி மேலோங்கி நிற்கின்றன, ****************************
No comments:
Post a Comment