22-ஒப்புரவறிதல்
211-கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.
இந்த உலகத்தில் மழைக்கு யாரும் கைமாறு செய்வதில்லை,மழைப்போன்று செய்பவர்களுக்கு
கைமாறு வேண்டாதவை-இது தேவை
212-தானாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.
தான் சேர்த்த பொருளெல்லாம் ஒரு தகுதி வாய்ந்தவனுக்கு பயன் பட வேண்டும்-இது
தேவை
213-புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
புத்தேளுலகம்(புதிய ஏழு உலகம்)-தேவருலகம் என பொருள் கொண்டு, ஒப்புரவு-பிறருக்கு
உதவிடும் பண்பு- உழைக்க முடியாதவர்களுக்கு உதவுவது போன்ற நல்ல செயல்களை பெறுவது
கடினம்.
தேவருலகம் என்பது உருப்பொருள் தத்துவத்திற்கு மாறானது,எனவே இக்குறள் மாணவர்கள்
கற்க தகுதி இழந்துவிட்டது.
214-ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
ஒத்தறிவான் என்பதற்கு ஒப்புரவாளனாக கருதி பொருள் கொள்ள்படுகிறது.அவ்வாறு
பிறருக்கு உதவாதவன் பிணத்துக்கு ஒப்பாவான்.இது தேவை.
215-ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
பொது நலனைப் பேணுபவனே பேரறிவாளன்,அவனிடம் உள்ள செல்வமானது,ஊர் பொது கிணற்று
நீரைப்போன்றது-இது தேவை.
216-பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடைய யான்கண் படின்.
ஊரின் நடுவே பயன் தரும் மரம் பழுத்திருந்தால் ஊருக்கே பயனளிக்கும்,அதுபோல ஒப்புரவாளனின்
செல்வம் எல்லாருக்கும் பயன் படும்-இது தேவை.
217-மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
மருத்துவத் தன்மை கொண்ட மரத்தின் எல்லா பாகங்களும் பயன்படுவது போல
ஒப்புரவாளனின் செல்லவம் பிறருக்கு பயன் படும்-இது தேவை.
218-இடனில் பருவத்தும் ஒப்புரவறு கொல்கார்
கடனறி காட்சி யவர்.
வறுமை வந்தாலும் மனம் தளரா ஒப்புரவாளர் ,கடமை உணர்ந்த தகைமையாளர் –இது தேவை.
219-நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு
ஒப்புரவாளன் வறுமை நிலை எய்தினால்,பிறருக்கு உதவ முடியவில்லையே என
வருந்துவான்-இது தேவை.
220-ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
ஒப்புரவாளனுக்கு (பிறருக்கு உதவிடும்
குணம் கொண்டவன்) ஒப்புரவால் கேடு
வரும் எனில் ,தன்னை விற்றாவது அந்த கேட்டை வாங்கிக் கொள்வான்.இது தேவை
‘ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் குறள் எண் 213
மட்டும் மேலுலகம் உள்ளது போல் ஒப்புநோக்கியதால் இக்குறள் உருப்பொருள்
தத்துவத்திற்கு மாறானது,எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது. மற்ற 9 குறட்களும் பயனுள்ளவை.
**************************************************
ஓட்டுநர் இல்லாமல் ஓடும் ட்ராக்டர்!
ஓட்டுநர் இல்லாமல் ஓடும் ட்ராக்டர்!
அந்த நாட்டுக்காரன் வாரத்திற்கு ஒருமுறைதான் சர்ச்சுக்கு போறான்,மற்ற நாட்களில்
சிந்திக்கிறான்,அறிவியலில் அசத்துகிறான்!
இஸ்லாமியரும், இந்துக்களும் முப்பொழுதும் இறைவழிபாட்டில் காலத்தை கழிக்கிறான்,வறுமையில் வாடுகின்றான்,கடவுள் விட்ட வழி என
புலம்புகின்றான்.
நம்ம ஆட்கள் அப்பொல்லோவுக்கும் போறான், ஆண்டவனையும்
கெஞ்சுகின்றான்ரான்,மண் சோறு சாப்பிடுகின்றான்,அவன் கண்டுபிடிச்ச ட்ராக்டருக்கு ஆயுத பூசை
போடுகின்றான்,ஆடாத ஆட்டம் போட்டு அடங்கிப்போறான்!
No comments:
Post a Comment