31-வெகுளாமை
301செல்லிடத்துக்காப்பான்சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவா லென்
‘அருளுடைமை,தவம்’ போன்ற அதிகாரங்களை எழுதியவரா இந்த அதிகாரத்தை எழுதியிருப்பார்.?
அங்கு சினமே கூடா தென்றவர்;சினம் அறத்திற்கு புறம்பானது என கூறியவர், இங்கே சினத்தை எங்கே
பயனூட்டுவது அல்லது பயனற்றதாக்குவது என விவரிக்கின்றார்.
உலகில் சினம் கொள்ளா மனிதர்களையே பார்க்க முடியாது.சினம் என்பது மிருக குணம்,அதனின்று விடுபட்டு அன்பான அற
நெறி கொள்பவன்தான் நாகரிக மனிதன்.
எனவே இந்த குறளுக்கு சினம் கொள்ளுமிடத்தில் சினமே கொள்ளவேண்டாம்,மற்ற இடத்தில் சினம்
காக்க வில்லை எனில் அவன் சீர் கெட்டுப்போவான் என்பதே இதன் பொருள்.இது தேவை.
302-செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.
பலம் கொண்ட மனிதர்களிடம் சினம் கொண்டால் கேடு உண்டாகும், பலமில்லா வர்களிடம்
சினம் கொண்டால் பாவச்செயல் உண்டாகும்.இது தேவை.
303-மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
யார் மீது சினம் கொண்டாலும் தீய விளைவுகள் உண்டாகும்.இது தேவை.
304-நகையும் உவகையும் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.
சினம் கொள்பவர்களிடத்தில் முக
மலர்ச்சியும் இருக்காது,அகமகிழ்ச்சியும் இருக்காது.இது தேவை .
305-தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
சினம் ,சினம் கொள்பவனையே அழிக்கும்.இது தேவை .
306-சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புனையைச் சுடும்.
சினம் கொண்டவருக்கு ஆதரவாக நிற்கும் இன ஒற்றுமை பாதுகாக்க வேண்டி நிற்பவர்களையும்
சினம் அழித்துவிடும்.இது தேவை.
307-சினத்தை பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைப்பிழையா
தற்று.
சினத்தை ஒரு பெருமையாக கருதும் குணம் கொண்டவன், அவன் நிலத்தை கையால்
அறைந்தால் ஏற்படும் வலி போன்றது.இது தேவை.
308-இணரெரி தோய்வன்னா இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
சினங் கொண்டு ஒருவருக்கு துன்பத்தை விளைவித்து விட்டோமே என மனம் வருந்தி,அவரிடம் உறவு கொள்ள வரும் போது ,சினம் காப்பதே நல்லது.இது தேவை.
உள்ளான் வெகுளி யெனின்.
உள் மனம் சினம் கொள்ளாமலிருந்தால் ,எண்ணிய எண்ணமெல்லாம்
ஈடேறும்.இது தேவை .
310-இறந்தார் இறந்தா ரமையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
சினம் துறந்தவர் துறவி.எல்லையற்ற சினம் கொள்பவர் இறந்தவர்க்கு
ஒப்பாவார்.இது தேவை.
மனிதர்களிடையே இருக்கும் மிருக குணங்களின் முதன்மையானது சினம்.சினம்
துறந்தவர் துறவி மட்டுமல்ல முதிர்ந்த நாகரிக சிந்தனையாளர்.சினம் வாழும் மனதில்
அன்பு வாழாது இருவேறு குணங்களான சினத்தையும் அன்பையும் மனிதன் பெற்றிருப்பது தான்
இல்லற மனிதன். ‘வெகுளாமை’ அதிகாரத்தின் பத்து குறட்களும் மனித குலம் கற்க கடமைப்பட்டது.
**************************************************************************
உலகில் ஒழிக்கப்படவேண்டிய பிரபலமான விஷயங்கள்,1-பள்ளி,கல்லூரிகளில் விளையாட்டு
பாடங்கள்.2-விளையாட்டுகளில் முதன்மையாக வருபவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்குவது,3-குத்துச் சண்டை
போட்டி,4-வாள்வீச்சு
போட்டி,5-வில்-அம்பு
போட்டி,5-துப்பாக்கி
சுடும் போட்டி,6- கிரிகட்,7- கபடி,8- மாடுபிடி போட்டி,9- இறுதியாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற நடத்தும்
பயிற்சிகள்,போன்ற அறிவியலுக்கு புறம்பான பயிற்சிகளை தடை செய்யப்படவேண்டும்!உடற்
பயிற்சிக்கு மட்டுமே விளையாட மாணவர்களை அனுமதிக்கலாம்!
**************************************
No comments:
Post a Comment