Wednesday, March 21, 2018

36-மெய்யுணர்தல்


                36- மெய்யுணர்தல்

351-பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
   மருளானாம் மாணாப் பிறப்பு.

பொருளில்லா (உருப்பொருள் இல்லா) வற்றை,அருவத்தை உணர்ந்து மெய்ப்பொருள் என நம்புகிறவன் வாழ்க்கை சிறப்பாக அமையாது.இது தேவை

கடவுளை உருப்பொருளாக நினைத்து பாடப்பட்ட செய்யுள்கள் ஏராளம்,ஏன் ஏராளமான குறட்களும் உள்ளண.மெய்யுணர்தல் எனும் அதிகாரம் மனிதர்களுக்கு பகுத்தறியும் சிந்தனை வளர்க்கும் விதமாக உள்ளது.
துறவு அதிகாரம் பாடியவர்தான் , ‘மெய்யுணர்தல் அதிகாரம் பாடினார் என நாம் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

மனித குலத்திற்கு ஒரு செய்தி(message) சொல்பவர் இருவேறு தத்துவங்கள் கொண்டவராக இருக்க முடியாது.

உதாரணத்திற்கு முதன் முதலில் உலகம் உருண்டை என புரட்சிகரமான கருத்தை சொன்னவர், ‘கலிலியோ அந்த கருத்தை அவர் இறக்கும் வரை மாற்றிக்கொள்ளவில்லை.எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் இறுதி வரை தன் கருத்தை உலகம் உருண்டைதான் என பதிவு செய்தார்.இன்று அதுதான் உண்மை என உலகம் நம்புகிறது.

அதே கலிலியோ இன்னொரு இடத்தில் உலகம் தட்டையாக கூட இருக்கலாம் என சொல்லவில்லை.அது போலத்தான் புலவர்களும் தான் உணர்ந்த தத்துவங்களை மக்கள் உணர பாடிவைக்க முடியும் .இடத்துக்கு இடம் மாற்றி மாறுபட்ட சிந்தனைகளை பாடினால் ,அவருக்கு பேர் பைத்தியக்காரன் எனும் பட்டம்தான் மிஞ்சும்.

பல புலவர்கள் பல கருத்துக்களை பாடிய தொகுப்புதான்(collection of thoughts) இன்று நாம் படிக்கும் ‘குறள்’, என்பது தெளிவாகிறது அல்லவா?

1330 குறட்களையும் ஒருவரே பாடியிருப்பார் என பல தரப்பட்ட கருத்துக்களை ஒன்றாக்கி குழப்பிக்கொள்ள கூடாது.
குறட்களை,கீழ் கண்டவாறு பிரித்துக்கொள்ளலாம்.
1- மெய்ப்பியல் (வாழ்வியல்- ஊன் உடம்பு-pragmatism) தத்துவ குறட்கள்,

2-அரு உடம்பு (பிரசன்னம்) அல்லது நுண்ணுடம்பு(அருவ இயல்-spiritualism) தத்தவம் .

3-அறம் சார்ந்த (பகுத்தறியும்-rationalism) தத்துவம்

4-அரசியல் (ஆட்சி அதிகாரம்)

5-குடும்ப நலம் (இன்பத்துப்பால்)
இது போன்று 5 விதமான எண்ணம் கொண்ட புலவர்கள் பாடியிருக்க முடியும்.
பழைய பாடல்களையே நாம் பாராட்டிக் கொண்டிருக்காமல், புதிய தத்துவம் கொண்ட குறட்களை இன்னும் உருவாக்க இக்கால நம் புலவர்களுக்கு ஏன் தோன்ற வில்லை?  பாரதி தாசனைப் போன்ற  புலவரை கண்டு100ஆண்டுகள்  ஆகியும்  இன்னும் ஒரு, மெய்ப்பியல் புலவரை நாம் காணமுடியவில்லையே?  பழமை என்றாலே அதில் புனிதம் உள்ளது எனும் நம்பிக்கையினாலா?               
                               
352-இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
   மாசறு காட்சி யவர்க்கு.

இருள் நீங்கினால் மனிதர்க்கு இன்பம்,அதுபோல அறியாமை எனும் மாசு நீங்கினால் இன்பம் நிலைக்கும்-இது உண்மை,தேவை

353-ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தி
   வானம் நணிய துடைத்து.

ஐயம் நீங்கி மெய்வழி அடைந்தவர்,மேலுலகம் அண்மையில் இருப்பது போல் தோன்றும்.மேலுலகம் என்பது  மெய்ப்பித்தல் தத்துவத்திற்கு புறம்பானது,எனவே இக்குறள் மாணவர் கற்க தகுதி இழந்துவிட்டது,இது தேவையற்றது.

354-ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
   மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

மெய்யுணர்வு இல்லாதவர்கள் ஐம்புலன்களால் வளர்ச்சி பெற்ற உடலைப் பெற்றிருந்தும் பயனில்லை.இது தேவை.

355-எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இதற்கு தனியாக ஒரு விளக்கமே தேவையில்லை.மக்களுக்கு பகுத்தறியும் சிந்தனையை வலியறுத்தும் விதமாக இக்குறள் அமைந்துள்ளது.இது தேவை.

356-கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
   மற்றீண்டு வாரா நெறி..

கற்க வேண்டியதை கற்றால் மறு பிறவி என்பதை விட்டு அகன்று விடலாம்.இது மெய்ப்பொருள் உண்மைக்கு மாறானது .இது தேவையில்லை

357-ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
   பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

ஒருவன் உள்ளம் உண்மைப் பொருளை உணர்ந்து கற்றால் அவனுக்கு மறுபிறவி என்பது வேண்டா.இதுவும் மெய்ப்பித்தல் கொள்கைக்கு முரணனானது.இது தேவை இல்லை.(குறள் எண் 340-ல் உடலை விட்டு உயிர் பிரிந்தால் ,அந்த உயிருக்கு வேறு புக்கிடம் இல்லை என்கிறதே!)

358-பிறப்பெனும் பேதமை நீங்கச் சிறப்பெனும்
   செம்பொருள் காண்ப தறிவு.

பிறப்பெனும் அறியாமையை நீங்க மெய்யறிவு காண்பதுதான் ஒருவன் முக்தி பெறுவதற்கான வழி.இதுவும் மெய்ப்பித்தல் தன்மைக்கு மாறானது .இது தேவையில்லை.

359-சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
   சார்தரா சார்தரு நோய்.

மெய்ப்பொருளை உணர்ந்து வாழ்ந்தால் பற்றற்ற வாழ்க்கை அமையும்.மகிழ்ச்சி நிலவும்.இது தேவை.

360-காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன
   நாமம் கெடக்கெடும் நோய்.

விருப்பு,வெறுப்பு ,அறியாமை(மயக்கம்) என ஒருவனுக்கு இல்லாமல் போனால் அதனால் வரும் துன்பம் இல்லாமல் போகும் .இது தேவை.
மெய்யுணர்தல்எனில் மெய்ப்பிக்கும் குணம் கொண்டது  என பொருள்.இந்த அதிகாரத்தின் பத்து குறட்களும் இந்த மெய்ப்பிக்கும் குணம் கொண்டதாக இல்லை.
                             
குறள் எண் 353,356,357,358 ஆகிய நான்கு குறட்களும் மேலுலகம்,மறுபிறவி ,பிறவியின்மை போன்ற மெய்ப்பிக்கும் தன்மைக்கு மாறான  அருவ சிந்தனைகளை வளர்கும் விதமாக அமைந்துள்ளது,

படித்தவர்கள் எனில் வானுலக அறிவு வேண்டும் தான், அதற்காக வானுலகத்தில் ஒரு மோட்ச உலகம் உள்ளது என கற்பனையில் வாழ முடியாது. எனவே இந்த 4 குறட்களும் மாணவர்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.

                     

No comments: