9-விருந்தோம்பல்
81-இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
இல்லறத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே விருந்தினரை வரவேற்பர்.இது உண்மை .
82-விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்
றன்று
தானுண்பது சாகா மருந்தாக கூட இருக்கட்டும்,வந்த விருந்தினரை
வீட்டுக்குள் அழைத்து அவருக்கும் அந்த மருந்தை பகிர்ந்துண்ணவைப்பது தான் பண்பு-இது
தேவை.
83-வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று
விருந்தினரை நாள் தோறும் வரவேற்று மகிழ்வபவரின் வாழ்க்கை அதன் காரணமாக
துன்புற்று கெட்டொழிவதில்லை.
தினமும் உறவுகள் வீட்டில் விருந்துண்பதற்கு பேர் விருந்தல்ல, சத்ரம்,குடும்ப உறவுகளின்
மதிப்பு குறைந்துவிடும்.இது ஏற்றுக்கொள்ள முடியாத குறள்.தேவையற்றது
84-அகனமர்ந்து செய்வாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்
அகமகிழ்ந்து விருந்தினரை வறவேற்கும் வீட்டில் செல்வம் எனும் திருமகள்
வாழ்வாள்.இது மெய்ப்பிக்க முடியாத ஒன்று,உருப்பொருள் தத்துவத்திற்கு அப்பாற்பட்டது.இது தேவையற்றது.
85-வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
விருந்தினருக்கு முதலில் உணவளித்து உண்டு வாழும் பண்பாளன் மிஞ்சிய உணவை
நிலத்தில் விதைப்பான?தானா விளையும் எனும் பொருள்பட எழுதப்பட்டுள்ளது.இது உருப்பொருள் தத்துவத்திற்கு
முரணானது,இது
தேவையற்றது.
86-செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
விருந்தினர்களை தொடர்ந்து உபசரிப்பவன்,வானுலகில் உள்ள
தேவர்களுக்கும் விருந்தளித்து புகழப்படுவான்.இது அருவ சிந்தனையை ஊக்குவிக்கும்,மெய்பொருள்
தத்துவத்திற்கு புறம்பானது,எனவே இது தேவையற்றது .
87-இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
விருந்தினரை உபசரிப்பதே ஒரு வேள்வியைப்(யாகம்) போன்றது .யாகம் என்பது ஒரு
புனித செயலுக்கு இணையாயாக விருந்தோம்பலை காட்டியிருப்பது மூட நம்பிக்கையின்
மூலவித்து இந்த குறள் தடை செய்யப்பட வேண்டியது ஒன்று, இது தேவையற்றது.
88-பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
(வேள்வி என்பது உணவுப்பொருளை வீணாக்கும் நிகழ்ச்சி.)ஒருவன் சேர்த்து வைத்த
பொருள் விருந்தோம்பல் எனும் யாகத்திற்கு பயன்படாமல் வீணாகிவிட்டதே என
வருந்துவானாம்.
விருந்தோம்பல் புனிதமானது என்பது மனித நேயத் தத்துவத்திற்கு உடன்பாடானது
என ஏற்றுக்கொண்டாலும், உணவுப் பொருளை தீயிட்டு கொளுத்தும் பிராமணர்களின் கயமத்தனத்திற்கு
இக்குறள் துணைபோவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உழைப்பாளியின் விளை பொருளை வீணாக்க முயற்சிக்கும இந்த குறள் தேவையற்றது.
89-உடமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
விருந்தினரை வரவேற்று போற்றத் தெரியாதவன் அறிவற்றவன் ,பணம் படைத்தவனாக
இருந்த போதிலும் தரித்திரம் பிடித்தவன் எனும் பொருள்பட கூறப்பட்டுள்ளது.அறவழி சிந்தனையை
வலியுறுத்தும் விதமாக உள்ளது .இது தேவை.
90-மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
முகர்ந்தாலே அனிச்ச மலர் வாடி விடும் தன்மை கொண்டது.அதுபோல விருந்தினரை
வரவேற்கும் போது சற்று முகம் கோணினாலே விருந்தினர் முகம் வாடிவிடும்.இது உண்மைதான்.
இந்த ‘விருந்தோம்பல்’ அதிகாரத்தில் 83லிருந்து 88வரை உள்ள 6
குறட்கள் கற்க தகுதியற்றவை
No comments:
Post a Comment