13- அடக்கம் உடைமை
121-அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்துவிடும்.
இங்கே அமரர் என்பது இறந்தவர் அல்லது தேவர்கள் என பொருள் கொண்டால்
உருப்பொருள் தத்துவத்திற்கு முரணாகிவிடும்.ஆரிருள் என்பது துன்பத்தை கொடுக்கும் என
பொருள் கொண்டால்,அடக்கம் கொண்டவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவார்,மாறாக அடக்கமற்றவர்கள் துன்பத்தை
அனுபவிப்பவர்கள் என பொருள் கொள்ள நேரிடும்.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் எல்லாருமே ஆன்மீக வாதிகள்.கலைஞர்
கருணாநிதி தவிர பரிமேலழகர்,மனக்குடவர்,மூ.வ,சாலமன் பாப்பையா அனைவருமே அருவ வழி
பாட்டாளர்கள் .எனவே திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் உருப்பொருள் தத்துத்திற்கு
தங்களை உட்படுத்திக்கொள்ள விரும்ப வில்ல.
கலைஞர் கூட சில இடங்களில் தேவர் வானோர் என பொருள் படும்படி
எழுதியுள்ளார்.உருப்பொருள் தத்துவத்திற்கு குறளை உட்படுத்தனால், ‘குறள் ஒரு பொது மறை’ எனும் பேர் சிதைந்து
விடும் எனும் நோக்கில் விடுபட்டிருக்கலாம்.
ஆனால் ஆன்மிகம் என்பதை மன ஒழுக்க கோட்பாடு என பொருள் கொண்டால்கூட,இங்கே கடவுள் சிந்தனை
மக்களை மூட நம்பிக்கையாளரகவும்
இடைத்தரகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும்
அமைந்துவிடக்கூடாது என்பதே என் நோக்கம்.எனவே இதுபோன்ற குறளை கற்க தேவையில்லை.
122-காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
அடக்கத்தை தவிர ஆக்கம் தரக்கூடியது வேறொன்றுமில்லை-இது தேவை.
123-செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.
எவ்வளவு கற்று தேர்ந்தாலும் அடக்கமாக இருப்பதே ஒருவனுக்கு நன்மை
பயக்கும்-இது தேவை.
124-நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
உறுதியான உள்ளமும், ஆர்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவனின் உயர்வு, மலையை விட
உயர்வானது. இது தேவை.
125-எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வார்க்கே செல்வம்
தகைத்து.
பணிவு எனும் பண்பு எல்லாருக்கும் நலம் பயக்கும்,செல்வம் கொண்டவர்களுக்கு
அடக்கம் இருந்தால் அது அவருக்கு மேலும் சிறப்பு தரும்-இது தேவை.
126-ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
ஆபத்து வரும்போது,ஆமை தன் ஐந்து(நான்கு கால் மற்றும் வாய்) உருப்புகளை
உள்ளடக்கி கொள்வது போல், ஐம்புலன்களையும் அடக்கியாளத் தெரிந்த ஒருவருக்கு காலமெல்லாம் வாழ்க்கைக்கு
காவல் அரணாக அமையும்.
ஆனால், ‘எழுமையும் ஏமாப் புடைத்து.’என பொருள் கொண்டால்,
இந்த
புலனடக்கும் உடையவருக்கு ஏழு பிறப்பும் தொடரும் என்பது மெய்ப்பியல் தன்மைக்கு
மாறானது என பொருள் கொள்ள வேண்டும். எனவே இக்குறள் மாணவர்கள் கற்க தகுதியற்றது
127-யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப்
பட்டு
ஒருவர் நாவடக்கம் என்பது எதிரியின் மனம் புண்படாதவாறு பேசுவது,நாவடக்கம் இல்லை
எனில் காலமெல்லாம் அவர் கூறிய சொல் அவர் மனதை உறுத்திக்கொண்டே இருக்கும்.இது தேவை.
128-ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்துவிட்டால் அத்துணை பாலும் நாசம்,அதுபோல ஒருவர்
எத்தனையோ சொல் இனிக்க இனிக்க பேசினாலும், இறுதியில் அவர் கூறிய தீய சொல்லால் அத்துணை
பேச்சுக்களும் பாழ்.இது தேவை
129-தீயீனாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
இதற்கு விளக்கமே தேவையில்லை,தெளிவான வார்த்தைகள்.இது தேவை
130-கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின்
நுழைந்து.
அடக்கம் உடையவன்பால் அறம் உண்டாகும்.சினத்தை அடக்கி கல்வி கற்ற
பண்பாளனுக்கு அறமானது வழி பார்த்து காத்திருக்கும்.-இது தேவை.
இந்த அடக்கம் உடைமை அதிகாரத்தில் 121-மற்றும்
126-ம் குறட்கள் தவிர மற்ற அனைத்து 8 குறட்களும் கற்க தகுதியானவை.
***************************************************************************************************************************
தீண்டாமை ஏன் ஒழியாது?
தீண்டாமை ஏன் ஒழியாது?
அரசாங்கம் மனம் வைத்தால் ஜாதி,தீண்டாமை எல்லாமே ஒழிந்து விடும்! ஆம் அனைத்துக்
கோயில்களையும்,சர்ச்,மசூதிகளையும் இழுத்து மூட வேண்டும்!அல்லது கோயில் கர்ப கிரகம் இருட்டாக
இருக்க கூடாது! எந்நேரமும் திறந்தே இருக்க வேண்டும்!
பொது வழிபாட்டுத்தலங்கள் யாவும் காட்சிக்கூடங்களாக மாற்ற வேண்டும்,அரசாங்கம்
தீர்மானிக்க வேண்டும்
யாவரும் உழைப்பாளிகளாக மாறிவிடுவர்
**************************************
No comments:
Post a Comment