8- அன்புடைமை
71-அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்ணீர் பூசல் தரும்.
உள்ளத்தில் இருக்கும் அன்பை தாழ்ப்பாள் போட்டு மூட முடியாது.அன்புக்குரியவர்
துன்பப்படுவதை காணும்போது கண்ணீர்த்துளி வாயிலாக வெளிப்பட்டுவிடும்.இது உண்மை.
72-அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
எல்லாம் எனக்கே என எண்ணுபவர் இடத்தில் அன்பு இருக்காது.மாறாக அன்புள்ளம்
கொண்டவர்கள் பிறரிடம் அன்பு செலுத்துவதன் மூலம் அனைத்தையும் பெற்றுவிடுவர். இது உண்மை
மற்றும் தேவையும் கூட
73-அன்போ டியைந்த வழக்கென்ப
ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு
எலும்பும் உயிரும் இணைந்திருப்பது போல் அன்பும் செயலும் இணைந்திருப்பது பொருத்தமாகும்.இது தேவை
74- அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
அன்புள்ளம் கொண்டவர்கள் பிறரிடம் பற்று கொள்வர்.அதுவே நட்பை
உருவாக்கும்.இது உண்மை
75-அன்பற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
அன்புள்ளம் கொண்டவர்களுக்கு வாய்க்கும் சிறப்பே, உலகில் இன்புற்று வாழ்வதுதான் –இது உண்மை.
76-அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
வீரச்செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே ,அறச்செயல்களுக்கு
மட்டுமே அன்பு துணையாக இருப்பதாக கூறுவர்.
ஒரு மனிதனுக்கு அன்புள்ளம் இருந்தால் அறச்சிந்தனை தானாகவே வரும்.இங்கே
வீரத்திற்கு(முரட்டுத்தனம்) அன்பு எப்படி துணை போக முடியும்?முடியும் ,முரடனை அன்பால்
திருத்தலாம்.ஆனால் வீரம் என்றாலே அன்பு அடிபட்டு போகிறதே! இது முரணாகத்
தெரியவில்லையா? இது தேவையற்றது
77-என்பிலாதனை வெய்யில் போலக் காயுமே
அன்பி லதனை அறம்
அன்பிலாதவன் அறச்செயல் என்பது நாடகம் போலாகிவிடும்,வெய்யிலில் பட்ட புழு வதை
படுவது போல் அவன் மனம் வாட்டம் கொள்ளும் .இது உண்மை.
78-அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரத்தளிர்த் தற்று
பாலை வனத்தில் தாவரங்கள் உயிர் வாழாது.அதுபோல் அன்பில்லா மனம் கொண்டவர்
வாழ்க்கையும் பட்டமரமும் பாலையில் துளிர்ப்பது
போல் ஆகிவிடும்.பட்டமரம் துளிர்க்காது.இந்த குறள் தேவை.
79-புறத்துறுப்பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு.
மனதில் அன்பு இல்லாதவர்கள் புறத்தோற்றத்தை அழுகு படுத்திக்கொள்வதால் ஒரு
பயனும் இல்லை.இது அவசியமானது.
80-அன்பின் வழிய துயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
ஒரு உயிரின் உன்னத நிலை என்பது அன்பு கொண்ட உள்ளம்,அன்பு இல்லை யெனில் தோல்
போர்த்திய உடம்பு அவ்வளவே-இது தேவை .
இந்த ‘அன்புடைமை’ அதிகாரத்தில்,76-ம் குறள் கற்க தகுதியற்றது.
***************************************
தீபாவளி கெண்டாடினால் காற்று மாசு அடைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஒரு
அசுரன் இறந்து போன நாளை கொண்டாட ஒரு அளவே இல்லையா?நரகாசுரனை கொன்ற கிருஷ்ணன்
இப்போ எங்கே மாசை நீக்கி மக்களை காப்பற்ற
வேண்டியது தானே? கிருஷ்ணன் இறந்து 3000 ஆண்டுகளாகின்றன.
ஆனால் அசுரன் மரண நாள் கொண்டாட்டம் இன்றும் மனிதர்களை பலிவாங்குகிறது?இனியாவது பட்டாசு
வெடிப்பதை தடை செய்வீர்களா?
**************************************
No comments:
Post a Comment