Tuesday, March 20, 2018

33-கொல்லாமை


                      33-கொல்லாமை

321-அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
     பிறவினை எல்லாந் தரும்.

கொல்லாமை ஒன்றே அறச்செயல்.பிற உயிரைக் கொல்லுவதனால் தீய செயல்கள் தனக்கு வந்து சேரும்.இது தேவை.

322-பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
      தொகுத்தவற்று ளெல்லாந் தலை.

சான்றோர்கள் (படித்தவர்கள்) என்னவெல்லாம் சொல்லியிருப்பார்கள், அவற்றுள், தமக்கு கிடைத்தவற்றை சுற்றியிருப்பவர்களோடு பகிர்ந்து உண்டு வாழ்வதே சிறந்தது.இது தேவை.

323-ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
       பின்சாரப் பொய்யாமை நன்று.

கொல்லாமை நல்லது,பொய்யாமையும் நல்ல வாழ்க்கை நெறி முறைதான்.இது தேவை.

324-நல்லா றெனப்படுவ தியாதெனின்  யாதொன்றுங்
      கொல்லாமை சூழும் நெறி.

யாரையும் கொல்லாமல் வாழ்க்கை நெறி முறை கொண்டவர் நல்லறம் சூழும்.இது தேவை.

325-நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
      கொல்லாமை சூழ்வான் தலை.

நாட்டு நடப்புகளைப்பார்த்து வெறுத்து துறவரம் கொள்பவரைவிட கொல்லாமையை கடைபிடிப்பவரே சிறந்தவர்.இது தேவை.
                              
326-கொல்லாமைமேற்கொண்டொழுகுவான்வாழ்நாள்மேல்
       செல்லா துயிருண்ணுங் கூற்று.

கொல்லாமையை மேற்கொண்டு வாழ்க்கை நெறி கொண்டவனை மரணம் கூட நெருங்க அச்சப்படும்.
இது மிகையான கூற்று.எத்தகையவனையும் மரணம் எளிதில் நெருங்கும்,கொல்லாமை என்பது அறச்சிந்தனையுடையது,அதை வலியுறுத்தவே உருப்பொருளற்ற  மரணத்தை உயிரியாக காட்டப்படுகிறது.எனினும் இது தேவை.

327- தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
       தின்னுயிர் நீக்கும் வினை.

தன்னுயிரே போவதாக இருந்தாலும்,பிற உயிரை போக்க முயலக்கூடாது.(மொத்தத்தில் மனிதர்களிடையே சண்டையே கூடாது என்பது தான் இக்குறளின் பொருள்)இது தேவை.

328-நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
      கொன்றாகும் ஆக்கங் கடை.

ஒரு உயிரைக் கொல்லப்படுவதால் ஒருவருக்கு நன்மை பயக்கும் எனினும் பண்புடையவர்கள் கொல்லாமையை கடைபிடிப்பார்கள்.இது தேவை .

329-கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
      புன்மை தெரிவா ரகத்து.

இந்த குறள் மக்களின் ஐந்து வித குணங்களான வர்ணாசிரமத்தை நினைவு படுத்துகிறது.இந்த கொலைகாரர்களை திருத்தவே முடியாது இவர்கள் கீழ் மக்களே,அதாவது தீண்டத்தகாதவர்களே(இழி பிறவிகளே) என பொருள் படும்படி பாடப்பட்டுள்ளது. 

இன்றய தீண்டாமைக்கு மூல காரணமே பண்டைய தமிழ்ப் புலவர்கள் பாடிய பாடல்களே என விளங்குகிறது,

இதே குறளில் 46-ம் அதிகாரமான , ‘சிற்றினம் சேராமை’ 10 குறட்களும் இந்த அடிப்படையில்தான்  பாடப்பட்டுள்ளது.அந்த கால ஆட்சி முறை வர்ணாசிரமத்தை அடிப்படையாக கொண்டதாக விளங்கியது,காலப்போக்கில் சமுதாயத்தில் புரட்சியாளர்கள் தோன்றியதால் கீழ் மக்களை தீண்டக்கூடாது என்பது மறுவி இன்று உழைக்கும் வெய்யிலாளி இனத்தை மற்ற இன மக்கள் மதித்து நடக்கும் நிலை வந்து விட்டது. நாம் படிக்கும் பள்ளி நாட்களில் அப்போதைய தமிழ் ஆசிரியர்கள் கீழ்மக்கள் யார் யார் என விளக்குவர்கள் அதாவது குணத்தில் சிறுமை குணம் படைத்தவர்கள்தான்  என  கூறுவார்கள்,அவர்களை ஏன் மேன்மை படுத்த முயலக்கூடாது? ,அப்படி முயல்வதும் வீண் வேலை என கூறுவர்கள்.திருத்த தொடர்ந்து முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை,இதை அரசு மட்டுமே செய்கிறது,ஆனால் சமுகம் அரசோடு ஒத்துழைக்க மறுக்கிறது. எனினும் இந்த குறள்  தேவை இல்லை

330-உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
      செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கை,ஒருவருக்கு அமையுமானால் அவர்  முன்னாளில்(முற்பிறவி?)கொலை பாதக செயல் புரிந்தவராகவே இருப்பர்.
கலைஞரும்,மூ.வ தவிர மற்றவர்கள் திருக்குறளுக்கு உரை எழுதும் போது முற்பிறவி,மேல் உலகம்,எழுபிறப்பு போன்ற உருப்பொருள் தத்துவத்திற்கு மாறான வகையில் பொருளுரைத்திருப்பர்.தற்காலத்திற்கு பொருத்தமற்றது.
கொல்லாமை அதிகாரத்தின் 329&330 தவிர ஏனைய குறட்கள் கற்க தகுதி வாய்ந்தவை.                          

No comments: