34-நிலையாமை
331-நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
நிலையில்லா உலகில் நிலையானது என நம்பும் அறியாமை ஒரு இழிவானதாகும்.இது தேவை.
332-கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
கூத்து முடிந்ததும் மக்கள் எழுந்து சென்று விடுவர்.அதுபோல ஒருவர்
சேர்த்துவைத்த பணமும் செல்வமும் அவரை விட்டு பிரியும் போது உணர்வர்.இது தேவை.
333-அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
செல்வம் நிலையற்றது என உணர்ந்து நிலையான நற்செயல்களை செய்ய வேண்டும்.இது தேவை
.
334-நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.
வாள் கொண்டு அறுக்கும் போது மரத்தின் ஆயுள் குறைவது போல் நாளொன்று போகும்
போது தன் ஆயுளும் குறையும் என்பதை வாழ்க்கையை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.இது தேவை .
335-நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
வாழ்க்கை நிலையற்றது என உணர்ந்து நாம் இருக்கும் போதே நற்பணிகளை
ஆற்றிடவேண்டும் .இது தேவை .
336-நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யடைத்திவ் வுலகு.
நேற்றிருந்தவன் இன்றில்லை என
பெருமை(அகந்தை) கொண்டது இவ்வுலகம்.இது தேவை.
337-ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுப
கோடியு மல்ல பல.
மனக்கோட்டை கட்டி வாழ்பவர் யார் எனில் ஒரு நொடிகூட வாழ்க்கையைப் பற்றி
சிந்திக்காதவர்கள்.இது தேவை.
338-குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு எது போன்றது எனில் முட்டையை விட்டு
பறவை பிரிந்து பறந்தது போலாகும்.இது தேவை.
339-உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
முற்பிறப்பு மறுபிறப்பு என சொல்லப்படுவதை ஒரு மனிதனால் வாழும்போது
உணரமுடியாது.எனவே அவ்வாறு பிறவியில் ஆசை கொண்டவர்கள்,தூக்கத்தை மரணமாகவும்
விழித்தெழுவதை பிறவியாகவும் அறிவாளிகள் கருதுவர்.இது தேவை.
மேலுலகம் உள்ளது(புத்தேளுலகம்..) என போற்றி எழுதப்பட்ட குறளை எழுதியவரா
இக்குறளை எழுதியிருப்பார்.?ஒரு புலவருக்கு இருவேறு கருத்தக்கள் கொண்ட
குறட்களை படைக்க எப்படி சிந்திக்க முடியும்?
340-புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்து உயிர்க்கு.
உடலை விட்டு பிரியும் உயிருக்கு
வேறு புக்கிடம் கிடையாது.
இந்த குறள் ஆன்மிக சிந்தனையாளருக்கு மரண அடி.
துவைதம் அத்துவைதம்,என அருவ சிந்தனைகளை இரு கூறுகளாக்கி பாமரனை மதி மயக்கி
மக்காக்கி(குடாக்) பிழைப்பு நடத்தும் அந்தணர்களுக்கு ஒரு பாடம்.
அதாவது ஆன்மாவுக்கு அழிவில்லை,உடலுக்கு மட்டுமே அழிவு என காலம்காலமாக புளுகி
வந்த புலவர்களுக்கு இந்த பகுத்தறியும் குறள் ஒரு வழி காட்டி.இது தேவை.
‘நிலையாமை’ அதிகாரத்தின் பத்துக்
குறட்களும் பயனுள்ளவை.
********************************************************************************************************************
********************************************************************************************************************
ராஜஸ்த்தான் மாநில பாட புத்தகம் ஒன்றில் கற்பழிப்பு குற்றத்திற்கு ஆளான ‘சாமியார்’(ஆஸ்ரம் பாபு) பற்றிய
வாழ்க்கை வரலாறு! இது சேதி.
பிரபலமான சாமியார்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்
உண்மையாயிருந்தாலும் அதை மறைத்து அல்லது மறந்து மீண்டும் அத்தகைய சாமியார்கள்
மக்கள் மத்தியில் உலா வருவது வழக்கமாகிவிட்டது.
இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம்.சாமியாரின் இனத்தை சார்ந்த ஊடகங்களுக்கு இது
போன்ற குணம் வந்து விடுகின்றன.
மாணவர்கள் படிக்கும் போது அந்த சம்பவத்தை மறைத்துவிடுமா?அரசாங்கம் மக்களை
தர்ம சிந்தனைகளை வலியுறுத்தி வழி நடத்தும் ஒரு அமைப்பு அல்லவா?
**************************
No comments:
Post a Comment