32- இன்னா செய்யாமை
311-சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
எத்தகைய சிறப்பு வாய்ந்த செல்வத்தை ஒருவர் பெற்றிருந்தாலும்,பிறருக்கு கேடு
செய்யாமலிருப்பதே குற்றமற்றவர்களின் குணமாகும்.இது தேவை.
312-கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்..
கோவப்பட்டு ஒருவன் ஏசும்போது,அந்த வார்த்தைகளை தாங்கிக் கொள்வதுதான் சிறந்த
மனிதரின் கொள்கையாகும்.இது தேவை
313-செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
யாருக்கும் கெடுதல் செய்யாதவரை ஒருவர் அவரை பகைத்துக் கொண்டு கெடுதல்
செய்துவிட்டால் ,அவருக்கு மீளா துயர் தரும்.இது தேவை.
314-இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
நமக்கு தீங்கு செய்வோரை நல்லது செய்து அவர் வெட்கப்படுபடி செய்வதே அவரை
தண்டிக்கும் செயலாகும்.இது தேவை.
315-அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.
பிறருக்கு வரும் நோய் கண்டு ,தனக்கு வந்தது போல் பாவித்து உதவாதவர் ,அவருக்கு
அறிவிருந்தும் பயனில்லை.இது தேவை.
316-இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்.
தனக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுபவித்தவர் அதைப்போன்ற துன்பத்தை பிறருக்கு
செய்யாமலிருக்க வேண்டும்.இது தேவை.
317-எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
எந்த அளவிலும் ,முப்பொழுதும் எவரையும் இழிவு படுத்தாமல் இருப்பதே சிறந்தது.இது தேவை.
318-தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
பிறர் தனக்கு தரும் துன்பத்தை உணர்ந்தவன் ,அதே துன்பத்தை பிறருக்கு
தரக்கூடாது.இது தேவை.
319-பிறர்க்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்..
வாழ்க்கையின் முற்பகுதியில் ஒருவர் ,இன்னொருவருக்கு தீங்கு
விளைவித்தால்,அதே அளவு தீங்கு அவருக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் நேரும்.இது தேவை.
320-நோயல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர் .
தீங்கற்ற வாழ்வு வேண்டும் என்பவர் யாருக்கும் தீங்கு இழைத்தல் கூடாது.இது தேவை.
‘இன்னா செய்யாமை’ அதிகாரத்தின் பத்து
குறட்களும் மனித குலம் கற்க தகுதி வாய்ந்தவை.
அகம் பிரம்மம்’ இது சங்கரர் சொன்னது.மனம்தான் பெரியது,அவ்வளவே!விக்கரக வழிபாடுகளால் மோட்சம் பெற முடியாது,அப்படியானல் ஆலயம் தோறும் நடந்து சென்று தமிழ் புலவகள் ஸ்த்தல புராணங்கள் பாடினார்களே,யாரை ஏமாற்ற ?
பக்தர்கள் யார்? புலவர்கள் யார்?
‘பரமாத்மனே யேர் ரக்தஹ
விரக்தோ அபரமாத்மநீ’
No comments:
Post a Comment