Monday, March 12, 2018

14-ஒழுக்கம் உடைமை



                     14-ஒழுக்கம் உடைமை

131-ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
     உயிரினும் ஓம்பப் படும்

ஒருவருக்கு உயர்வு தரக்கூடியது ஒழுக்கமே,அது உயிரைவிட மேலானது-இது தேவை.

132-பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
     தேரினும் அஃதே துணை

எப்படி ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால் எத்தகைய துன்பத்தை ஏற்றாவது ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்-இது தேவை.

133-ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
      இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கம் உடையவராக வாழ்தல் ஒருவரை உயர்ந்த குடிப்பிறப்பாக காட்டும்.ஒழுக்கம் தவறுகிறவர்கள் ய‍ராயினும் இழிந்த குடியில் பிறந்தவராகவே கருதப்படுவர்-இது தேவை.

134-மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
     பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

ஒழுக்கமுள்ள பார்ப்பான் மட்டுமே ஓத முடியும் ,அதாவது கற்றதை பிறருக்கு சொல்ல முடியும்,ஒழுக்கம் தவறிய பார்பான் இழிமகனாவான்.வேறு வகையிலும் கூறலாம் கற்றதை மறந்த ஒழுக்கமுள்ள பார்ப்பான்,மீண்டும் படித்து கொள்ளமுடியும்,ஆனால் ஒழுக்கம் தவறிய பார்ப்பான் படிக்க முடியாத இழிநிலை எய்துவான்.

 இந்த குறள் பாரப்பனனுக்கு மட்டுமே பொருந்துவது போல் அமைந்துள்ளது,இந்த குறளெழுதியவர்,சாதிய வேறுபாட்டில் அதிக ஆர்வமுள்ளவர் என தெரிகிறது.பரிமேலழகர் கூறுகையில் இது ஏனைய வருணத்தவருக்கும் பொருந்தும் என்கிறார் ,எனவே இக்கால சூழலுக்கு, சாதியத்திற்கு அப்பாற்பட்டது திருக்குறள் என்பதெல்லாம்,இக்குறளால் இங்கே அடிபட்டு போய்விட்டது!

மனித குலத்திற்கு மறை நூல் ஓத ஒரு சாதிய அமைப்பு தேவை இல்லை.அப்படி ஒரு அமைப்பு வேண்டுமென்றால் உழைப்பாளிகள்  அவர்களை காக்க வேண்டிய அவசியமில்லை.

இக்குறள் கற்க தகுதியற்றது
                       
135-அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
     ஒழுக்க மிலன்கண் உயர்வு

பொறாமை கொண்டவனுக்கும்,ஒழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்க்கை உயர்வான வாழ்க்கையாக கருதப்படமாட்டாது.இது தேவை .

136-ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
      ஏதம் படுபாக் கறிந்து.

ஒழுக்கத்தில் மன உறுதி கொண்டவர்கள்,அதனின்று தவறுவதால் அது இழுக்கு என உணர்ந்திருப்பர்,நல்லொழுக்கம் குன்றிடுமளவுக்கு  நடக்க மாட்டார்கள்-இது தேவை.
    
137-ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
     எய்துவ ரெய்தாப் பழி.

நன்னடத்தையினால் உயர்வு ஏற்படும்,இல்லையெனில் இழிநிலை அடைவர்.-இது தேவை.
                              
138-நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
     என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாகும்,தீயொழுக்கம் தீராத துன்பம் தரும்-இது தேவை.

139-ஒழுக்க முடையவர்க் கொல்லவே தீய
      வழுக்கியும் வாயாற் சொலல்.

மறந்தும் கூட தம்  வாயால் தீய சொல் ,சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்-இது தேவை
                               
140-உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
     கல்லா ரறிவிலா தார்.

இந்தக் குறள் தான், படித்தவன் யார்? படிக்காதவன் யார்? என  வேற்பாடு காணாமல் போனதற்கு காரணம்!

இந்த குறள் கூறுவது ஒரு அனுபவ பூர்வ உண்மையல்ல.மக்கள் அமைதி பெற மன்னன் அமைதியாக ஆட்சி பெற ஏதுவாக உருவாக்கப்பட்ட பழ மொழி/.
செய்யுள்/,கவிதை/,பா இவை யெல்லாமே(poem or poetry) ஒரு மொழியின் மந்திரச் சொல்,என பாமரனை நம்பவைப்பதற்காக பாடப்பட்டது.இது கற்க தகுதியற்றது

எழுத படிக்கத்தெரிந்தவன் பாமரனுக்கு சொல்வது வேறு,அதே மொழியை இலக்கண வரம்பிற்கு உட்பட்டு எதுகை மோனையோடு அந்த பாமரனுக்கு ஒரு வாழ்வியல் உண்மையை இயம்புவது செய்யுள்.

இந்த குறளில் கூறப்பட்டது போல் மக்கள் இருப்பாராயாமாயின்,ஒரு சிந்தனையாளன் கூட உலகில் தோன்றி இருக்க முடியாது.உலகம் உருண்டையானது என மக்கள் நம்பிக் கொண்டிருந்ததை தகர்த் தெரிந்தவர் கலிலியோ,அவரை கல்லால் அடித்தே இந்த சமுகம் சாகடித்துவிட்டது. 
அவர்
,   உலகத்தோடு ஒட்ட ஒழுகியிருந்தால்,

(பைபிள் உட்பட எல்லா மத நூல்களும் பூமி தட்டை என்பதும் சூரியன் தான் பூமியில் தோன்றி மறைகிறது எனும் கருத்தை இன்றும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை!)
இன்று உலகம் உருண்டை எனும்  கருத்துக்கு எப்படி மாறியது?
இதனால் புராணங்களில் கொண்டிருந்த மக்கள் கருத்துக்களான சூரிய ,சந்திர கிரகணங்கள் ஏற்படுவது,சூரியனையும்,சந்திரனையும் நாகப்பாம்பு விழுங்குவதால் தான்,
(ராகு,கேது தோஷபரிகாரம், இன்றும் கோயில்களில் கிரகண நாட்களில் நடத்துவது, அறிவியல் பட்டம் பெற்ற பிராமணர்கள் தான் , படித்த இந்து மத  மக்கள் கூட பழை கருத்தை மாற்றிக்கொள்ள விரும்ப வில்லை-காரணம் இவர்கள் உலகத்தோடு ஒட்ட ஒழுகுகின்றனராம்!)

சந்திரனில் மனிதன் காலை வைத்தது எப்படி? புராண கதைகளை நம்பியிருந்தால் முடியுமா?
மின்சாரத்தை மனிதன் கண்டு பிடிக்க வில்ல யெனில் இன்னும் மனிதன் காட்டுவாசிகளாகத்தான் வாழ்ந்திருப்பான்.
                              
அவன் உலகத்தோடு ஒட்டி ஒழுகியிருந்தால் இன்று நவினங்களை (தொலைக்காட்சி,கைபேசி போன்ற சாதனங்கள் இயங்குவது,மின்னணு கண்டுபிடிப்பால் தானே?) மனிதன் அனுபவிக்க முடியுமா?

உயர்ந்தோர் ஏற்றுக்கொண்ட ஒழுக்க கோட்பாடெல்லாம் ஒட்ட ஒழுக வேண்டுமென்றால் தாம்பத்திய வாழ்க்கை முறைக்கு மட்டுமே பயன் படும்,அந்த வகையில் பொருள் கொண்டு இயங்கினால் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழத் தெரிந்தால் போதும் என்ற கதையாகிவிடும்.

ஆண்டான் அடிமைகளாக வாழ்ந்த (முதலாளித்துவ கொள்கை)சமுக மக்களை பொது உடைமை சிந்தனையான உருப்பொருள் தத்துவத்திற்கு மாற்றியது மாமேதை காரல் மார்க்சு தானே?
அவர் உலகத்தோடு ஒட்ட ஒழுகியிருந்தால் இன்று உலக வல்லரசுகளில் ஒன்றாக திகழும் சீனா,ரஷ்யா,கியூபா மற்றும் வடகொரியா போன்ற நாடுகள் தோன்றியிருக்க முடியுமா?

உலகத்தோடு ஒட்டி பழகி இருந்தால் இன்று உலகமே வியக்கும் அளவுக்கு மாசேதுங் சீனாவில் காலச்சார புரட்சி எற்படுத்தி இருக்க முடியுமா?
இவ்வளவு ஏன்? நம்ம ஊர் பெரியார் தோன்றி இருக்க முடியுமா? எனவே காலத்துக்கு ஒத்துவராத இக்குறள் கற்க தகுதியற்றது.
                              
பெரியார்கூட கடவுள் மறுப்பு சிந்தனையை ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு(பார்ப்பனர்) எதிராக மக்களை திருப்பினாரே தவிர,அந்த வெய்யிலாளி இனத்தை, பார்ப்பனர் இருக்கும் இடங்களிலும்,கோயில்களுக்கும் போகாதே,அங்கே போவதால் உன் உழைக்கும் நேரம் மட்டுமல்ல உன் பொருளாதாரம் வீணாகும் என சொல்லி இயக்கத்தை வளர்க்க வில்லை!.
 மாறாக யாருக்கும் பயன்படாத,உழைப்பாளியை மேலும் முட்டாளாக்கும்  கோயில் கர்பகிர நுழைவு போராட்டம் நடத்தி ஒய்ந்துவிட்டார்.

இன்றய காலகட்டத்தில் படைவீட்டார் மட்டுமே(நான் தான்)  தன் இல்ல நிகழ்ச்சிகளில் பார்ப்பனரை தேடிப்போகாமல் சுயமாக நடத்துகிறார்.அவர் நடத்தும் , ‘ஏழாம் அறிவு இயக்கம்’(தோற்றம்-9/2008) மக்ளை விழிப்படையச் செய்துள்ளது.

அவர் எழுதிய, ‘அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்நூல் மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குகிறது.இந்த நூலை அரசாங்கம் தன் நூலகத்திற்கு வாங்கியுள்ளது.படைவீட்டாருக்கு , ‘அகவை முதிர்ந்த தமிழறிஞர்எனும் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

உருப்பொருள் தத்துவத்தை  நடைமுறை வாழ்விலும் நடத்திகாட்ட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக படைவீட்டார்,அவரே தலைமை ஏற்று சமிபத்தில் தன் இளையமகனுக்கு சுயமரியாதை திருமணம் நடத்தி முடித்தார்.

திருமணம் என்றாலே சம்பிரதாயம் சடங்கு இவைகளுக்கு முக்கியத்துவம் தரும் நம் சமுதாயத்தை எதிர்த்து பொரியோர்கள் முன்னிலையில் நடத்தி முடித்தார்.
 மூட நம்பிக்கைகளின் மூல வித்துக்களான, நெற்றியில் குங்கும், மஞ்சள், சந்தணம்,சாம்பல்(திருநீரு?), வெண்களிமண்(திருமண்?) இடுதல் இல்லாமல்,கற்பூரம், ஊதுவத்தி கொளுத்தாமல்,முகுர்த்த தேங்காய் உடைக்காமல்,பூசணிக் காயை சுற்றி உடைக்காமல்,மாவிலை தோரணம் இல்லாமல், மந்திரம் ஒத பார்பனனை அழைக்காமல்,மத்தளம் நாதசுரம் ஊதாமல்,சாணியை பிள்ளையாராக பிடித்து வைத்து அதற்கு குங்குமம் மஞ்சள் வைத்து,அதன் தலைமீது அருகம் புல்லை நடாமல், வெற்றிலைப் பாக்கு வைத்து வணங்காமல், வெறும் தாலி மட்டுமே மணமகள் கழுத்தில் மணமகன் கட்ட,

(தாலி ஏன்?என  கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்,திருமணத்தில் குறைபட்ச ஒப்பந்த அடையாளமாக (சடங்காக?),மோதிரம் மாற்றிக் கொள்ளல்,தாலி அணிதலுக்கு மாறாக ஏதும் இருப்பதாக தெரியவில்லை) வந்தவர்கள் மணமக்களை வாழ்த்த, வாழ்த்த வந்தவர்களுக்கு சரியான நேரத்தில் சைவ அசைவ அறுசுவை உணவுடன் திருமணம் இனிதே முடிந்தது.இன்றும் படைவீட்டார் குடும்பம் உலகத்தோடு ஒட்ட ஒழுக வில்லை என்பதற்கு மட்டுமல்ல மகிழ்ச்சிக்கு எடுத்துக்காட்டாக சமுகத்தில் விளங்குகிறதே!     
எனவே,
இந்த ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் குறள் எண் 134 மற்றும் 140 ஆகிய குறட்கள் கற்க தகுதி இழந்துவிட்டது.  
இந்த இரண்டு குறட்களும் நம்ம ஊர் இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும்,உலக பொதுமறை என்று திருக்குறளை எப்படி ஏற்றுக் கொள்வது? அறிவுடைமைஅதிகாரத்தின் 
426-ம் குறளும் இதே! 
           (எவ்வ துறைவ துலக முலகத்தோ
            டவ்வ துறைவ தறிவு )                                        

No comments: