Friday, April 27, 2012

34-திராவிடகட்சிகளின் மறுமுகங்கள்


                        34- திராவிடக்கட்சிகளின்  மறுமுகங்கள்
                                                                              
முதல் நிலை தகுதி பெற்ற மாணவர்களுக்கு அண்ணா பல்கலை கழகத்தில் முதல் சுற்றிலேயே பொறியியல் படிப்புக்கு தேர்வு பெற்றுவிடுகின்றனர்.எதைவைத்து தேர்வு செய்யப்படுகின்றனர் என புரியவில்லை.பொறியியல் படிப்பாகட்டும் மருத்துவம் சார்ந்த படிப்பாகட்டும் அனைத்துமே 12-ம் வகுப்பிற்குப்பின் ஆங்கிலத்தில் சொல்லித் தரப்படுகின்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த 50 வருடங்களாக கிராமங்களில் ஆரம்ப கல்வி முதல் பள்ளி இறுதிப்படிப்பான 11 அல்லது 12 ஆவது பாடத்திட்டங்கள்  அனைத்துமே தமிழ வழி பாடமாக (அதாவது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் தமிழ் வழியிலும் கூடவே ஒரு ஆங்கில மொழி பாடமும்) சொல்லித்தரப்படுகின்றது. ஆனால் உயர் கல்விபாடத்திட்டமான தொழில் கல்விகள் (பி.இ,எம்பிபிஎஸ்) அனைத்துமே ஆங்கிலத்தில் சொல்லித்தரப்படுகின்றது .   பேர்தான் தமிழ்நாடு.

சுதந்திரம் பெற்று 65ஆண்டுகளாகிவிட்டது.தாய்மொழியில் உயர்கல்வி படிப்பைத் தொடர முடியவில்லை. இன்னும் அடிமையுணர்வில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்‘தமிழ்தான் என் உயிர்மூச்சு,நான் சுவாசிப்பதும் நேசிப்பதும் தமிழே’  என மக்களிடையே பேசி மயக்கி ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் உயர் கல்வி பாடத்திட்டங்களை தமிழில் மொழிபெயர்க்க எந்த முயர்ச்சியும் மேற் கொள்ளாதது,தமிழினத்திற்கு செய்த மாபெரும் துரோகம்.

திராவிட இனங்களான தமிழைத்தவிர மலையாள,தெலுங்கு மற்றும் கன்னடம் இனம் சார்ந்த மாணவர்கள் தமிழகத்தில் உயர்கல்வி தொடர முடியாது என்னும் ஒரே நோக்கத்தில் தமிழ் மாணவர்களை பற்றி கவலைப்படாமல்,கொஞ்சமும் மனசாட்சி அற்ற அரசியல் வாதிகள் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் திராவிட கட்சிகள் தமிழர் நலனை கருத்தில் கொள்ளாமல் நடிப்பைத்தொழிலாக கொண்டு வாழும் இனமான தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட இனத்து மேனா மினுக்கிகளின் அழகில் மயங்கி அவர்களிடையே தமிழனை அடகுவைத்துவிட்டனர்.   தமிழன் வளர்ச்சிக்கு பாடு பட்டதாக இன்றளவும் தெரியவில்லை.

இன்றய செய்தி தாள்களில்(17,18-04.2012) பொறியியல் படிப்பை தொடர முடியாமல் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொள்ளும் ஏழை கிராம மாணவர்கள் நிலை கண்டு நாமெல்லாம் கண்ணீர் வடிக்கும் நிலையில் உள்ளோம்.

கிராமத்தில் தமிழ் வழிப்பாடத்திட்டத்தில் முதல் மாணவராக திகழ்ந்த ஒரே காரணத்தால் அண்ணா பல்கலை வளாகத்தில் படிக்கும் வாய்ப்பினை பெற்று வகுப்பிற்குள் செல்லும் போதுதான் தெரிகிறது ‘தாம் மோசம் போய்விட்டோம்’ என்கிற உண்மை. ஆம் வகுப்பில் பேராசிரியர் பாடம் நடத்துவதும் ,நகரத்து மாணவர்கள் பழகும் விதமும் அதுவரை கிராமத்திலே பிறந்து ,கிராமத்திலே வளர்ந்து முதன்னிலை தேர்வான மாணவர்களுக்கு
                                    
அது ஒரு சவாலாகவே தோன்றுகிறது,தன்னம்பிக்கை கொண்ட கிராம மாணவர்களுக்கு. ஆனால் தைரியமற்ற கிராம மாணவர்களுக்கு (பேரு தைரிய லட்சுமி?)  தற்கொலை தவிர ஒன்றுமே தோன்றவில்லை.

அந்நிய மொழியான ஆங்கிலத்தை தமிழக கிராம மாணவர்களுக்கு பாட மொழியாக கொண்டுவருவது அரசாங்கத்தின் தோல்வி முயற்சியே.கிராம மக்களின் வாழ்க்கை முறைக்கும் நகர மக்களின் வாழ்க்கை முறைக்கும் வேறுபாடுகள் நிறைந்திருப்பது அரசியல்வாதிகளுக்கு புரியாதது ஒன்றுமில்லை. இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான  பாடத்திட்டம்  நடைமுறைக்கு ஒத்துவராது என்பது யாவரும் அறிந்ததே.  

 (Separate Urban and rural curriculum should be enacted) உண்மையிலேயே மக்கள்மீது அக்கரையுள்ள அரசு நகரத்து மாணவர்களுக்கும் கிராமத்து மணவர்களுக்கும் தனித்தனியான கல்வி இயக்குனரகம் உருவாக்கவேண்டும். கிராமத்து மாணவர்களை அரசு தத்து எடுக்க வேண்டும். தாய் மொழியில் உயர் கல்வி அளிக்க வேண்டும் அவர்களுக்கு வேலைவாய்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி என்பது தகுதி அடிப்படையில் தேர்வு செய்து பணியில் அமர்த்த வேண்டும். வயிற்றுப் பிழைப்புக்கு வருபவர்களையும் ஆசிரியர் தொழிலில் அதிக சம்பளம் வரும் என்றும் வட்டிக்கு பணத்தை விட்டு வருமானத்தை பெருக்கலாம் என்னும் எண்ணங் கொண்டவர்களை வேலைக்கு அமர்த்தகூடாது.கிராமத்து பள்ளிக்கூடங்களையும் ஆசிரியர்கள் பயிற்று திறனையும் மதிப்பீடு செய்ய வேண்டும் .இதில் அரசியல் தலையீடு கூடாது.

மற்றவர்களை  வாழவைத்து மகிழ்ச்சி கொள்ளும் தமிழரல்ல ,மற்ற இனத்தவரை  வரவேற்று வாழ மகிழ்ச்சி கொள்ளும் குணம் தமிழர் குருதியில் ஊரிப்போனது .இதனை மற்ற இனத்தவர் நன்கு புரிந்து கொண்டு பிற மாநில இனத்தவர்களும் தமிழகத்தில் குடியேறுவது மட்டுமல்ல தமிழன் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடும் கயவரை அடையாளம் காண அரசு வழிவகை செய்யவேண்டும். அதைதடுக்கும் முகத்தான் சட்டங்களை இயற்ற வேண்டும்.
தமிழர்களுக்கு  அரசுப் பணியிடங்கள் கிடைப்பதில்லை. (குறிப்பாக பெரும்பான்மை இனங்களான வன்னியர் மற்றும் ஆதி தமிழர்களுக்கு )
தமிழ்நாட்டில் அரசுத்துறை எப்படி செயல்படுகிறது?

இந்த இரு இனத்தவரும் அவர்களின் மொத்த மக்கட்தொகையில் 90% கிராமங்களில் வெய்யிலில் பாடுபடும் மக்கள். இந்த இனத்தவருக்கு அவர்களை யார் ஆண்டாலும் கவலை கிடையாது. அவர்களை கையை நம்பித்தான் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர்.                  
மீதமுள்ள 10% மக்களில் 9% மக்கள் நகரத்தில் பெட்டிக்கடை,காய்க்கனி கடை,சிறு அளவில் மளிகைக்கடை, நடை வண்டி வியாபாரம். பணக்கார வீடுகளில் பத்துப்பாத்திரம் தேய்த்தல்,அரசியல்வாதி வீடுகளில் அடியாட்களாக செயல்படுவது.  
                                       
மீதமுள்ள 1% மக்கள் சுயமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிழலில் உழைக்கும் வேலை கிடைக்கின்றது. 7 கோடி மக்களில் 2கோடி மக்கள் பிற மாநிலத்தவர். 5கோடி மக்களில் 1கோடி முன்னேறிய மற்றும் ஆதிக்க சாதிகள்.இவர்கள்தான் மீதமுள்ள 4கோடி தமிழர்களின் வேலை வாய்ப்பை நிர்னயிக்கின்றனர்.

4கோடி தமிழரில் வருடத்திற்கு 12-ம் வகுப்பு முதல்நிலை (தமிழ்வழிக்கல்வி)தேர்வு அடைந்த மாணவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் . அவர்களுக்கு உயர்தொழில் கல்வி படிக்க இடம் கிடைக்கின்றது. ஆங்கில வழி கல்வியை ஆரம்பத்திலிருந்து படிக்கும் நகர மாணவர்களிடையே போட்டி போட முடியாமல் திணறு கின்றனர். அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தைரிய லட்சுமி போன்ற கிராமத்து மாணவர்கள் உயர் தொழில் கல்வி படிப்பை ஆங்கிலத்தில் தொடர முடியாமல் மன அழுத்த நோய்க்கு ஆளாகும் மாணவர்களைப்பற்றி தமிழக அரசு கவலைப்படுமா? கவலைப்பட்டு என்ன நன்மை கிடைக்கப்போகிறது தமிழ் வழி கல்வி படித்த மாணவர்களுக்கு?  இதற்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க வேண்டும். அப்படி ஒரு அரசாங்கம் அமையுமா? என்பது கேள்விக்குறியே. தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும்.ஆளும் திராவிட கட்சிகளின் மறுமுகத்தை தமிழர்கள் என்று உணரப்போகின்றனர்?

No comments: